வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20190820105653691.jpeg


பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம்... - ஆரூர் சுந்தரசேகர்

கருடாழ்வார் பற்றிய கட்டுரை படித்தேன். ஆரூர் சுந்தரசேகர் நிறைய பயனுள்ள விஷயங்களை கொடுத்திருக்கிறார், வெளியிட்ட விகடகவிக்கு ஒரு சபாஷ்.

ஆர். வெங்கட்ராமன், பழனி.


தனிநாடு... - ஆர்னிகா நாசர்

ஆர்னிகா நாசரின் தனி நாடு சிறுகதை, காஷ்மீர் உள்பட பல்வேறு நாடுகளின் உள்கட்டமைப்பு பிரச்னைகளை தெளிவாக காட்டுகின்றன. இவர் ஒரு நடமாடும் அறிவுஜீவியாக இருக்கலாமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.

ராபர்ட் சேவியர், பரங்கிப்பேட்டை


“நீலகிரிக்கு கிடைத்த ஊட்டச்சத்து மகுடம்..!" - ஸ்வேதா அப்புதாஸ்

நீலகிரி மாவட்டத்துக்கு கிடைத்த ஊட்டச்சத்துக்கான மணிமகுடம், மாவட்ட கலெக்டரின் தலைமையில் பணியாற்றும் பல்துறை அதிகாரிகள், ஊழியர்களின் நெஞ்சங்களை பெருமிதத்துடன் தலைநிமிர வைக்கிறது. அனைவருக்கும் எங்களது ராயல் சல்யூட்.

சிவகார்த்திகேயன், திருப்போரூர்


சிறுகதை - மழை நடுவே தாயம்... - ராம் ஸ்ரீதர்

மழை நடுவே தாயம் சிறுகதை த்ரில்லிங்காக இருந்தது. நடுராத்திரியில் இந்தக் கதையை படித்து விட்டு நான் அலறிய சத்தத்தில் வீடே கதிகலங்கியது.

ஷோபனா, பெசன்ட்நகர்


பலே ஆன்லைன் திருடன்!

பெங்களூரில் ஒயிட் காலர் ஜாப்பில் இருக்கும் உயர் அதிகாரியே ஆன்லைன் பணப்பரிமாற்ற முறைகேட்டில் ஈடுபட்டாரா? அப்போ அந்த வங்கியின் அனைத்து பண முதலீடுகளும் அம்பேல்தான். இதுபோன்ற முறைகேடுகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.

பானுமதி சுப்பிரமணியன், பம்மல்


ரசி... ருசி..! - வேங்கடகிருஷ்ணன்

போன வாரம் சென்னை வந்ததும், கபாலி கோயில் பக்கத்திலேயே தங்கியிருந்தபோதும், மாமி மெஸ் மிஸ் பண்ணி விட்டேன்... தங்களின் பதிவை படித்த பிறகு அடடா தவறு செய்து விட்டோமே என்று வருந்துகிறேன்... அடுத்த விசிட்டில் தவறாமல் போக வேண்டும்...

பாலகிருஷ்ணன், இந்தியா


“நீலகிரிக்கு கிடைத்த ஊட்டச்சத்து மகுடம்..!" - ஸ்வேதா அப்புதாஸ்

ஆகா இப்படி ஒரு ஆட்சியாளர் நம்மிடையே.. இத்தனை அழகாக ஒரு திட்டத்தை அதுவும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தை தனது சக ஊழியர்களோடு செயல்படுத்தி, தனது நீலகிரி மாவட்டத்தை மத்திய அரசு விருது பெற வைத்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை பாராட்டி வாழ்த்துவோம்...

பாலகிருஷ்ணன், கோவை


சிறுகதை - மழை நடுவே தாயம்... - ராம் ஸ்ரீதர்

அருமை... அழகாக கதையை நகர்த்திச் சென்று, முடிவை கருடபுராணம் வைத்து வாசகர்களின் முடிவுக்கு விட்டு விட்டீர்கள்... தலைவர் சுஜாதாவின் பாணி தெரிவதில் மகிழ்ச்சி...

பாலகிருஷ்ணன், இந்தியா


பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம்... - ஆரூர் சுந்தரசேகர்

கருடாழ்வாரின் மகத்துவம் படித்தேன். அப்பப்பா எவ்வளவு தகவல்கள்? கருடன் பிறப்பு, கருடனுக்கு மற்ற பெயர்கள், கருட ஸ்தம்பம், கருட சகுனம், கருட சேவை, கருட புராணம், கருட பஞ்சமி, புராணத்தில் கருடன், ஜோதிடத்தில் கருடன், வரலாற்றில் கருடன், கருட காயத்ரி மந்திரம் மிகவும் ஆச்சரியபட்டேன். அதோடு புரட்டாசி மாதம் வேறு சரியான நேரத்தில் இந்த கட்டுரையை கொடுத்துள்ளார் ஆசிரியர் ஆரூர் சுந்தரசேகர் அவர்களுக்கு முதலில் நன்றி மற்றும் பாராட்டுக்கள். அப்படியே விகடகவிக்கு மாபெரும் வாழ்த்துக்கள்.

விஜி .ஜேஎஸ், பெங்களூர்


“நீலகிரிக்கு கிடைத்த ஊட்டச்சத்து மகுடம்..!" - ஸ்வேதா அப்புதாஸ்

நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து திட்டத்தை மற்ற துறை அதிகாரிகள், ஊழியர்களின் துணையோடு செயல்படுத்தி விருது பெற்ற கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு பாராட்டுக்கள். அவரை கொஞ்ச நாள் ப்ரீயா விட்டுடுங்க. இல்லேன்னா, அரசியல்வாதிங்க கண்ணு பட்டு வேற எங்காவது தூக்கி அடிச்சுட போறாங்க. நல்லவங்களை நாமதான்ப்பா பாதுகாப்பா வெச்சுக்கணும்.

பன்னீர்செல்வம், காரமடை.


ரசி... ருசி..! - வேங்கடகிருஷ்ணன்

மயிலாப்பூர் மாட வீதியை வலம் வருவதாக கூறிவிட்டு, அதன் உட்புற தெருக்களில் உள்ள மாமி மெஸ் உள்பட பல வீட்டு டிபன் கடை ஸ்பெஷல் அயிட்டங்களை ஒரு பிடி பிடித்தேன். ஏன்னா, நாளை (திங்கள்) ஆபீசுக்கு லீவு சொல்ல காரணம் வேணுமே!

சந்திரசேகர், சோழிங்கநல்லூர்


சரவணபவனை சன் டீ வி வாங்கி விட்டதா?? சரவணபவன் அதிபருடன் மினி சந்திப்பு!! - ராம்.

ஹாங்காங்கில் சரவண பவன் அதிபர் சரவணனின் முதல் லகலக பேட்டியை படித்தேன். புகைப்படத்தில் அவரது இளமைத் தோற்றம், பேட்டி எடுத்த ராம் ஆகியோர் என் கண்களுக்கு எதிர்கால ரஜினி, கமல் போல் பிரகாசித்தனர்.

மாயா குப்புசாமி, அரும்பாக்கம்


வாவ் வாட்ஸப்

சென்ற வார வாட்ஸ் அப் படங்கள் அனைத்தும் அட, எப்படிப்பா இப்படி என விகடகவியின் கைவண்ணங்களை கண்டு ஆச்சரியப்படுத்துகின்றன.

கௌஷிக், தீட்சிதா, மயிலை


இறங்காத சந்திராயன்2..இஸ்ரோவின் இறுக்க முகங்கள்! – ஆர்.ராஜேஷ் கன்னா

நிலவில் விக்ரம் லேண்டரை செயல்படுத்த வைக்கும் முயற்சியில் இஸ்ரோவின் செயல்பாடு பாராட்டுக்குரியது. இஸ்ரோவின் பின்னால் இந்தியாவே அணிவகுக்கும் என்பது உறுதி.

ராதா வெங்கட், ஆலந்தூர்


ஒரே நாளில் இரு சோக நிகழ்வுகள்!

விளம்பர பேனர் கவிழ்ந்ததில் இளம்பெண் சுபஶ்ரீ மரணம் குறித்து உயர்நீதிமன்றம் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், ஆளுங்கட்சி அரசோ அமைச்சர்களோ அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக அரசு நிகழ்ச்சிகளுக்கு விளம்பர பேனர் வைப்பதில் தவறில்லையே என தெர்மகோல் அமைச்சர் கிண்டலடிப்பது கண்டிக்கத்தக்கது.

ராஜசேகரன், புதுக்கோட்டை


ரஜினி தர்பார் - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்

ரஜினி அரசியலில் காலூன்றுவாரா என்ற பேச்செடுத்தாலே பலரது கருத்து தலைசுற்ற வைக்கிறது. அதேபோல்தான் ரஜினி தர்பார் கட்டுரையும் - வரும், ஆனா எப்போ என தெரியாது என்பதைப் போல் உள்ளது.

சிவகார்த்திகேயன், மதுரை


போவோமா....! ஊர்கோலம்....! - தில்லைக்கரசி சம்பத்

humor is well used to expose stupidity


எஸ். பார்கவ்ன், அமெரிக்கா


சிறுகதை - மழை நடுவே தாயம்... - ராம் ஸ்ரீதர்

நல்ல கதைக்களம். எளிய நடை. தொய்வில்லாத கதை. படார் என்று முடிந்துவிட்டது. அந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டவரா? கிங்கரர்கள் வேறென்ன செய்தார்கள் என்று விளக்கியிருந்தால் நன்றாக இருக்கும். ஆயினும், இதுவும் ஒரு கதை சொல்லும் பாணி என்ற வகையில் நன்றாக இருந்தது.

சுந்தர் மாணிக்கம்