என்னதான் முன்னேறிய நாடு என்றாலும் அங்கும் மூட நம்பிக்கைகளின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருக்கவே செய்கிறது.
மலேசிய நாட்டு மக்களில் பெரும்பான்மையோர் எண் 4 ஐ தீய சக்திகளின் வடிவமாகப் பார்ப்பதோடு மட்டுமல்லாது அதனை உபயோகிப்பதையும் தவிர்க்கின்றனர். இந்த செண்டிமென்டின் காரணமாக மலேசிய நாட்டு அடுக்குமாடிக் கட்டடங்களுக்காக ஜப்பானிய ஹிட்டாச்சி நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ள லிப்டுகளில் எண் 4 முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது.
3ஆம் மாடியினைக் கடந்து 4ஆம் மாடிக்கு நீங்கள் செல்ல வேண்டுமென்றால் 4ஆம் எண்ணுக்கு பதிலாக லிப்ட்டின் சுவிட்ச் பேனலில் 3A என்றே பொத்தான் இடம் பெற்றிருக்கும். இதே போல 14ஆம் மாடிக்கு செல்ல 13A என்ற பொத்தானும், 24ஆம் மாடிக்கு செல்ல 23A என்ற பொத்தானும் மட்டுமே இந்த வகை லிப்டுகளில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் பிரிக் பீல்ட்ஸ் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில் நாம் நேரில் கண்ட காட்சி இது. (காண்க படம்)

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் எண் 13 ஐ சாத்தானின் எண்ணாகக் கருதி ஒதுக்கப்பட்டு வருவதைப் போல மலேசியாவில் எண் 4 ஒதுக்கப்பட்டு வருவதாக அங்குள்ளவர்கள் விளக்கம் தந்து நம்மை வியக்க வைத்தனர்.....
அடக் கொடுமையே!
-வை.கதிரவன்-

Leave a comment
Upload