தொடர்கள்
தேர்தல் திருவிழா
தேர்தல் திருவிழா- கண்ணாழ்வார்

20260127181700161.jpeg

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆலோசனை நடத்திய பிறகு தோ்தல் தேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் என தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமார் சொன்னார்.

தமிழக தேர்தல் ஏப்ரல் 15,16,17 தேதிகளில் ஏதாவது ஒரு தேதி நிர்ணியிக்கப்படும் என்று டெல்லி வட்டார தகவல் .

சென்னைக்கு அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் மூன்று நாள் தங்கி செல்கிறார் என்றதும் சில அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியை கரைக்க தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நான்கு முனை போட்டி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

தமிழகத்தின் மிக முக்கிய பிரமுகர் மாப்பிள்ளை சார் பெயர் மாநிலங்களவை தேர்தலில் போட்டி என தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக மேலிடத்தில் தமிழக மக்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பு இன்னும் சில இலவசங்களை அறிவிக்க யோசனை நடந்து வருகிறது.

தேர்தல் ரிசல்டுக்கு பின்பு அறுதி பெரும்பான்மைக்கு சீட்கள் குறைவாக வந்தால் என்ன செய்வது என்ற எச்சரிக்கை உணர்வோடு தற்போது திமுக முக்கிய தலைகள் இதற்கான நகர்வுகளை செய்து வருகின்றனர்.

விஜய் கட்சிக்கு செல்லும் வாக்குகள் குறித்து திமுக மற்றும் அதிமுக தனது முக்கியமான சோர்ஸ்களை வைத்து அலசி ஆராய்ந்து வருகிறது.

20260127182052419.jpeg

லாட்டரி கிங் மார்ட்டினின் மனைவி லீமாரோஸ், பச்சமுத்துவின் ஐ.ஜே.கே.விலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்ததும் அவருக்கு அதிமுக மகளிரணி இணைச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

மார்ட்டினின் மகன் சார்லஸ் புதுச்சேரியில் கட்சி தொடங்கியதுமே பா.ஜ.க. கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது!

மார்ட்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, த.வெ.க.வில் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் என்ற பதவியில் விஜய்க்கு அடுத்தபடியாக இருக்கிறார்!

விஜய் கட்சியோடு திமுகவும் பாஜகவும் கூட்டணியில் இல்லை என்றாலும் மாமியார்... மருமகன்... மச்சினன் என லாட்டரி கிங் குடும்பமே தேர்தல் திருவிழாவில் ஐக்கியமாகிவிட்டனர்.

அதிமுக ஆட்சி அமைத்ததும் குடும்பத்திற்கு ரு10000 கருணைத்தொகை வழங்குவதாக எடப்பாடி அறிவித்தது தற்போது லேட்டஸ்ட் டாக் காக உள்ளது.

திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை கன்னிதீவு கதை மாதிரி நீண்டு கொண்டே செல்கிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் சமாதானம் செய்து வைக்க வேண்டும் என்ற மூத்த அரசியல்வாதிகள் நையாண்டி செய்து வருகின்றனர்.

திருச்சியில் சீமான் தமிழகத்திற்கு ஒரே மூச்சில் தனது வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து ஹாயாக இருக்கிறார்.

திமுகவில் இப்போதைக்கு எம்.எல்.ஏ சீட் கேட்பவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்றதும் நிறைய இளைஞர்கள் மனு கொடுத்து வருகின்றனர்.

வாக்குச் சாவடிக்கு வரும் வாக்காளா்கள் வாக்குப் பதிவின் போது தங்கள் கைப்பேசியை தோ்தல் அலுவலரிடம் கொடுத்து விட்டு மீண்டும் வாங்கிச் செல்ல ஏற்பாடு செய்துள்ளோம். வரும் தோ்தலில் இருந்து வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படங்கள் மட்டும் இடம் பெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிமுக இதுவரை 10 முறை தோல்வி தழவியுள்ளது.அதிமுக அழிந்து வருகிறது.இனியும் அமைதியாக இருக்க கூடாது என தான் புதுகட்சி ஆரம்பித்ததாக சசிகலா சொன்னார்.

வருமான வரி விலக்கு பெறுவதற்காகப் பல கட்சிகள் காளான்கள் போலத் தொடங்கப்படுகின்றன.

20260127182719590.jpeg

நீண்ட வரலாறு கொண்ட, தேர்தல்களில் போட்டியிடும் கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பதில் என்ன தவறு?" என்று விஜய் கட்சி தொடர்ந்த பொதுகூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

20260127182813970.jpeg

ஒபிஎஸ் தன்னை திமுகவில் இணைத்துகொண்டார்.

கல்லாப்பெட்டி கூட்டணி என்று திமுக அதன் தோழமை கட்சிகளை விஜய் பேசியது லேட்டஸ்ட் டாபிக்.

20260127185242718.jpeg

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய தேர்தல். ஒரு தேர்தல்ல எல்லாரும் அவங்க அவங்க எதிரியை தான் எதிர்ப்பாங்க. இப்போ எல்லாரும் சேர்ந்து இந்த விஜய்யை எதிர்க்கிறாங்க. ஏன்னா இந்த விஜய் ஊழல், லஞ்சம் எதிர்க்கிறான். மக்களோடு மக்களா நிக்கிறான்.

விஜய் மனைவி சங்கீதா தனது கணவர் மீது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

கடந்த 4 நாட்களாக வெயில் 100 F சுட்டெரிக்க தொடங்கியுள்ளது…. தேர்தல் திருவிழாவிற்கு உற்சாக பானத்திற்கு அனைத்து கட்சிகளும் நிறைய செலவிட வேண்டும் என்ற இப்போதே பேச தொடங்கியுள்ளனர்.