தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட்பாய்

2026040201032378.jpeg

பிரியங்கா சோப்ரா

நானும் பிரியங்கா சோப்ராவும் நடித்த ஒரு படத்தில் முத்தக் காட்சியை நீக்குமாறு பிரியங்கா சோப்ரா சொன்னார். ஆனால், இயக்குனர் முடியாது என்று சொல்லிவிட்டார் என்கிறார் மூத்த நடிகர் அன்னு கபூர்.

பூஜா ஹெக்டே

2026040205570613.jpg

பிரபல பாலிவுட் நடிகர் ரோஹன் வினோத் மெஹாராவுடன் 35 வயது பூஜா ஹெக்டே காதல் என்று ஒரு பேச்சு வரத் தொடங்கி இருக்கிறது.

திரிஷா

"ஒரு மணி நேர தூக்கத்தை தொலைத்தால் அதிலிருந்து மீண்டு வர 4 நாட்கள் ஆகும். ஆனால், என் கணக்குப்படி 2062-இல் நான் நன்றாக உணருவேன்"என்று சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார். சிலர் கிண்டலாக 2062-ஆ அல்லது 2026-ஆ என்று கேட்டிருக்கிறார்கள் .அப்படி தூக்கத்தை தொலைக்கும் அளவுக்கு அவரை தொந்தரவு செய்தது யார் என்று தெரியவில்லை.

தமன்னா

தென்னிந்தியா தாண்டி இந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் தமன்னா சமீப காலமாக பட நிகழ்ச்சிகளுக்கு வித்தியாசமான உடைகள் அணிந்து கவனம் ஈர்த்து வருகிறார்.

சமீரா ரெட்டி

13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் சமீரா ரெட்டி. சஞ்சய் தத் நடிக்கும் ' ஆக்ரிசவால்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சமீரா ரெட்டி.

காஜல் அகர்வால்

விவசாயத்தில் பூச்சிக்கொல்லிகளன் அபாயம் சொல்லும் படம் 'தி இந்தியா ஸ்டோரி' இந்தப் படத்தின் நாயகி காஜல் அகர்வால்.

ருக்மணி வசந்த்

20260402060105295.jpg

எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி வேடத்தில் சாய் பல்லவி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனையால் இப்போது அந்த வேடத்தில் ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

நிதி அகர்வால்

"அழகு பராமரிப்புக்காக மட்டும் ஹீரோயின்கள் மாதம் 5 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கிறது" என்கிறார் நிதி அகர்வால்.

ஸ்ருதிஹாசன்

ராம்சரண் நடிக்கும் 'பெத்தி' என்ற பான் இந்தியா படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு அவருடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன் நடனம் ஆடியிருக்கிறார்.

சங்கர்

கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக சங்கரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

நித்யா மேனன்

"எனக்கு சுதந்திரம் மிகவும் முக்கியம். திருமணம் என்பது ஒரு வாழ்க்கையின் முக்கிய பகுதி அதுவே வாழ்க்கை அல்ல. உங்களுக்கு குழந்தைகள் வேண்டும் என்பதற்காக நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் "என்கிறார் நடிகை நித்யா மேனன்.

ஹன்சிகா

"தவறான உறவில் இருப்பது ஒரு துன்பம். அதிலிருந்து வெளியேறுவது நல்லது. நான் அந்த வேதனையில் இருந்து மீண்டு அமைதியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன் " என்கிறார் ஹன்சிகா.