தொடர்கள்
விளையாட்டு
ஐ பி எல் சீசன் 19 (2026): வாரம் 5  – பால்கி

இன்னும் 4 வாரம் கிரிக்கெட் மீளா மேளா உண்டு. கோடை விடுமுறையை முழுதும் பயன்படுத்திவிட்டார்கள் பிசிசிஐ.

இது ஒரு விடுமுறை அவுட்டிங்காகி விட்டது. இந்தியாவில் தானே 13 நகரங்களில் இந்த மேட்சுகள் நடக்கின்றனவே. காலை முதல் மாலை வரை வேளியே சுற்றலாம். மாலை முதல் நள்ளிரவு வரை அசுர அடி மட்டை தட்டலப் பார்க்கலாம்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் வெங்க்சர்கார், ஐபிஎல்லில் பௌலர்களின் ஆதிக்கம் குறைந்து கொண்டே வருகிறது. பௌண்டரி கயிறை இன்னும் பத்தடிக்குப் பின் நகர்த்தணும். வர வர ஐபிஎல் பேட்டர்களோட ஆதிக்கத்துள் வந்துவிட்டது. கிரிக்கெட்டுக்கு தன் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பேட்டிங்க் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம். இது கிரிக்கெட்டுக்கு நலதே இல்லை என்று வருந்துகிறார் திலீப்.

2026040121410033.jpg

பின்ன என்னங்க?!? 25 ஏப்ரல் சனிக்கிழமை அன்று நடந்த இரண்டு மேட்சுகளில் 986 ரன்கள் எடுக்கப்பட்டன. 2 சென்சுரிகள், 6 அரை சென்சுரிகள், 59 சிச்சர்கள் என பாவம் பௌலர்கள்.

https://www.siasat.com/wp-content/uploads/2026/04/IPL-2026.jpg

கவாஸ்கரும் இது போன்ற ஒரு கருத்தை முன் வைக்கிறார்.

20260401214237194.jpg

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரில் போட்டிகளின் நீளம் அதிகரித்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருவதாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் கவலை தெரிவித்துள்ளார்.

டி20 வடிவம் மூன்று மணி நேரத்தில் முடிவடைய வேண்டிய நிலையில், சமீபத்திய மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி 4 மணி 22 நிமிடங்கள் நீண்டது. இதனால், போட்டிகளின் ஒழுங்குமுறை மற்றும் நேர கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கேப்டனாக இருப்பது ஒரு சாபம் என்று டெல்லி கேபிடல்ஸின் கே எல் ராஹுல் கூறுகிறார். மீட்டிங்க்குகள், மதிப்பாய்வு மீட்டிங்குகள் என ஓரே டார்ச்சர் என்றே குறிப்பிடும் அவர், கேப்டனையும் கோச்சையும் வெச்சி செய்வாங்க. அந்த பௌலருக்கு அந்த ஒவர் ஏன் கொடுத்தே என்றெல்லாம்…. அதிலும் மட்டையையே புடிக்காத ஒருத்தனுக்கு பதில் சொல்ற மாறி ஒரு கொடுமை தான் …ச்சே.

20260401214403522.jpg

பாவம் மணுஷன், அதான், ஒதுங்கிட்டாரோ? அந்த பளு அக்சர் படேல் மீது விழுந்திருக்கு.

வாரா வாரம் சூரியவாண்ஷியின் வைபவம் இல்லாமலா?

ஹைதராபாத்துடனான இந்த தொடரின் ஐபிஎல்லின் 36 ஆவது மேட்ச்சில் வைபவ் வெறும் 36 பந்துகளில் 12 சிக்சர்ஸ்ம் ஐந்து பௌண்டரிகளும் விளாசி 103 எடுத்ததன் மூலம் இந்த 15 வயது சிறுவன் உலகிலேயே பெரிய சாதனை. அதிலும் ஒரு இந்திய வீரர் எனும் போது பெருமை தானே.

38 ஆவது மேட்ச் – கொல்கத்தா Vs லக்னௌ சூபர் ஓவரில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

20260401214438865.jpg

கொல்கத்தா முதலில் ஆடி 20 ஓவரில் 155 ரன்கள் எடுத்தது. அதற்குப்பின் லக்னௌ ஆடி அதே 20 ஓவரில் 155 ரன்கள் எடுக்க மேட்ச் சூபர் ஓவர் நிலைக்குப் போனது.

இந்த சூப்பர் ஒவர் சங்கதி கொல்கத்தா டீமுக்கு ஐந்தாம் தடவை. லக்னௌக்கு இது தான் முதல் முறை.

கொல்கத்தா இதில் ஜெயித்தது.

இந்த சீசனில் 20 ஓவருக்குள் ஆல் அவுட் ஆகிய அணி என்று பெங்களூர் அணிக்குத் தான் அந்த பெருமை. 42ஆவது மேட்ச் பெங்களூருக்கும் குஜராத்துக்கிமிடையே நடந்தது. அதஇல் தான் முதலில் ஆட களமிறங்கிய பெங்களூரு 19.2 ஒவரிலேயே 155 ரன்கள் எடுத்து அனைத்து வீகெட்டுகளையும் இழந்தது.

20260401214506841.jpg

30.04.2026 வ்ரை நடந்து முடிந்த அட்டங்களில்

425 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் வாங்கியிருப்பவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிஷேக் ஷர்மா.

20260401214716325.jpg

17 விக்கெட்டுகள் எடுத்து பர்ப்பிள் கேப் வாங்கியிருப்பவர் பெங்குளூரின் புவனேஷ்வர் குமார்.

20260401214911512.jpg

98 டாட் பந்துகள் போட்டு அசத்துபவர் குஜராத்தின் முகமத் சிராஜ்.

20260401215052966.jpg