தொடர்கள்
கதை
பத்தாம் நம்பர் வீடு! -முனைவர் என். பத்ரி

20260513085909614.jpeg

நான் என் பாரியாளுடன் அந்தப் பத்தாம் நம்பர் வீட்டிற்குள் நுழைந்தேன். உள்ளேபோன உடனே எதிரே வந்த மாமியிடம்,’கேட்ட உடனே ரொம்ப கஷ்டமாக இருந்தது’ என்றுச்சொல்லத் தொடங்கினேன்.அதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. வீடேமிகவும் பரபரப்பாக இருந்தது.

’கொஞ்சம் ஓரமா உட்காருங்கோ. மாப்பிள்ளையுடன் பொன்னு முதல்முறையா ஆத்துக்கு வருகிறாள்.ஆரத்தி சுத்தி அழைத்து வருகிறேன்’ சொல்லிக் கொண்டே வாசலுக்கு போனாள்.

மாப்பிள்ளையும் பெண்ணும் சற்று நேரத்தில் உள்ளே வந்தார்கள். பார்க்கஇலட்சனமாக இருந்தார்கள்.அவர்களுக்கு காஃபி கொடுத்து ஓர் அறையைக் காட்டி ஓய்வுஎடுத்துக் கொள்ளச் சொன்னார்கள். பிறகு வந்த அந்த பட்டு மாமி (அப்படித்தான் கூடஇருந்தவர்கள் அவரை அழைத்தார்கள்.)எங்களுக்கும் காஃபி கொடுத்தார்கள்.அருமையானசுவை. இன்னொரு கப் கேட்கலாமா?என் மைண்ட் வாய்ஸ்ஸைக் கேட்ட என் மனைவியின்முறைத்தாள். நான் மனம் மாறிப் போனேன்.

பட்டு மாமி நெற்றியில் குங்குமமும் தலையில் பூவுமாக இருந்தார். பின்னாடியேஅவருடைய ஆத்துக்காரர் ராஜாவும் வந்தார்.நான் மிகவும் திடுக்கிட்டுப்போனேன்.

’வாங்கோ’என்று சொல்லியபடியே என்னை ஏனோ சற்று உற்றுப் பார்த்தார்.​பின்னாடியே வந்த பெரியவர் ஒருவர்,’ஓ என்னோட படிச்ச அம்பியா? நீ திருச்சியில்இருக்கிறேன்’ என்று சொல்லியிருந்தாய்.

’எப்பொழுது நீ சென்னைக்கு வந்தாய்?’ என்று என்னை கேட்டார். ‘நான் அம்பியும்இல்லை.என் ஊர் திருச்சியும் இல்லை.’ இதை நான் எப்படி அவரிடம் சொல்லுவது.

என் மனைவிதான் உதவிக்கு வந்தாள். உங்களுடைய பெண்ணின்கல்யாணத்துக்குத்தான் வர முடியவில்லை. அதனால் கல்யாணம் விசாரிச்சிட்டுப் போகலாம்’னுவந்தோம் என்று சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பதில் சொன்னாள்.

நானும் கொஞ்சம்,’ஆமாம்’ போட்டு விட்டு, அசடு வழிந்தேன். புது மணத்தம்பதிகள் ஓய்வில்இருப்பதாகச் சொன்னார்கள். நாங்களும், ‘பரவாயில்லை ‘பேருக்கு என்றுச் சொல்லிசமாளித்தோம். ஒரு வழியாக அவர் கொடுத்த காஃபியைக் குடித்து விட்டு தாம்பூலப்பையைபெற்றுக் கொண்டு கிளம்பினோம்.

வெளியே வந்த எனக்கு வியர்த்துக் கொட்டியது.வீட்டு எண்ணை திரும்ப ஒரு முறைபார்த்தேன்.பத்தாம் நம்பர்தான்.சோதனையாக பத்ரிக்கை என்னுடைய கையில்இல்லை.அநியாயமாக எனது மனப்பாடம் சதி செய்து விட்டது. வயதானதால் வந்து சேர்ந்தமறதி எனபதை உணர்ந்தேன்.

வரும்போது ஆட்டோவில் பக்கத்தில் இருந்த பஸ் ஸ்டாண்டைபார்த்தேன்.’போகும்போது பஸ்ஸிலேயே வீட்டுக்கு போய் விடலாம்.ஓலாக் காரனுக்கு ஓதிவிட்டது போதும்’ என்று நினைத்துக் கொண்டே விரைந்து நடக்கத் தொடங்கினேன். என்மனைவியின் பருத்த உடல் அவளை வேகமாக நடக்கவிடவில்லை. ஏதோ என்னைத் திட்டிக்கொண்டு வருகிறாள் என்பதை மட்டும் புரிந்துக் கொண்டேன். வழக்கம் போல் அமைதிகாத்தேன்

வரும் வழியில் மற்றொரு பத்தாம் நம்பர் வீடு கண்ணில் பதிந்தது. அது புதிய பத்தாம் நம்பர்வீடு. நான் ஏற்கெனவே சென்றது பழைய பத்தாம் நம்பர் வீடு போல இருக்கிறது. வீட்டு வாசலில்இரண்டு ஈரமான பென்ச்சுகளும், சில நாற்காலிகளும் இருந்தன.இறப்பு வீட்டின் சாயல்இருந்தது. வீட்டு வாசலில் இருந்த இரங்கல் அஞ்சலி போஸ்டர் அதை உறுதிப்படுத்தியது.

அங்குதான் நேற்று என்னுடைய வகுப்புத் தோழன் மோகன் (78) காலமாகியிருந்தான்.நான்போயிருக்க வேண்டிய வீடு இதுதான்.ஏன் தான் வீட்டுக்கெல்லாம் இப்படி பழைய எண்,புதியஎண்களை குழப்புகிறார்களோ? மனதில் அரசுடன் கொஞ்சம் ரெளத்திரம் பழகினேன்.

ஒவ்வொரு காலையும் எனக்கு,’ குட் மார்னிங்’ அனுப்புவான். நேற்றுஅனுப்பவில்லை.இனிமேல் வராது என்பது உறுதியாகி விட்டது. அடிக்கடி ஃபோனில் பேசுவான் நேத்து ஊரில் இல்லாததால் வர முடியவில்லை. இன்று நேரே அவருடைய மனைவியைப்பார்த்து ஆறுதல் சொல்ல வந்தேன் இங்கு ஒரு சோகச் செய்தி. அங்கு ஒரு சுகமான செய்தி.கல்யாண வீட்டிற்கு சென்று விட்டு இழவு வீட்டுக்கு போக மனம் அனுமதிக்கவில்லை.பஸ் ஏறி மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தேன்.