தொடர்கள்
அரசியல்
புல்லட் செய்திகள்!

* மூன்றெழுத்து இனிஷியல்காரருக்கும் அவருடைய தம்பிக்கும் ஏகத்துக்கும் தகராறாம். போனிலேயே விடியோ அழைப்பில் அடித்துக் கொள்ளுமளவிற்கு உச்சகட்ட சண்டை நடந்தேறியிருக்கிறதாம். ‘அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா’ என்று சுற்றம் சூழ் உறவினர்கள் சமாதானப்படுத்தினாலும் மூன்றெழுத்துக்காரரின் வளர்ச்சியைப் பார்த்து அனைவருக்குமே ஜெலூஸில் லிட்டர் லிட்டராகத் தேவைப்படுகிறதாம். ‘இப்பவே இப்படின்னா.. அவங்க வெளியிலே வந்தப்புறம் ‘நீ யாரு?’ன்னு இவர் கேட்க மாட்டாருன்னு என்ன நிச்சயம்? என்றும் மோட்டுவளையைப் பார்த்து யோசித்து போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

20171106111848492.png
* இதுவும் அண்ணன், தம்பி பஞ்சாயத்து கதைதான். நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பாவைப் பார்க்கக் கூட அண்ணன் வராதது ஏன் என்று தம்பி நக்கல் பேச்சு விட்டுக் கொண்டிருந்ததால், அதை முறியடிக்கவே தம்பி கிளம்பி அண்ணன் ஏரியாவுக்குப் போன போது அண்ணன் கிளம்பி அப்பாவைப் பார்க்க வந்திருக்கிறார். இவரைப் பார்த்து அவர் கலங்க.. அவரைப் பார்த்து இவர் குலுங்க.. அங்கே நடந்த பாசப் போராட்டத்திலிருந்து அதிரடி அண்ணனை மீட்டு வரவே படாத பாடு பட வேண்டியிருந்ததாம். ‘என்னோட எங்கூருக்கு வந்திடுங்க’ என்று அப்பாவை அழைத்திருக்கிறார் அண்ணன். ‘என்னாங்கய்யா ஆளாளுக்கு அவங்கவங்க வீட்டுக்கு கூப்பிட்டுக்கிட்டிருக்கீங்க?’ என்று பிரதமர் புகைப்படத்தைப் பார்த்தவாறே குரல் கொடுத்திருக்கிறார் தம்பி தங்கக் கம்பி.
* இடைத்தேர்தலில் இசை இளையவரையே மீண்டும் போட்டியிடச் சொல்லி கட்சி மேலிடத்திலிருந்து கூறப்பட, “ஆளை விடுங்கடா சாமி” என்று அல்லுசில்லு தெறிக்க தாவி ஓடியிருக்கிறார் புண்ணிய நதியார். மொபைல் போனை அணைத்துப் போட்டு விட்டு ‘உடம்பு சரியில்லைன்னு சொல்லிடுங்க’ என்றும் எஸ்கேப் ஆகி விட்டாராம். பொதுத்தேர்தலின் போது சீட்டுக் கேட்க வேண்டுமென்பதற்காக மருத்துவமனையில் படுத்திருப்பது போல ஒரு ஃபோட்டோ ஷூட்டும் ரெடி செய்து ரிலீஸியிருக்கிறார்.

https://youtu.be/9xyn5h24rTA

 


* சூரியக்கட்சியில் ‘ஏனுங்க’ ஊரின் முன்னாள் முக்கியப் பிரமுகர் ஒருவரின் தம்பி மகள்  அண்மையில் இறந்து விட்டார். அவர் இறந்த செய்தி ஓரிரு நாட்களுக்குப் பிறகுதான் ஊடகங்களில் வெளியானது. இறந்தவரும் முக்கியப் பிரமுகர்தான். கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்கொலையாக இருக்கும் என்று அவர்கள் வட்டாரத்திலேயே பேசுகிறார்கள்.  என்ன காரணம் என்று பழனி மலை முருகப்பெருமானுக்கே வெளிச்சம்!
- சுபிக்‌ஷா

­