
அதிகரித்து வரும் நீர் தேவை, விரைவான நகரமயமாக்கல், மாறிவரும் மழைப்பொழிவு முறைகள், காலநிலை மாறுபாடு ஆகியவை மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டல் நடவடிக்கை அவசியம் என்பதை பலமுறை நீர்நிலை ஆராய்ச்சியாளர்கள் பலமுறை வலியுறுத்தி இருக்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஜோசப் விஜய் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இல்லத்தை திறந்து வைத்து அந்த இல்லத்தை பார்வையிட்டார். அப்போது அதிகாரிகள் பல்வேறு கட்டமைப்புகளில் வடிகால் அமைப்பு குறித்து அவருக்கு அதிகாரிகள் விளக்கினார்கள்.
மழைநீர் சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பதை மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கட்டிடங்கள் கட்டும் போது வரைபடத்தில் மழை நீருக்கான வடிகால் வசதி ஏற்படுத்தினால் மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி தரப்படும் என்ற ஒரு உத்தரவை அன்றைய முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்தார். அதை அந்த அரசை கண்காணிக்கவும் செய்தது. அது மட்டுமல்ல அரசு அலுவலகங்களிலும் மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுக்கு பிறகு வந்த ஆட்சியாளர்கள் அதை சரிவர கடைபிடிக்கவில்லை. மழைநீர் வடிகால் மழைநீர் சேமிப்பு எவ்வளவு முக்கியம் அதன் மூலம் நிலத்தடி நீர் அதிகரிக்கும் போன்ற விழிப்புணர்வு ஆட்சியாளருக்கு இல்லாமல் போனது.
இப்போது இந்த ஆட்சியாளர்களும் ஏதோ புதிய திட்டம் போல் தொடங்கி வைத்திருக்கிறார்கள். தொடங்கி வைத்தால் மட்டும் போதாது அந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதை இந்த அரசு செய்தால் மட்டுமே இந்த திட்டம் உண்மையான செயல் வடிவத்திற்கு வரும்.

Leave a comment
Upload