
பிஸ்கோத் சாப்பிட்டா திருக்குறள் வந்துடுமா?
கேள்வி மட்டுமே காரணமாக இருக்காது.
ஆனா, இங்க சொல்ல வந்தது,

இப்ப இந்த வடநாட்டு 100 வயசுபிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி 2000 வயசு திருக்குறளை, திருக்குறளின் வார்த்தைகளை தமிழ்நாட்டில் தங்கள் 'மில்க் பிகிஸ்' (Milk Bikis) பிராண்டிற்காக 'திருக்குறள் சவால்' (Thirukkural Challenge) என்ற சிறப்புப் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பழமையான திருக்குறள் பாடல்களில் உள்ள தனித்தனித் தமிழ் வார்த்தைகளை அவர்கள் நேரடியாக பிஸ்கட்டுகளின் மீது வார்த்து விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு ஒரு சந்தோஷத்தைத் தர எண்ணியிருக்கிறார்கள். எல்லாம் பிசினெஸ்ஸுக்கு மாத்தி யோசிச்சிருக்காங்க.


மோதிக்கு தான் தமிழ் பிடிக்குமே. திருக்குறள் பிடிக்கும். உலகநாடுகள்ள எங்கப் போனாலும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தமிழை உயர்த்திப் பேசுவார். இப்ப இந்த பிரிட்டானியா கம்பெனிக்காரங்க. இந்த ஐடியா உருவான விதத்தை விளக்கும் வீடியோ இதோ

Leave a comment
Upload