
ஓட்டு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருக்க வேண்டும் வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை.
ஆமா விசில் சத்தம் எந்த அளவுக்கு கேட்டது என்று தெரிய வேண்டுமே ?
மேற்கு வங்கத்தில் 70 ஆயிரம் மத்தியப்படைகள் மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
அந்த மத்தியப்படைகளுக்கு பாதுகாப்பு தரப் போவது யாரு ?
போரில் புதிய ஆயுதத்தை பயன்படுத்துவோம் ஈரான் மிரட்டல்.
அமெரிக்க ராணுவத்தின் மீது கரப்பான் பூச்சி விடுவாங்க போல தெரியுது !!
தமிழக ஆட்சியில் பங்கு கேட்போம் காங்கிரஸ் மீண்டும் போர் கொடி.
இதற்கெல்லாம் அசர மாட்டார்கள் அறிவாலய புலிகள் !!
நடிகர் விஜய்யின் விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் மாற்றம்.
நீதிபதி பேரன் அழுத்தம் தந்து இருப்பாரோ ?
தமிழகத் தலைவர்களை சுற்றலில் விட்ட கருத்து கணிப்பு.
எல்லாமே நாலாம் தேதி வரை தான் !!
ஸ்டாலின் முதல்வராக நேர்த்திக்கடன் சிதம்பரத்தில் காங்கிரசார் மண் சோறு சாப்பிட்டனர்.
இதுதான் கூட்டணி விசுவாசம் என்று சொல்வார்கள் !!
ஜாதி மதமற்றவர் என்பதற்கு சான்று தேவையில்லை நீதிமன்றம்.
ஆமா நீங்க சலுகைகள் வேண்டாம் என்று சொல்லுங்கள் அது போதும் ?
செந்தில் பாலாஜி மீதான ட்ரான்ஸ்பார்மர் வழக்கு சிபிஐ விசாரணை நீதிமன்றம் உத்தரவு.
அண்ணன் இதற்கெல்லாம் அசர மாட்டார் , அமலாக்கத்துறை என்றால் மட்டும் தான் உச்சா போயிடுவார்.
உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை எந்த இயக்கம் வழங்கவில்லையோ அந்த இயக்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக தான் போகும் காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா.
வேற ஏதாவது முடிவு எடுத்து விட்டாரோ ?
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க எம்பிக்கள் போட்டா போட்டி.
தளபதி ஸ்டாலின் வாழ்க என்பதற்கு இவ்வளவு போட்டியா ?
ஓட்டு எண்ணிக்கை முடிவில் யார் ஆட்சி அமைப்பார் என்பது மக்கள்தான் முடிவு செய்வார் டாக்டர் ராமதாஸ் மகள் ஸ்ரீகாந்தி பேட்டி.
உங்களுக்கு எப்படி தெரிஞ்சது இந்த விஷயம் ?
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் முதல்வர் ஸ்டாலின் அளவுக்கு மற்ற கட்சியினர் ஓடி ஓடி உழைச்சீங்களா , மருது அழகுராஜ் அறிக்கை.
கூட்டணி கட்சிக்காரர்களை சொல்றாராம்.
திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது அமைச்சர் தங்கம் தென்னரசு.
பணப்பட்டுவாடாவின் போது வாக்காளர் முகத்தை பார்த்து தெரிஞ்சு இருப்பார் போல ?

Leave a comment
Upload