
கருத்து கணிப்புகளில் பெரும்பாலும் திமுக ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு என்றும்....
எடப்பாடி முதல்வர் என்றும் இன்னும் சில கருத்துக்கணிப்புகள் விஜய் முதல்வர் என்றும் சொல்கிறது.
சென்ற 2021 இல் வெளியான கருத்துக்கணிப்பை நாம் கவனித்தால் அனைத்து நிறுவனங்களும் திமுகவின் வெற்றியை சரியாக கனித்திருந்தாலும் இடங்களின் எண்ணிக்கையில் அவை மிகைப்படுத்தப்பட்டிருந்தன.
அதிமுக 40 இடங்களுக்கும் குறைவாகத்தான் வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது.
அதிமுக 75 இடங்களில் வெற்றி பெற்றது.
15 முதல் 20 தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பைஇழந்தது.
.இதற்கு உதாரணமாக திநகர், காட்பாடி ,திருமயம் தொகுதிகளை சொல்லலாம்.
இந்த முறை திமுக நம்புவது ஒவ்வொரு குடும்பத்திலும் யாராவது ஒரு பயனாளி திமுகவின் திட்டத்தால் பயனடைந்திருப்பார்.
திமுக ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறார்கள்.
குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பயனாளிகள் ஒரு கோடியே 33 லட்சம் பேர் தங்களுக்கு தான் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறார்கள்?
அரசியல் விமர்சகர்கள் அதிக வாக்களிப்பு சதவீதம் என்பது எப்போதும் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தது இல்லை 1967 இல் வாக்கு சதவீதம் அதிகமாக இருந்தது.
அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை இழந்து அண்ணா தலைமையிலான திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது என்கிறார்கள்.
இந்த முறை பெண்கள் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிக அளவு வாக்களித்து இருக்கிறார்கள் அவர்கள் விஜய் கட்சிக்கு வாக்களித்து இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்ற பேச்சும் இருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
தமிழக வெற்றி கழகம் அமைச்சரவைப் பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அக்கட்சியின் முக்கிய தலைவர் ஆதவ் அர்ஜுனா இது திமுக பார்த்த வேலை என்று குற்றம் சாட்டுகிறார்.
வேட்பாளர்களிடம் நேரில் அழைத்துப் பேசிய விஜய் 'வெற்றி பெற்ற பிறகு என்னை விட்டுப் போய்விட மாட்டீர்களே' என்று கேட்டிருக்கிறார்.
இதற்குக் காரணம் ஆம் ஆத்மிகட்சி மாநிலங்களவை எம்பிக்கள் ஏழு பேர் கொத்தாக பாஜகவில் இணைந்தது தான்.
இந்த முறை தொங்கு சட்டசபை தான் என்பதும் பேசும் பொருளாக இருக்கிறது.
அப்படி இருந்தால் திமுக ,காங்கிரஸ், விஜய் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பேரம் பேசி தேசிய ஜனநாயக கூட்டணி அணியில் சேர்க்கும் வேலையையும் அமித்ஷா பார்ப்பார் என்றும் பேசப்படுகிறது.
இதன் நடுவே தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆட்சியில் பங்கு கேட்போம் என்ற கோஷத்தை மீண்டும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.
விஜய் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உடனே பனையூருக்கு வந்து விடுங்கள் என்று உத்தரவு போட்டு இருக்கிறார்.
இது போதாது என்று அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள் திருச்செந்தூர், சீரடி பழனி என்று பிரார்த்தனை செய்ய கிளம்பி விட்டார்கள்.
நாலாம் தேதி அரசியல் களம் சூரியன் வெப்பத்தை விட அதிகளவு தகிக்கும் .
கல்தா யாருக்கு என்பது தான் எல்லா தலைவர்களுக்கும் கலக்கமாக இருக்கிறது.

Leave a comment
Upload