
“ஒவ்வொருத்தர் வாழ்க்கைலயும் ஒரு காவியத்தன்மை இருக்கும். அதைநாமதான் கண்டுபிடிக்கணும்.”
இதை யாராவது வந்து என் காதில் சொன்னார்களா அல்லது என் காதில்நானே எப்போதோ சொல்லிக்கொண்டேனா தெரியவில்லை. ஆனால், நாமேதான் நமக்குள் இருப்பதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்பது எவ்வளவுஇலேசான – கனமான உண்மை. யார் சொன்னால் என்ன?
ஆயிரக்கணக்கான மனிதர்களை – சக உயிர்களை – பல அற்பங்களை – பலஅற்புதங்களை – பல அர்த்தங்களை – பல அபத்தங்களை – வேண்டியோ, வேண்டாமலோ… வாழும் காலத்திற்குள் சந்திக்கிறோம்.
நெஞ்சோரம் நின்று கேட்ட வார்த்தைகள், யார் யாரோ காட்டிய பார்வை, மூட்டிய தீ, நனைத்த ஈரம், போகிற போக்கில் நடத்திய பாடம் …அடுத்தகணமே மறந்து கடந்தாலும், பின்னொரு ஆண்டில், நாம் எதிர்பாராததருணத்தில் நெஞ்சின் உள்ளிருந்து எட்டிப் பார்க்கும். ‘அட… எப்போதோநடந்தது, இது. எங்கிருந்து வந்தது, இப்போது?’ என்று நம்மையேஆச்சரியப்படுத்தும்.
நெஞ்சோரம் சந்தித்ததெல்லாம் நெஞ்சை விட்டுப் போவதில்லை. நெஞ்சுக்குள் போய்த் தங்கும்.
நானும், நெஞ்சோரம் சந்தித்தேன்! அதை உங்கள் காதோரம் சொல்கிறேன்.
‘விகடகவி’ - வாசிப்பவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும் ஜன்னலைத் திறக்கும்என்று சொல்வார்கள். இல்லை. வாசலைத் திறக்கும் என்பார்கள். அதுவும்இல்லை. ‘விகடகவி’ எல்லோருக்கும் ஒரு ‘வெளி’யைப் பரிசளிக்கும்.
அந்த வெளியில்… அந்த வெட்டவெளியில்தான் எல்லாமே இருக்கும். கிடைக்கும்.
எனக்கும் அங்கு இடம் கிடைத்திருக்கிறது. நன்றி!
என் குமார்…

Leave a comment
Upload