தொடர்கள்
கவர் ஸ்டோரி
புதிய போதை ..?விஜய்! -விகடகவியார்

20260401213617789.jpg

கடந்த ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் வெளியாகும் பதிவுகள் வீடியோக்களை பார்த்தால் நமக்கு அதிர்ச்சியும் அருவருப்பும் ஏற்படுகிறது.

விஜய் போதை கஞ்சா போதையை விட மோசமாகி கொண்டு இருக்கிறதோ என்ற பயம் நம்மை தொற்றிக் கொள்கிறது.

தேர்தல் முடிந்தவுடன் விஜய் ஆதரவு பெண்கள் வெளியிட்டுள்ள வீடியோக்கள் நம்மை இப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது.

பொதுவாக தமிழர்கள் கொஞ்சம் தலைவர்களை தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள் என்பதெல்லாம் தெரிந்தது தான்.

விஜய் மோகம் பெண்களை அவர்கள் தங்கள் வசம் இல்லை ஒருவித வசியத்தில் அவர்கள் மயங்கி கிடக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

ஒரு வீடியோவில் 'விஜய் விஜய்' என்று ஒரு பெண் கத்திக் கொண்டிருக்கிறார்

. 'விஜய் தான் அடுத்த சிஎம் எந்த கொம்பனாலும் அதை தடுக்க முடியாது'என்று உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம் அதை ரசிக்கிறது.

எம்.ஜி.ஆருக்கும் இந்த தாய்குலம் செண்டிமென்ட் இருந்தது. ஆனால் அது வேறு லெவலில் பாசமாக வெளிப்பட்டது.

இன்னொரு பெண் 'ஸ்டாலினோ எடப்பாடியே முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தால் எனது பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து நானும் செத்து விடுவேன்'என்று நா தழுக்க பேசுகிறார் .

இன்னொரு பெண் விஜய் கட்சி கொடி துப்பட்டாவை போட்டுக் கொண்டு கேவி.... கேவி அழுது கொண்டிருக்கிறாள்'ஆண்டவனே விஜய் வெற்றி பெறணும் ' என்று கதறி அழுகிறார்.

ஒரு கிறிஸ்துவ பெண் விஜய் தான் உண்மையான கிறிஸ்துவர்.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஓட்டு போடும் கிறிஸ்தவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் இல்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

.இன்னொரு குடும்பத்தில் 'அப்பா கட்டிலில் படித்துக் கொண்டிருக்க ஒரு மூன்று வயது பெண் குழந்தை 'நீ தளபதி அண்ணாவுக்கு ஓட்டு போடவில்லைனா நான் உன் கூட பேச மாட்டேன் ' என்று சொல்ல ' சரிமா உனக்காக போடறேன் என்று சொல்ல அதை அந்த தாயின் குழந்தை சிரித்தப்படியே செல்பேசியில் வீடியோ எடுக்கிறார் இதையெல்லாம் பார்க்கும் போது நமக்கு பயமாக இருக்கிறது.

பெண்களை வசியத்திற்கு உள்ளாக்கும் வித்தையை அரசியலுக்கு பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.

இப்படி அவர்களை தவறாக பயன்படுத்துவது அந்தக் குடும்பங்களுக்கு ஆபத்தாக முடியும்.

இதில் மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம் இது போன்ற வன்முறை வீடியோக்களை விஜய் நிச்சயம் பார்த்து இருப்பார்.

அவர் இதுவரை அதை கண்டிக்கவில்லை. அதற்கு பதில் '' என் குட்டி நண்பா நண்பீசுக்கு உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும் என்று குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரத்தில் கூட 'இந்த விஜய் மாமாவுக்காக உங்க வீட்டில் இருக்கிற உங்களுடைய அம்மா அப்பா சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா ,ஒவ்வொரு வீட்ல இருக்குற ஓட்டு போடும் வயசுல இருக்குற அண்ணா அக்கா எல்லோரிடமும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடச் சொல்லுங்கள்.

ஓட்டு போடாமல் உட்கார்ந்து இருந்தால் அவர்கள் காதில் அன்பாக விசில் ஊதி ஓட்டு போட வையுங்கள்.

விசிலுக்கு ஓட்டு போடற வரைக்கும் அவர்களை விடாதீர்கள் 'என்றெல்லாம் பேசி இருக்கிறார்

குழந்தைகளை தூண்டி பெற்றோருக்கு அழுத்தம் தருகிறார் விஜய் என்று கோவை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் என்பவர் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு தந்து இருக்கிறார்.

அந்த மனுவில் 'ஒரு தந்தையாக என் சொந்த குடும்பத்திலேயே இதன் கசப்பான விளைவை நான் எதிர் கொண்டுள்ளேன். விஜய்யின் பேச்சால்தூண்டப்பட்ட எனது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போட சொல்லி வற்புறுத்தினர்..நான் மறுத்தபோது அவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அழுகையிலும் உணவை தவிர்ப்பது போன்ற பிடிவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

இது ஒரு தந்தையாக எனக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதோடு,எதிர்கால மன நலன் மற்றும் ஒழுக்கத்தின் மீது மிகப்பெரிய அச்சுறுததலை உருவாக்கி உள்ளது.

மக்கள் பிரதிநிதி சட்டம் பிரிவு 123(2)ன் படி வாக்காளர்களின் முடிவில் குறுக்கிடும் வகையில் குழந்தைகளைப் பயன்படுத்தி உணர்ச்சி ரீதியான அழுத்தத்தை உருவாக்குவது ஊழல் நடைமுறையாகும்.

இது தவிர மேலும் பல பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் பாலகிருஷ்ணன். அதற்கு ஆதாரமாக விஜய் பேசிய பேச்சு வீடியோ பல குழந்தைகள் பெண்கள் பேசிய வீடியோக்களை கோவை ஆணையரிடம் தந்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இன்னொரு வலைதள பதிவு இன்னும் பயமுறுத்துகிறது.

பல இளம் குழந்தைகள் விஜய் மீது பெரும் பைத்தியம் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அவரை அடுத்த முதலமைச்சராக பார்க்கும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் மே நான்காம் தேதி முடிவு எப்படி இருக்கும் என்பது நம்மில் யாருக்கும் தெரியாது.

அந்த நாளில் குழந்தைகளை உன்னிப்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.

விஜய் முதலமைச்சராக முடியாவிட்டாலும் அது வாழ்க்கையில் முடிவல்ல என்று அவர்களுக்கு விளக்குங்கள். விஜயின் மீது அவர்கள் கொண்டுள்ள பைத்தியக்காரத்தனமான பற்று காரணமாக ஏமாற்றத்தை தாங்கும் பக்குவம் அவர்களுக்கு இருக்காது.

கவனமாக இருந்து அவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளை உன்னிப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார் அவர்.

தமிழ்நாட்டுக்கும் தமிழக அரசியலுக்கும் இது போன்ற தனி மனித போதை வேண்டாம்.

அது நாட்டுக்கும் வீட்டுக்கும் தீங்கு.

20260401214433122.jpeg