
சமீபத்தில் குருவாயூரில் ஸ்ரீமத் பாகவத சப்தாக வைபவத்தில் அஷ்டபதி ருக்மினி கல்யாணம் மற்றும் திவ்யநாமம் பஜனை செய்ய ஞானகுரு பாகவதர் வந்திருந்தார். பஜனைகளுக்கிடையில் தனது வாழ்வில் நடந்த சம்பவத்தை பகிந்து கொண்டார். அந்த சப்தாக பாராயணத்தில் பங்கு கொள்ள நானும் எனது மனைவியும் சென்றிருந்தோம்.
குருவருள் குரு பக்தியின் காரணமாக ஏற்படும் நன்மைகள் பற்றி ஸ்ரீஞானகுரு பாகவதரின் வாழ்வில் நிகழ்ந்த உண்பை சம்பவம் தான் அது.
மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் – காமாட்சி அம்மாள் தம்பதியற்கு மகனாக 1970ல் பிறந்தவர் இவர். இவரது தந்தையார் மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக நாமசங்கீர்த்தனத்தை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடத்தியவர். காஞ்சி மகா பெரியவர் மற்றும் தபோவனம் ஸ்ரீஞானாநந்த ஸ்வாமிகளின் ஆசிகள் பெற்றவர். மேலும் அவர்களது முன்னிலையில் பல முறை பஜனைகள் செய்யும் பேறு பெற்றவர். மேலும் இவ்விரு மகான்களிடமும் தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்.
இவரது மகன் ஞானகுரு ஏழு வயது வரை ஊமையாக இருந்தவர்.
அந்த சமயம் ஸ்ரீஞானாநந்தகிரி ஸ்வாமிகள் சித்தயடைந்த ஆண்டு. அந்த சமயம் அவரது பிரதம சீடரான குருஜி ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் தனது குரு ஸ்ரீ ஞானாநந்த ஸ்வாமிகளின் சித்தியடைந்ததைத் தொடர்ந்து அடுத்த ஒரு வருட காலத்திற்கு நாம சங்கீர்த்தனம், வேத பாராயணம், யக்ஞியங்களென ஏற்பாடு செய்திருந்தார். தனது குரு ஸ்ரீஞானாநந்தகிரி ஸ்வாமிகளிடம் நெருங்கிய பழக்கமும் பக்தியும் கொண்டிருந்த மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரை முதல் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தபோவன அதிஷ்டானத்தில் பஜனை செய்ய ஏற்பாடு செய்திருந்தார். அதன் படியே தபோவனத்தில், மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரும் தனது மனைவி, பேச்சு வராமல் இருந்த ஞானகுரு மற்றும் தனது கோஷ்டியாருடன் தங்கியிருந்தார்.
அப்போது குருஜி ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் ஞானகுருவிற்கு பேச வராமல் இருப்பதைக் கேள்விப்பட்டு, கிருஷ்ணமூர்த்தி பாகவதரிடம், “உனது மகன் இப்படி ஊமையாக இருக்கிறானே என்ன செய்கிறாய்” என்று கேட்டிருக்கிறார். அதற்கு கிருஷ்ணமூர்த்தி பாகவதர், “ அது ஸ்ரீஞானாநந்த கிரி ஸ்வாமிகளிடம் விட்டு விட்டேன்”, என்றிருக்கிறார்.
ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள், “தினமும் அதிகாலை ஸ்ரீஞானாநந்த கிரி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பிரதக்ஷிணம் செய். நிச்சயம் நல்லதே நடக்கும்” என்று கூறினார்.
அதன்படியே கிருஷ்ண்மூர்த்தி பாகவதரும் அவரது மனைவியும் தனது ஊமை மகன் ஞானகுருவுடன் அடுத்த ஒரு மண்டலத்திற்கு அதிகாலை பொழுதில் ஸ்ரீஞானாநந்தகிரி ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தை பிரதிக்ஷிணம் செய்து வழிபட்டு வந்துள்ளார்.
ஸ்ரீஞானாநந்த கிரி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகளின் மீதிருந்த நம்பிக்கை காரணமாக அதுவரை பேசாதிருந்த ஞானகுரு வாய் திறந்து ஸ்ரீஞானானந்தரின் பெயரை உச்சரித்தான்.
இதைக்கண்ட அவனது பெற்றோரும் குருஜியும் மகிழ்ந்து குருமூர்த்தி என்ற பெயரை ஞானகுரு என்று கூறினர். மேலும் ஸ்ரீஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதரிடம்,, “இனி ஞானகுருவை நாமசங்கீர்த்தனம் செய்ய பயிற்றுவிப்பாய் என்று கூறினார். அதன் காரணமாக பாகவதரும் தனது கடைசி மகன் ஞானகுருவை பஜனையில் ஈடுபடுத்தினார்.
1992ஆம் ஆண்டு மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் இறைவனடி சேர்ந்த பிறகு, அவருடன் இருந்த குழுவினரை சேர்த்துக்கொண்டு ஞானகுரு கடந்த 34 வருடங்களாக நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டுவருகிறார். தந்தயை குருவாகவும், குருஜி மற்றும் ஸ்ரீஞானாநந்தகிரு ஸ்வாமிகளின் பரிபூர்ண ஆசிகளுடன் இந்தியாவில் பல மாநிலங்களிலும், அயல்நாடுகளிலும் நாமசங்கீர்த்தனத்தை பரப்பி வருகிறார்.
இன்று ஞானகுரு பாகவதர் என்று பிரபலமாகி நாமசங்கீர்த்தனம் செய்து வருவதற்கு அவரது அவரது தந்தை தனது குரு ஸ்ரீஞானாநந்தகிரியிடம் வைத்திருந்த உறுதியான நம்பிக்கையும், தனது குருக்களின் மீது அவர் கொண்ட நம்பிக்கயுமே காரணம்.
மேலும், மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், பரனூர் மஹாத்மா ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளிடம் தனது இறுதி கக்சேரியின் போது தனக்குப் பின் ஞானகுருவை அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார். அதனால் ஞானகுரு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகளின் பரிபூரண ஆசிகளையும் பெற்றிருந்தார். நவராத்திரி சமயத்தின் பரனூரில் நடைபெறும் உத்சவத்திலும் ஞானகுரு பஜனை செய்துள்ளார்.
ஊமையாயிருந்த ஞானகுரு இன்று பேசுவதுடன் பாகவத ரத்தினம், பாகவத திலகம், பாகவத சிரோன்மணி, அபினய ரத்தினம் என்ற பட்டங்களுடன் பிரபலமாக இருப்பதற்கு குருவின் அருளும் பகவந்நாம மகிமையும் தான் என்று நெஞ்சாரக் கூறுகிறார் அவரது சகோதரர் குப்புஸ்வாமி.
இவரது ஸ்பெஷாலிடியே பாடல்களுக்கு அபினயம் பிடித்தவாறே பாடுவதுதான். இதோ சில அபினயக் காட்சிகள்.
ஒரு சாம்பிளுக்கு யூடியூப் வீடியோ இங்கே....




[அவருடன் நான்]

Leave a comment
Upload