
தொடர்ந்து 4,398 நாட்கள் தொடர் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை ஜூன் 10, 2026 அன்று இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோதி முறியடித்தார்.
பண்டிட் ஜவஹர்லால் நேருவின் சாதனை, மே 13, 1952 முதல் மே 27, 1964 வரை, மொத்தம் 4,398 நாட்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக இருந்திருக்கிறார்.
இத்துடன் மோதி குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த 4,610 தொடர் நாட்கள் காலத்தையும் சேர்த்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவனாக தொடர்ந்து 25 வருடங்களுக்கு மேலாக இருக்கிறார் என்பது உலக சாதனை தான்.
'முதலில் தேசம்' (Nation First) என்பது இவரது மூச்சு. உள்நாட்டு தயாரிப்புக்குக் குரல் கொடுப்பதும் இவரது பெருமை. அது அவரது அனைத்து செயல்களிலும் பிரதிபலிக்கும்.
மொழி, கலாச்சாரம், மதம் மற்றும் புவியியல் ரீதியாகப் பெரும் பன்முகத்தன்மை கொண்ட, 140 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இந்தியாவில், நிர்வாகத்தின் பரப்பளவு மற்றும் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொள்ளும்போது பிரதமர் நரேந்திர மோடியின் இந்த சாதனை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.
பல உலக நாடுகள் அரசியல் கொந்தளிப்பு, அடிக்கடி மாறும் அரசுகள் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றை எதிர்கொண்ட வேளையில், இந்தியா தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்தில் தொடர்ச்சியைப் பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், தொடர்ந்து மூன்று முறை மக்கள் வழங்கிய ஆணைகள் மூலம், அவர் மீதான மக்களின் நிலையான நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது.

எந்தவொரு அரசியல் குடும்பப் பின்னணியின் ஆதரவும் இன்றி, சாதாரண சமூக-பொருளாதாரச் சூழலிலிருந்து உயரிய ஜனநாயகப் பதவிக்கு உயர்ந்த பிரதமர் மோடியின் பயணம், இந்தியாவின் ஜனநாயக அமைப்பு வழங்கும் வாய்ப்புகள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகக் கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோதியை இந்த சாதனை குறித்து இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம், ஜெர்மனியின் கூட்டாட்சி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வாழ்த்தியுள்ளனர்

ஜி-20 தலைமைத்துவம்; வெற்றுகரமாக நடத்தப்பட்ட உலகளாவிய மாநாடு.
முன்னணிப் பொருளாதார நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்
வளர்ச்சி, தொழில்நுட்பம், பருவநிலை நடவடிக்கை மற்றும் 'குளோபல் சவுத்' (Global South) எனப்படும் வளரும் நாடுகளின் முன்னுரிமைகள் உள்ளிட்ட உலகளாவிய விவகாரங்களில் அதிக செல்வாக்கு பெற்ற குரலாக உருவெடுத்தது
85க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் விற்றல்.
உலகிலேயே upi தான் பெரிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை அமைப்பாகும்.
செல்போன்கள் இறக்குமதி செய்து வந்த நிலை போயிங்கேயே 33 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில் 100 கோடிக்கும் மேலாக இன்டர்னெட் பயனாளிகள் உள்ளனர்.
160க்கும் மேற்பட்ட ஏர்போர்ட்டுகள் உள்ளன.
இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) சூழல் அமைப்பாகவும், சந்திரயான் திட்டம் மூலம் ஒரு அறிவியல் சக்தியாகவும் உயர்த்தியுள்ளது.
சமூகப் பாதுகாப்பு:
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - கிராமின்' திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் உள்ள பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பங்களுக்காக நான்கு கோடிக்கும் அதிகமான வீடுகள் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்கென்று :
புகையற்ற சமையலறைகள் மற்றும் 'லட்சபதி திதி' (Lakhpati Didi) திட்டம்
சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை
விவசாயிகளுக்கு ….:
'வளர்ச்சியடைந்த இந்தியா' (Viksit Bharat) என்பதன் முக்கியத் தூணாக விவசாயிகளை உறுதிப்படுத்தும் அதே வேளையில், 'பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி' மற்றும் கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களுக்கு 'கிசான் கிரெடிட் கார்டு' வழங்குதல்
விவசாய ஏற்றுமதியை ரூ. 5 லட்சம் கோடி என்ற மைல்கல்லைத் தாண்ட உதவியுள்ளன.

370-வது பிரிவு ரத்து,
ஜிஎஸ்டி (GST):
ஒரு நாடு ஒரு வரி என்ற பொருளாதாரத்தைப் புரட்டிப் போட்ட திட்டம் மேற்கொள்ளல்
ஓஆர்ஓபி (OROP): ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஒன் ரேங்க் ஒன் பென்ஷன் என்ற திட்டம் அமலாக்கல்
சிஏஏ (CAA) சட்டம்:, அண்டை நாடுகளில் தன்மானத்துடன் வாழ இயலாது தஞ்சம் புகும் இந்தியர்களுக்கு இந்தியக் குடியுரிமை தரல்.
புற்றேறிப்போன ஆங்கிலேய தண்டனை சட்டத்தை மாற்றி அமைத்தல்:
பாரதிய நியாய சன்ஹிதா என்ற தண்டனை சட்டம் அமல் படுத்தல்.
தொழிலாளர் சட்டங்களின் ஒருங்கிணைப்பு
பயங்கரவாதத்திற்கு ((சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மற்றும் எல்லை தாண்டிய வான்வழித் தாக்குதல்கள் போன்றவை)) எதிரான கடுமையான நடவடிக்கைகள் :
'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் நியாயமற்ற சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்தல் ஆகியவற்றின் மூலம் தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்துவதை இக்குறிப்பு வலுவாக வலியுறுத்துகிறது.
நக்சலிசத்தை ஒழித்தல்,
வடகிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல்
வங்காளதேசத்துடனான எல்லைப் பிரச்சனையைத் தீர்த்தல்
இதனால் ஊடுருவிகளைத் தடுத்தல்.
'மேக் இன் இந்தியா' (Make in India)
'ஆத்மநிர்பர் பாரத்' (Aatmanirbhar Bharat) : இந்தியாவை
சர்வதேச யோகா தினம்; இவரின் உந்துதலினால் 2015ல் ஒவ்வொரு ஜூன் 21ஆம் நாள் உலக யோகா தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
கல்வித் துறை :
21 ஐஐஎம், 23 எய்ம்ஸ், 23 ஐஐடிகள் என வளர்ந்துள்ளன.
உணவுப் பாதுகாப்பு: 'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 81 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது.
இலவச ஆயுள் காப்பீடு திட்டம்:
உலகின் மிகப்பெரிய பொது சுகாதாரத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா', பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டு வசதியை வழங்குகிறது; சுமார் 60 கோடி மக்கள் இந்த திட்டத்தில் அடக்கம். அதேவேளையில், 'பிரதான் மந்திரி ஜன் ஔஷதி கேந்திரங்கள்' மலிவு விலையில் பொதுவான மருந்துகளை (generic medicines) வழங்குகின்றன. 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் சுமார் 10 கோடியே 82 லட்சம் பயனாளிகள் பணமில்லா மருத்துவச் சிகிச்சையைப் பெற்றுள்ளனர்.
'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் 10 கோடியே 55 லட்சத்திற்கும் அதிகமான பெண்களுக்கு இலவச எல்பிஜி (LPG) எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன; இதன் மூலம் பாரம்பரிய சமையல் எரிபொருட்களால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
'பிஎம் ஸ்வநிதி' (PM SVANidhi) திட்டத்தின் கீழ், இதுவரை 1 கோடியே 12 லட்சத்திற்கும் அதிகமான கடன்கள் தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு வரம்பு 2015-ல் 19 சதவீதமாக இருந்த நிலையில், 2025-ல் 64 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது; இதன் மூலம் அரசு நலத்திட்டங்களின் கீழ் சுமார் 94 கோடி குடிமக்கள் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
சுமார் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்; இதனை ஐக்கிய உலக நாடுகள் சபை பாராட்டியுள்ளது.
ஸ்வச்ச் பாரத் என்னும் திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடிக்கும் அதிகமான கழிவறைகளை நாடு முழுவதும் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
நல் சே ஜல் திட்டத்தின் மூலம் தூய குடிநீரை குழாய் மூலம் வீடுகளுக்கே கொண்டு சென்றது ஒரு சாதனை தான். இதனால் பெண்கள் தண்ணீருக்காக மைல் கணக்கில் தூரம் சென்று தங்களது கல்வியை இழந்து விடுவது தவிர்க்கப்படுகிறது.
ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக என்.டி.ஏ (NDA) அரசாங்கத்திற்கு மக்கள் தங்கள் ஆணையை வழங்கியிருப்பது அபூர்வமாக பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ('விகாஸ்' மற்றும் 'விராஸத்') ஆகியவற்றை ஒன்றிணைத்துச் செயல்படுதல்; புதிய நாடாளுமன்றக் கட்டிடம் மற்றும் 'கர்த்தவ்ய பாதை' (Kartavya Path) ஆகியவற்றால் அடையாளப்படுத்தப்படும் கலாச்சார மறுமலர்ச்சி; மற்றும் கொரோனா பெருந்தொற்று போன்ற உலகளாவிய நெருக்கடிகளை வெற்றிகரமாகக் கையாண்ட மக்கள் பங்கேற்பு உணர்வு ஆகியவை இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தேசத்திற்குச் சேவை செய்வதில் அவர் காட்டிய தனித்துவமான அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்பிற்கு நன்றியைத் தெரிவிக்கிறது. அவரது தாயார் மறைந்தபோதுகூட, அவர் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு, தாயாரின் உடல் தகனம் செய்யப்பட்ட உடனேயே மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
தீபாவளிகளை ராணுவ வீரர்களுடன் தான் செலவழித்துள்ளார். (இது சாதனை கணக்கில் வராது என்றாலும் நம் வீரர்களுக்கு இது ஒரு பெரிய ஊக்கம்)
'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் இலக்கை நோக்கி நாட்டை 2047ல் வல்லரசாக மாற்றுவதில் தேவையான வழிநடத்துதல் அவர் கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமைத்தும் பாராட்டுக்குரியது.

Leave a comment
Upload