இந்தியாவிலே தமிழகத்தில் தான் அனைத்து தேர்வுகளும் மிக சிறப்பாக நடத்த படுகிறது என்பது உண்மை .

வருடந்தோறும் தமிழக பள்ளி கல்வி துறை நடத்தும் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் மிக சிறப்பாகவும் கவனமாகவும் நடத்த படுகிறது .
பொது தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ மாணவர்களை ஆசிரியர்கள் ஜூன் முதலே தயாரிக்க துவங்கி விடுகிறார்கள் .
அரையாண்டு தேர்வு என்பது பொது தேர்வின் முன்னோடி .
அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மாணவர்களை ஜனவரி மாதம் முதல் துரிதமாக தயாரிக்க துவங்கி விடுகிறார்கள் .
சிறப்பு வகுப்புகள் , இரவு வகுப்புகள் என்று மாணவர்கள் தேர்ச்சி பெற உழைக்கிறார்கள் ஆசிரியர்கள் .
ஆசிரியர்களின் உழைப்பை மாணவர்களும் சரி பெற்றோர்களும் சரி புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்காதது வருத்தமான விஷயம் தான் .
ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தை மறந்து மாணவர்களின் வெற்றிக்காக சனி ஞாயிற்று கிழமைகளிலும் பள்ளிக்கு வந்து பயிற்ச்சி கொடுத்து உழைக்கிறார்கள்.
படிக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்வுக்கு தயார் படுத்தி கொண்டுள்ளனர் .

பெரும்பாலும் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்களை தங்களின் உயிர்முச்சை கொடுத்து படிக்கவைத்து தேர்ச்சி செய்ய வைக்கிறார்கள் .
பரிட்சை என்பது ஆசிரியர்களுக்கு தான் ஜுரம் மாணவர்களுக்கு அது ஒரு ஜாலியான நேரம் என்பது தற்போது கண்கூடாக பார்க்கமுடிகிறது .
பள்ளி கல்வி துறை வருடத்தில் இரண்டு முக்கிய தேர்வுகளை நடத்தி முடிப்பது என்பது வருடந்தோறும் தேர்தல் நடத்தி முடிப்பது போல ஒரு பெரிய சவாலாக திகழ்கிறது .

ஆசிரியர்கள் தேர்வு நெருங்க மாணவர்களை முழுமையாக தயார்படுத்தி தேர்வு சிறப்பாக நடத்தப்படவும் மாணவர்கள் முழுமையாக வெற்றி பெறவும் உழைக்கும் இவர்களின் பணி திரை மறைவில் உள்ளது .
இந்த தேர்வுக்காக கல்வி அதிகாரிகள் பம்பரமாக சுழல்கிறார்கள் .
தேர்வு பணியை மிக சிறப்பாக ஆசிரியர்கள் நடத்தி கொடுக்கிறார்கள் .
பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் முதல் அனைத்து ஆசிரியர்களும் அலுவலர்களும் மாணவர்களின் எதிர்காலம் ஒளிபெற தங்கள் பணியை அர்பணிப்பது எந்த பெற்றோருக்கும் தெரிவதில்லை .
தேர்வு நடத்தப்படும் பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன .
தேர்வை நடத்தும் அதிகாரிகள் , கண்காணிக்கும் ஆசிரியர்கள் , பறக்கும் படை .தேர்வு மையத்தில் இருந்து விடை தாள்களை எடுத்த செல்லும் ரூட் ஆபிசர்கள் என்று பரிட்சை நேரம் நெருங்கி விட்டது .
இனி மாணவர்கள் தான் சிறப்பாக தேர்வை எழுத வேண்டும் .
" Ball is in thier court " என்கிறார் ஒரு ஆசிரியர் .

தேர்வு முடிந்து உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணி மிக சிறப்பாக ஒரு திருவிழா போல ஆசிரியர்கள் பாவித்து மாணவர்களின் தேர்ச்சியை நிர்ணயிப்பது ஒரு சிறந்த ஆக்கபூர்வமான பணி என்பது யாருக்கும் தெரிவதில்லை .
ப்ளஸ் டூ எழுதும் மாணவர் ஜோயல் ரேவந்த் கூறும் போது ,

" தேர்வு எழுத பிளான் செய்து தயாரிக்க வேண்டும் .
தூக்கம் மிக முக்கியம் இரவில் 6 முதல் 8 மணிநேரம் தூங்கவேண்டும் .
காலை 5 மணிக்கு எழுந்து முன்தினம் படித்த விஷயங்களை திருப்பி பார்க்கவேண்டும் .
சத்தான கூல் உணவுகளை உண்பது நல்லது .
தேவையற்ற ஜங்க் உணவுகளை தொடக்கூடாது .
ஆசிரியர்கள் சொல்லும் அறிவுரைகள் டிப்ஸ் அவசியம் உதவும் .
காலாண்டு தேர்வு கேள்வி தாள் முதல் கடைசி பயிர்ச்சி தேர்வு கேள்வி தாள்களை திருப்பி பார்த்து படிப்பது அவசியம் .
கடவுளிடம் பிராத்தனை செய்வது முக்கியம் .
தேர்வு அன்று நல்ல ஷவர் எடுத்து விட்டு காலை உணவை உண்டுவிட்டு முக்கியமான கேள்விகளை திருப்பி படித்து விட்டு பள்ளிக்கு வந்து ரிலாக்ஸ் செய்து கொண்டு தேர்வு அறைக்கு செல்லவேண்டும்.
சக மாணவர்களிடம் நோ டிஸ்க்கஷன்
தேர்வு முடியும் வரை செல்போனுக்கு தடா தான் .
கொஞ்சம் மைண்ட் ரிலாக்ஸாக டீவியில் நியூஸ் பார்க்கலாம் .
நான் சிறிது நேரம் செஸ் விளையாடுவேன் அது மூளைக்கு சலவை செய்வது போல .
ஒரு தேர்வு எழுதி முடித்து வெளியே வந்தவுடன் அதை மறந்து விடுவது நல்லது .
என்ன எழுதினோம் என்பதை பற்றி பட்டிமன்றம் தேவையில்லை .அது அடுத்த தேர்வை குழப்பிவிடும் .
தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் முதல் தேர்வு துவங்கி கடைசி தேர்வு வரை ஒவ்வொரு நிமிடமும் கோல்டன் டைம் அதை வீணடிக்காமல் அந்தந்த பாடங்களை படிப்பது அவசியம் .
எல்லாவற்றையும் விட ஆசிரியர்களின் ஆசீருடன் தேர்வுக்கு செல்வது கட்டாயம் வெற்றியை பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை "
என்று கூறி பரிட்சைக்கு நேரமாச்சு என்று விடைபெற்றார் ஜோயல் ரேவந்த் .
+2 தேர்வு மார்ச் 2 ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி முடிவடைகிறது .
10 ஆம் வகுப்பு எஸ் எஸ் எல் சி தேர்வு மார்ச் 11 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 2 ஆம் தேதி முடிவடைகிறது .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தலுக்கு முன் பள்ளி தேர்வு முடிவுகள் வெளிவரும் என்ற தகவல் உண்டு .
+2 மற்றும் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் விகடகவியின் "ஆல் தி பெஸ்ட் ".

Leave a comment
Upload