
இந்தியா கூட்டணி கூட்டம் டெல்லியில் இன்று கூடியது.
காங்கிரஸ் கட்சி பற்றி உதயநிதி போஸ்டர் படிச்சீங்க தானே ?
உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெறும் ஆர். எஸ்.பாரதி ஆசைப்பட்டால் மீசையை எடுக்கட்டும் அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பதிலடி.
விஜய் அங்கிள் இருக்க பயமேன் !!
தமிழகத்தில் புதிய வக்பு சட்டம் அமல்படுத்தப்படாது அமைச்சர் ஷாஜகான் பேட்டி.
திராவிடம் மாடல் அரசு தான் தொடருது போல தெரியுது !!
பாஜக தலைவர்கள் முக்கிய ஆலோசனை கட்சியை பலப்படுத்த முடிவு.
முதல்ல டெபாசிட் தக்க வைக்க என்ன பண்ணலாம்னு பாருங்க !!
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி முடிந்து விட்டது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம் பேட்டி.
அதுதான் எல்லாருக்கும் ஒரு மாசம் முன்னாடியே தெரியுமே !!
வன்னியர் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.
கணக்கெடுப்பு வச்சு கூடுதல் தொகுதி கேட்க திட்டம் ஆனா ஜெயிக்க மாட்டேங்குது டாக்டர் !!
கொண்ட கொள்கைக்காக உறுதியோடு உழைக்கும் செயல்வீரர் பனையூர் பாபு திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம்.
ஆமா அதனால்தான் கட்சி மாறி இருக்கிறார் !!
தமிழக வெற்றிக்கழக ஆட்சி மூன்று மாதங்களாவது தாங்குமா திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி.
எடப்பாடி ஆட்சி பற்றி கூட இப்படித்தான் சொன்னீங்க !!
திமுக போட்ட பிச்சையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் ராஜினாமா செய்வார்களா ? சீமான் கேள்வி.
அவங்க ராஜினாமா பண்ணி எலக்சன் வந்தாலும் உங்களுக்கு ஒன்னும்யூஸ் இல்ல !!
வெளி மாநில தொழிலாளர்கள் பற்றாக்குறை தமிழகத்தில் கட்டுமான பணிகள் பாதிப்பு.
ஆக தமிழ்நாட்டுக்காரங்க யாரும் வேலை செய்வது இல்லை, இலவசத்தை வாங்கி சாப்பிட்டு தூங்குறாங்க !!
பாஜகவில் இருந்து பிரிந்து சென்றவர் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்.
அண்ணாமலை பிரிந்து சென்றார் என்று உங்களுக்கு யார் சொன்னது ?
கூட்டணி கட்சிகளுக்கு திமுக உரிய அங்கீகாரம் தரவில்லை அமைச்சர் ராஜ் மோகன்.
தேர்தல் நிதி, மாநிலங்களவை உறுப்பினர் இதற்கெல்லாம் என்ன பெயர் ?
கூட்டணி தர்மத்துக்காக வாங்கிய கமிஷனை வெளியில் சொல்லவில்லை. மாணிக்கம் தாகூர்.
இப்ப தமிழக வெற்றிக்கழக தர்மத்தை காப்பாற்ற வேண்டும் நீங்க இப்ப அந்த வேலை இருக்கு !!
மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையில் திமுகவுடன் சேர்ந்து போராட தயார் கம்யூனிஸ்ட் தலைவர் பெ.சண்முகம்.
அதாவது பாஜகவை எதிர்த்து இப்படி தெளிவா சொல்லலாம் இல்ல !!

Leave a comment
Upload