தொடர்கள்
தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா- கண்ணாழ்வார்

20260401120956278.jpeg

திமுக ,அதிமுக அதிசய தேர்தலை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறது.

பிரதான கட்சிகள் விட்டமின் ப தாராளமாக விநியோகித்து திருமங்கலம் தேர்தல் பார்மூலாவை தங்கு தடையின்றி கொண்டு சேர்த்தது.

இதில் கையில் வடியும் தேனை நக்கி சுவைப்பது போல் பிரதான கட்சியின் பல தொகுதி நிர்வாகிகள் விட்டமின் ப வினை சுவைத்து கொண்டனர்.

20260401121153879.jpeg

திமுகவின் மாப்பிள்ளை சார் எப்படியாவது திமுக மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்று களத்தில் நேரடியாக இறங்கி விட்டு ரிசல்டு க்காக திக் திக் இதயத்துடன் காத்து இருக்கிறார்.

20260401121733973.jpeg

தமிழகமெங்கும் ஜோசப் விஜய் கட்சிக்கு நிறைய நடு நிலையாளர்கள் , இளைஞர்கள்,பெண்கள் வாக்கு அளித்தனர் என்ற தகவல் பிரதான கட்சிகளை பீதி அடைய வைத்துள்ளது.

கருத்து க(தி)ணிப்பினை திமுக,அதிமுக தலைமையும் நம்பவில்லை .

20260401123511561.jpeg

தொங்கு சட்டசபை அமைந்தால் அமித்ஷா ப்ளான் படி தமிழகம் பரப்பரப்பாக அடுத்த ஆட்சி நோக்கி நகரும்.

20260401121824358.jpeg

தமிழகத்தில் அடுத்த ஆட்சி தொங்கு சட்டசபையா(?) அல்லது பெரும்பான்மையுடன் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற பில்லியன் டாலர் கேள்விக்கு.......

20260401122416302.jpeg

மே 4 அதாவது த்ரிஷா பிறந்தநாள் அன்று விடை தெரியும் .

அதுவரை …..வூடு ஜுட்..!