தொடர்கள்
விகடகவியார்
கரூரில் முதல்வர் விஜய்

20260611060317464.jpg

கடந்த ஆண்டு விஜய் பிரச்சாரத்துக்கு வந்த போது இறந்து போன 41 பேர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்குவது என முதல்வர் விஜய் திட்டமிட்டு இருந்தார்.

தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேரம் செய்து பணம் கொடுக்க முயற்சி செய்தார் என்று செந்தில் கரூருக்கு முதல்வர் போகக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் திமுக ஒரு வழக்கு தொடர்ந்தது.

கரூருக்கு முதல்வர் விஜய் சென்றால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு இறந்து போன 41 குடும்பத்தினருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினால் அவர்கள் பிறழ்சாட்சியாக மாற வாய்ப்பு என்றெல்லாம் திமுக உச்சநீதிமன்றத்தில் வாதாடியது.

உச்சநீதிமன்றம் திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் விஜய் குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்க்கப்படவில்லை.

ஆவணங்களை சரியாக படித்துப் பார்த்துவிட்டு நீதிமன்றத்தில் பேசுங்கள் என்று சொன்ன நீதிபதிகள் உங்கள் அரசியல் சண்டைக்கான இடம் நீதிமன்றம் அல்ல என்று காட்டமாக தெரிவித்த பிறகு மனுவை திரும்ப பெற்றது திமுக.

மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் கரூரில் பலியானவர் குடும்பத்திற்கு அரசு பணி வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை நீதிமன்றம் அரசின் கொள்கை தொடர்பான முடிவில் தலையிட விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்கும் வரை தற்காலிகமாகவே பணி வழங்கப்பட வேண்டும். வழக்கு விசாரணை 21-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த மதுரை அமர்வு வழக்கில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தையும் தானாக முன் வந்து சேர்த்தது நீதிமன்றம்..கூட்டத்தில் விஜய் முழுக்க முழுக்க அரசியல் பேசினார்.

"ஒருவன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மனதளவில் சில காயங்கள், வலிகளை மறக்க முடியாது. எனக்கு அனைத்தையும் விட வலியும் காயமும் ஏற்படுத்தியது கரூர் சம்பவம் தான் "என்று கரூர் சம்பவத்தை நினைவு கூர்ந்த முதல்வர் "பெரம்பலூர் செல்லும் முன்பு கூட்டம் அதிகமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என போலீஸ் கூறியது. நான் அதை ஏற்றுக் கொண்டு கூட்டத்தை ரத்து செய்தேன். நாமக்கலில் இருந்து கரூர் வந்த போது அங்கிருந்த காவல்துறை எங்களை எச்சரிக்கவில்லை. செய்யாதது ஏன் ? அவர்கள் நினைத்தால் ரத்து செய்து இருக்கலாம், அப்படி செய்யாமல் நெடுஞ்சாலை இருந்து எங்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்துவிட்டது போலீஸ் தான். இப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள் அப்படி இருந்தால் இப்படி செய்யுங்கள் என்று சொல்லி அவர்களுக்கு அழுத்தம் தந்தது யார்? நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்கள் கொடுத்தவர்களுக்கு 2026 தேர்தலில் தக்க பதிலடி கொடுத்து விட்டீர்கள் . அது போதாது மக்களே அவர்கள் எழுந்திருக்க முடியாத அளவுக்கு நிரந்தரமான பதிலடிவரும் இடைத்தேர்தலில் தர வேண்டும்".

நமக்கு துணிச்சலாக சொல்வேன்.. பெருமிதமாக சொல்வேன், பணமா ஜனமா என்று கேட்டால் ஜனம் தான் எனக்கு முக்கியம் என்பேன் .

ஐந்து நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டு விட்டார்கள். டாக்லெஸ் ஒர்க் மோர் என்பது நமது அரசியல், பேச்சைக் குறைத்து வேலையைச் செய் இதுவே எங்கள் கொள்கை. உங்களிடம் யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என சொல்லுங்கள் நான் இருக்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை கிடைக்கிறது. ஊழல் லஞ்சம் இல்லை என மக்கள் கூறியதை கேட்கும்போது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஓட்டுக்கு காசு கொடுக்கும் கலாச்சாரத்தை உடைத்தது தமிழக வெற்றிக் கழகம் .அறிஞர் அண்ணா பிறந்தநாளில் உங்க அண்ணனுடைய அரசில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் அறிவிக்கப்படும். இந்த விஜய் தீய சக்தி மாதிரி ரீல் தாய்மாமன் அல்ல ரியல் தாய் மாமன் "என்று பேசினார் விஜய்.