தொடர்கள்
அனுபவம்
நினைவலைகள் : எழுத்தாளர் லக்ஷ்மியுடன் - அம்பத்தூர் ரங்கராஜன்

2026051022152741.jpg

திரிபுர சுந்தரி [எ] லட்சுமி!

ஆனந்த விகடன் தொடரில் வெளியான மிதிலா விலாஸ் மூலமாக அவரின் ரசிகனானேன்.

தொட்டியம் தாலுக்காவில் இருந்து சென்னைக்கு வந்த இவர் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மாணவி.

இரண்டாம் உலகப்போர் காரணமாகப் பொருளாதார சிக்கல். தந்தை படிக்க வேண்டாம் என்று சொன்ன நிலையில் விகடன் அதிபரை நேரில் சந்தித்து டாக்டர் படிப்பை சொல்ல, விகடன் அதிபர் லஷ்மியை எழுத அனுமதித்தது பெரிய விஷயம். கம்பனுக்கு ஒரு சடகோபன்போல லஷ்மிக்கு வாசன்.

தொடர்ந்து எழுதினார்.

திருமண வாழ்க்கை தென்னாப்பிரிக்காவில் வாழ்க்கை. கணவர் மரணம். இருந்தாலும் கணவர் மறைவுக்கு பின்னும் தென்னாப்பிரிக்காவில் வாசம்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பி சென்னை வாசம்.

என்னைப்போன்ற வாசகர்களுக்கான நாவல் கதைகள்.

ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தேன்.

அதன் பிறகும் நான் அடிக்கடி அவரை சந்தித்தேன். என் திருமணத்திற்கும் அழைத்தேன். வர இயலாத சூழ்நிலை என எனக்குகடிதம் எழுதினார். அந்த கடிதம் இல்லை. ஆனால் வாங்கிய ஆட்டோகிராப் இருக்கிறது.

20260510221647490.jpg

மறக்காம முடியாத எழுத்தாளர் லஷ்மி.

பிறந்த தினம் : 23/03/1921.

மறைந்த தினம் : 07/01/1987.