தொடர்கள்
கவர் ஸ்டோரி
கல்கத்தா யாருக்கு ??? விகடகவியார்

20260401214756683.jpeg

(அது கொல்கத்தா கல்கத்தா இல்லை என்று தெரியும். ஒரு எதுகை மோனைக்காகத் தான்... மே.வங்க தமிழ் வாசகர்கள் மன்னிக்கவும்.)

கல்கத்தா எங்களுக்கு தான் என்பதுதான் பிரதமர் மோடி அமித்ஷா இருவரின் பதிலாக இருக்கிறது.

. இருவரும் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு மம்தாதிர்ப்பு அலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இவர்கள் தவிர கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கட்சியினர் ஆகியோரும் மம்சாவை ஒரு சர்வாதிகாரி மம்தா ஆட்சி கொடுங்கோல் ஆட்சி என்று அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்கள்.

அவர்கள் எதிர்ப்பு பிரச்சாரமும் தற்சமயம் பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

மம்தா பானர்ஜிக்கும் பாரதிய ஜனதா பயம் வரத் தொடங்கி இருக்கிறது.

திருணாமுல் காங்கிரஸ் விரட்டி விரட்டிபாஜக வேட்பாளர்களைஅடித்து விரட்டுவதில் இருந்தேஅது நன்றாக தெரிகிறது

.74 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை தேர்தல் பணிக்காக மேற்குவங்கத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். பாதுகாப்பு பணியில் இருக்கும் அவர்களும் மம்தாவின் தொண்டர்களால் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

மம்தா பாஜக அராஜகம் என்று பேசுகிறார்.

மம்தாவைப் பொறுத்தவரை இந்த தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம் தான் .சில தினங்களுக்கு முன்பு வாக்கு என்னும் மையத்தில் முதலமைச்சர் முந்தா பானர்ஜி இரவுகளில் நான்கு மணி நேரம் தர்ணா நடத்தினார்.

அப்போது அவரே இது வாழ்வா? சாவா? போராட்டம் என்று தான் குறிப்பிட்டார்.

வாக்கு என்னும் பள்ளியில் மம்தா பானர்ஜி தர்ணா நடத்த காரணம் வாக்குப்பதிவு இயந்திரங்களி ல் மோசடியாக திருத்தம் செய்கிறார்கள்.முறைகேடு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மம்தா நேரில் சென்றார்.

கொட்டும் மழையிலும் இரவு நேரத்தில் நான்கு மணி நேரம் அந்த பள்ளிக்குள் அமர்ந்து போராட்டம் நடத்தினார் மம்தா.

தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இந்த புகார் அடிப்படை ஆதாரமற்றவை என்று மறுத்திருக்கிறது.

தேர்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் அந்த மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சி அமைக்கும்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்திக்கும் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்து இருக்கிறது.

கருத்துக் கணிப்பு வெளியிட்ட ஒரு அமைப்பு மம்தா பானர்ஜியே தோற்றுவிடுவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த கருத்துக்கணிப்புகளை மம்தா பானர்ஜி ஏற்கவில்லை.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பாஜக அலுவலகம் தந்த அறிக்கையைத்தான் தொலைக்காட்சிகள் கருத்துக்கணிப்புகளாக வெளியிட்டுள்ளன.

என் கட்சித் தொண்டர்களின் மன உறுதியை குலைக்கவே இப்படி ஒரு வேலையை பாஜக செய்திருக்கிறது.

நாங்கள் இரண்டில் ஒரு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம்என்று சொல்லி இருக்கிறார்.

இந்த முறை மேற்கு வங்கத்தில் 92 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து சாதனை படைத்திருக்கிறது.

சென்ற முறை எதிர்க்கட்சியாக அமர்ந்தது பாரதிய ஜனதா.

இந்த முறை ஆளுங்கட்சி என்ற இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.