தொடர்கள்
வலையங்கம்
இது நிச்சயம் துரோகம் தான்

20260402004932539.jpeg

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை ஏழு பேர் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு அதிகமாக இருப்பதால் கட்சித் தாவல் தடை சட்டத்தில் வராமல் கட்சியில் பிளவு என்ற போர்வையின் கீழ் அவர்கள் பதவி பாதுகாக்கப்பட்டுள்ளது. எந்த வழிமுறையாக இருந்தாலும் கட்சி தாவல் என்பது மன்னிக்க முடியாத துரோகம். கட்சி அவர்களை நம்பி தான் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் அவர்களை மாநிலங்களவை உறுப்பினர்களாக ஆக்கினார்கள். அவர்களுக்கு கட்சி பிடிக்கவில்லை என்றால் தார்மீக அடிப்படையில் கட்சி தந்த மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்து விட்டு அவர்கள் விரும்பும் கட்சியில் இணைந்து இருக்க வேண்டும்., இந்த சுயநலவாதிகள் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்யாமல் பாரதிய ஜனதாவில் இணைந்திருக்கிறார்கள். மாற்றுக் கட்சிக்கு விலை போகக்கூடாது என்பதால்தான் கட்சித்தாவல் தடை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தை நீர்த்துப்போக்கும் அளவுக்கு மூன்றில் இரண்டு பங்கு என்ற பிரிவு கட்சித் தாவல் தடை சட்டத்தையே கொச்சைப்படுத்துவதாக அமைந்து விட்டது. எனவே அந்த பிரிவை நீக்க வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும்.