ஆண்ட்ரியா

"சில நடிகர், நடிகையரின் விவாகரத்துக்களை பார்த்த பிறகு திருமண மீதான ஆர்வமே எனக்கு போய்விட்டது" என்கிறார் நடிகை ஆண்ட்ரியா.
கீர்த்தி சுரேஷ்

மீண்டும் பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு பயோபிக் கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார் கீர்த்தி சுரேஷ்.
ஜெயிலர் 2
ரஜினி நடித்த படம் ஜெயிலர் 2 கிளைமாக்ஸ் காட்சி திருப்தி இல்லாததால் மீண்டும் காட்சிகளை மாற்றி படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
மமிதா பைஜு

"நடிகர்களுடன் கொஞ்சம் நெருங்கி பழகினால் உடனே கிசுகிசு எழுதி விடுகிறார்கள். இதனால் மன நிம்மதி போய்விடும் என்பதால் நான் நடிகர்களுடன் அளவாகத்தான் பழகுவேன் நட்பு வளர்ப்பதில்லை "என்கிறார் நடிகை மமீதா பைஜூ.
திரிஷா

பொன்னியன் செல்வன் போன்ற சரித்திர கதைகளில் நடிப்பதற்கு 25 சதவீதம் குறைவாக தந்தாலும் நடிக்க தயார் என்கிறார் நடிகை திரிஷா.
கார்த்திக் சுப்புராஜ்
இப்போது இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் நடித்து வரும் நிலையில் கார்த்திக் சுப்புராஜுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது. அவரும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன் நடித்த இணையதளத்தில் வெளியான மேட் இன் கொரியா என்ற படம் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது. இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவே தனக்கு விருப்பம் என்கிறார் நடிகை.
நயன்தாரா

மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்கியது சுந்தர் சி. தற்போது அந்த படத்தின் மூன்றாம் பாகத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருக்கிறார். இதற்கு நயன்தாராவும் ஓகே சொல்லிவிட்டார்.
பூஜா ஹெக்டே

தென்னிந்திய சினிமாக்களில் ஓரளவு சாதனை படைத்திருந்தாலும் இந்தியில் வெற்றிக்காக கடும் போராட்டம் நடத்தி வருகிறார் பூஜா ஹெக்டே.
ராஷ்மிகா

"முதல் முறையாக நட்பு, காதல், கொண்டாட்டம் நிறைந்த கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதால் இது நமக்கு சரியாக இருக்குமா என்று சந்தேகம் இருந்தது. இருப்பினும் ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த சவாலை ஏற்றுக் கொண்டு காக்டெயில்-2 படத்தில் நடித்தேன் "என்கிறார் ரஷ்மிகா.
ஆர்யா
ஆர்யாவின் நாற்பதாவது படத்தில் அவருக்கு ஜோடியாக நிகிலா விமல் வைஷ்ணவி சைதன்யா என்று இரண்டு நாயகிகள்.
முந்தினார்
அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயர் நயன்தாராவுக்கு இருந்தது. அவரது சம்பளம் 9 கோடி. 2026-இல் ராஷ்மிகா சம்பளம் 15 கோடி இப்போது நயன்தாராவை பின்னுக்கு தள்ளிவிட்டார் நடிகை ராஷ்மிகா.
நித்யா மேனன்

"இளம் நடிகைகள் தங்கள் கேரக்டரில் மனித மாண்பை மீறினால் வேண்டாம் என்று தைரியமாக சொல்லுங்கள்"என்கிறார் நடிகை நித்யா மேனன்.

Leave a comment
Upload