தொடர்கள்
விகடகவியார்
சி பி எஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் சர்ச்சை

20260513084248569.jpeg

இந்த முறை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரி பார்க்க திரையில் மதிப்பீடும் முறையை சிபிஎஸ்இ பயன்படுத்தியது. ஆனால், இப்போது அதுவே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. "ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம் ' சுருக்கமாக சொன்னால் ஓ எஸ் எம் என்பது. இந்த முறையில் தான் இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டது. இது ஒரு டிஜிட்டல் மதிப்பீட்டு செயல்முறை. இதன் மூலம் விடைத்தாள்கள் விரைவாக திருத்த முடியும் பிழைகள் இருக்காது என்று நம்பியது சி பி எஸ் இ தேர்வு ஆணையம்.

ஆனால், தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்கள் விடைத்தாள்களை கேட்டபோதுதான் ஓ எஸ் எம் எனப்படும் ' ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் சிஸ்டம்' எந்த அளவுக்கு சொதப்பியிருக்கிறது என்பது தெரிந்தது. கிட்டத்தட்ட ஆறு லட்சம் மாணவர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்களது விடைத்தாள்களை கேட்டபோது கூட அவர்கள் சுதாரித்துக் கொள்ளவில்லை என்பதும் உண்மை. ஆரம்பத்தில் இது ஒரு பெரிய பிரச்சினையாகவே அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பல விடைத்தாள்கள் மங்கலாக அல்லது எதுவுமே இல்லாமல் வெறுமையாக அல்லது மாற்றப்பட்டிருந்தது என்பதை மாணவர்கள் கண்டுபிடித்து சமூக ஊடகங்களும் வாயிலாக இந்த விவகாரத்தை மாணவர்கள் வெளியில் கொண்டு வந்தார்கள்.

குறிப்பாக மூன்று மாணவர்கள் இது மிகவும் கவனிக்க வேண்டிய பிரச்சனை, சி பி எஸ் இ மாணவர்கள் விஷயத்தில் மிகவும் அலட்சியமாக இருந்திருக்கிறது என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தார்கள்.

18 வயதான சர்தக் சித்தாந்த், சி பி எஸ் இ ஓ எஸ் எம் முறையில் செய்த குளருபடிகளை 31 பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆதாரங்களுடன் பட்டியல் போட்டு விளக்கினார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த அந்த மாணவர் தனது கோடிங் மற்றும் ஆராய்ச்சி திறன்களை பயன்படுத்தி சி பி எஸ் இ விடைத்தாள் மதிப்பீட்டு முறையான ஓ எஸ் எம் தொடர்புடைய டெண்டர் நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஆதாரங்களுடன் விளக்கினார். இது தவிர தனது வலைப்பதிவில் சி பி எஸ் இ டெண்டர் விதிகளை தொடர்ச்சியாக மாற்றியது விடைத்தாள் மதிப்பீடும் ஒப்பந்தத்தை ஒரு சர்ச்சைக்குரிய நிறுவனத்திற்கு வழங்கியது பற்றி ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். குறிப்பாக ஹைதராபாத் சேர்ந்த 'கோஎம்ப்எடுடெக் பிரைவேட் லிமிடெட் ' நிறுவனத்திற்கு வழங்கும் வகையில்,அடுத்தடுத்து மூன்று டெண்டர் சுற்றுகளில் தகுதி மற்றும் தொழில்நுட்ப தேவைகள் மாற்றப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார் . அந்த கட்டுரையில் மாணவர் .அந்த நிறுவனத்துக்கு தான் டெண்டர் என்று முடிவு செய்து சிபிஎஸ்இ செயல்பட்டது என்கிறார் அந்த மாணவர். ஒரு பெரிய அரசு நிறுவனம் தனது விதிகளை மாற்றி மாணவர்களின் எதிர்காலத்துடன் எந்த அளவுக்கு விளையாடியது என்பதை அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.இதை வெறும் குற்றச்சாட்டாக சர்தக் சொல்லாமல் ஒரு டெண்டர் கால வரிசையை தயாரித்து வெளியிட்டு இருந்தார். அஜித் தங்களுக்கு விருப்பமான நிறுவனத்துக்கு டெண்டரை வழங்குவதற்காக எந்த அளவுக்கு முறைகேடுகள் செய்யப்பட்டன என்பதை விளக்கி இருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட அந்த நிறுவனமும் சி பி எஸ் இ நிர்வாகமும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தன. அப்போதுதான் ஆனாலும் அந்த மாணவரின் வலைப்பதிவு வைரலானது. காங்கிரஸ் எம்பி திக் விஜய் சிங் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு அவரை நேரில் அழைத்து விசாரித்தது. நாடாளுமன்ற குழுவின் முன்னிலையில் தனது கருத்துக்கள் சரி என்பதற்கான ஆதாரங்களை அவர் குறிப்பிட்டார். இந்த கூட்டத்திற்கு வருமாறு சி பி எஸ் இ தலைவர் ராகுல் சிங், மத்திய பள்ளி கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார், இது தவிர கல்வி அமைச்சகம் உயர் அதிகாரிகளும் இந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். கூட்டம் முடிந்த சில மணி நேரங்களிலேயே சிபிஎஸ்சி தலைவர் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டனர். ஓ எஸ் எம் தொடர்பாக விசாரிக்க ஒரு நபர் குழுவையும் அமைத்தது மத்திய அரசு.

இதன் நடுவே சி பி எஸ் இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவரான வேதாந்த் ஸ்ரீ வஸ்தாவின் இயற்பியல் விடைத்தாள் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களிலும் இதுப்பற்றி பரவலாக விவாதம் நடந்தது .மறு மதிப்பீட்டு செயல் முறையின் ஒரு பகுதியாகத் தான் பதிவிறக்கம் செய்த ஸ்கேன் விடைத்தாள் நகல் தன்னுடையது அல்ல என்றும் வேறு ஒருவருடையது என்று வேதாந்த் குற்றம் சாட்டினார். ஆரம்பத்தில் அவரை கடுமையாக கேலி செய்தார்கள். ஆனால் சிபிஎஸ்இ தவறு நடந்து விட்டது என்று ஒப்புக்கொண்டு அவருக்கு சரியான விடைத்தாள் அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தது. இந்த மாணவரை ராகுல் காந்தி சந்தித்தார் என்பதற்காக இவர் தேசத்துரோகி பாகிஸ்தானியர் என்றெல்லாம் கூட பாரதிய ஜனதா விமர்சனம் செய்தது. ஆனால் சிபிஎஸ்இ தவறுதான் என்று ஒப்புக்கொண்டது .

விடைத்தாள் சர்ச்சை பெரிதானதும் தற்சமயம் 11 லட்சத்துக்கு அதிகமான விடைத்தார்கள் மறு சரி பார்ப்பு கோரிக்கை விண்ணப்பம் வந்துள்ளது. ஆனால், சி பி எஸ் இ-யின் போர்ட்டலில் வெறும் 3.8 லட்சம் விடைத்தாள்களை விவரங்கள் மட்டுமே உள்ளீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சிகரமான தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. அதையும் சரி செய்யும் வேலைகளில் சிபிஎஸ்இ நிர்வாகம் இறங்கி இருக்கிறது.