
''என் இனிய தமிழ் மக்களே...''
உந்தன் கரகரத்த குரலில்
தேன் கற்கண்டாய் இனிக்கும் சொற்கள்...!
சுகாதார ஆய்வாளராய்...
அரும் பணியாற்றி...
மக்களின் உடல் நலனை பாதுகாத்ததோடு
மக்களின் மன நலனையும் பாதுகாக்க
திரை உலக பயணம் தொடங்கினீர்...!
'இருளும் ஒளியும்'-
திரைப்படத்தில் உதவி இயக்குனராய்
வலம் வந்தீர்...
'தலைப்பிரசவத்தில்'...
வளர்ந்து நின்றீர்....
'அதிர்ஷ்டம் அழைக்கிறது'-
மூன்றாம் படத்தை முடித்தவுடன்...
'பதினாறு வயதினிலே'-
இயக்குனராய் உயர்ந்து நின்றீர்....!
'சினிமா' என்னும் கலை ஓவியத்தில்...
கருப்பு எனும் நிறத்திற்கும்...
நீங்கா நிறைவான பங்கு உண்டென..
உந்தன் தூரிகையில் தொட்டு...
உன்னதமாய் தீட்டியவரே....
பகட்டான அறைகளிலிருந்த...
படத்தளத்தினை -
பட்டிக்காடுகளிலும்...
பாங்காய் அமைத்தவரே....
இயக்க உலகினில்...
இமயமாய் உயர்ந்தவரே...
கலை - கதை - கதாபாத்திரங்களால்...
காவியங்கள் படைத்தவரே....
அல்லி நகரத்தின்...
அலங்கார அணிகலனாய் அமைந்தவரே....
ஓயாமல் உழைத்திட்ட ...
உங்களைச் சுற்றிலும் ...
பத்ம விருதுகளும்...
தேசிய - மாநில விருதுகளும்...
மகுடமாய்...பண்பான பாச உறவுகளும்...
அனைத்தையும் விட்டுவிட்டு
எங்கு சென்றீர்....
எங்கள் செல்ல சாமியே...
எங்கள் சின்னசாமியே...
ஓய்வெடுக்கவா ...?
உங்கள் மகன் மனோஜை காண வா...?
மீண்டும் எங்களை காண வாருங்கள்....
மகத்தான கலை படைப்புகளை தாருங்கள்...
எங்கள் கண்களை
கண்ணீரால் கைது செய்யாமல் ....
எங்களை
பூங்காற்றால் தாலாட்ட ...
திரும்பவும் வாருங்கள்...!
தொடர்கள்
கவிதை

Leave a comment
Upload