
திமுக தலைவர் ஸ்டாலின் அடிக்கடி அமித்ஷா சொல்படி தான் எடப்பாடி நடக்கிறார் என்று சொல்வார்..
சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக அமித்ஷா தமிழகம் வந்தார். அமித்ஷா கலந்து கொண்டு எந்த நிகழ்ச்சியிலும் எடப்பாடி கலந்து கொள்ளவில்லை.
அதற்கு அவர் சொன்ன காரணம் நான் ஏற்கனவே பொதுக்கூட்டங்களுக்கு ஒப்புக் கொண்டு விட்டேன் என்பது. ஆனால், அமித்ஷாவை காத்திருந்து இரண்டு நாட்கள் முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசி இருக்கிறார். அதன் பிறகு நடந்தது தான் மிகப்பெரிய ட்விஸ்ட்.
அமித்ஷா தனது தனி விமானத்தில் அண்ணாமலையை அழைத்துச் சென்றிருக்கிறார.
.விமானத்தில் ஆலோசனை விமானத்தில் இறங்கி அமித்ஷா வீட்டிலும் ஆலோசனை என்று அண்ணாமலை அவருடன் நீண்ட நேரம் இருந்திருக்கிறார்.
ஜனநாயகன் படத்துக்கு பிரச்சனை எடப்பாடி டெல்லிக்கு வரவைத்து கூட்டணி ஆட்சி தான் என்று அழுத்தம். நீங்கள் 160 தொகுதி எடுத்துக் கொள்ளுங்கள் மீதியை என்னிடம் தாருங்கள்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன் பேசிக் கொண்டிருக்கிறேன் அவர்களை எதிரியாக பார்க்காதீர்கள்.
அரசியலில் எதிரி நண்பன் எல்லாம் தேர்தல் போது பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
திமுகவை விட்டு பிரிந்த வைகோ திமுகவை கடுமையாகவும் கருணாநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார் இப்போது ஸ்டாலின் புகழ் பாடுவது யார் அவர் தானே திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று உண்மையில் நீங்கள் நினைத்தால் நான் சொல்வதை கேளுங்கள் என்று அமித்ஷா எடப்பாடிக்கு வேப்பிலை அடித்து அனுப்பி இருக்கிறார்.
அண்ணாமலை அமித்ஷாவிடம் பாராளுமன்றத் தேர்தலில் நாம் தனியாக போட்டிட்டு 18 சதவீதம் வாக்கு வாங்கி இருக்கிறோம்,. எனவே கூட்டணி ஆட்சிக்கு இதுதான் சரியான தருணம்.
ஜனநாயகன் படத்துக்கு சிக்கல் ஏற்படுத்த வேண்டும் காங்கிரஸ் விஜய் உடன் பேசிக் கொண்டிருப்பதாக எனக்கு தகவல் வருகிறது என்றெல்லாம் சொன்னதுக்கு பிறகு தான் ஏகப்பட்ட அரசியல் கிளைமாக்ஸ் இந்த வாரம் நடந்திருக்கிறது..
எடப்பாடிக்கு நிர்வாகம் தெரியுமா ?
வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி எல்லாம் வீர வசனம் பேசிய டாக்டர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி தான் அடுத்த முதல்வர் என்று தலை எல்லாம் சரி பண்ணிக்கொண்டு பேட்டி கொடுத்துவிட்டு நகர்ந்து விடுகிறார். .
இட ஒதுக்கீடு ராஜ்யசபா எத்தனை தொகுதி எது பற்றியும் பேச்சு மூச்சு இல்லை.
அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எடப்பாடி சந்தித்து பேசுகிறார். தொகுதி பங்கீடு பற்றி தான் பேசினார் என்பது உண்மை. .ஆனால், பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி ஆலோசனை செய்தேன் என்று பேட்டி தருகிறார். .
எடப்பாடி திரும்பத் திரும்ப அதிமுக தனித்து ஆட்சி என்கிறார் ஆரம்பத்தில் டிடிவி தினகரன் ,ஓபிஎஸ் வேண்டாம் என்று சொன்னவர் அந்தப் பட்டியலில் இப்போது தினகரனை டெலிட் செய்திருக்கிறார்.
தினகரன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தில் சமீபத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
தினகரன் எடப்பாடி தலைமையை என்றும் நான் ஏற்க மாட்டேன் என்று சொன்னார்
டெல்லியில் நிருபர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு எடப்பாடி சொல்லிய பதில் மிகவும் கவனிக்க வேண்டியது.
. தமிழ்நாட்டில் டெல்லி அதிகாரம் செலுத்த அனுமதிக்க மாட்டேன் முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறாரே என்ற கேள்விக்கு எடப்பாடி சொன்ன பதில் நாங்களும் அதைத்தான் சொல்கிறோம் என்று எடப்பாடி சொன்னது ....
.அடுத்தடுத்து நிறைய காமெடிகள் இரண்டு திராவிட கட்சிகள் கூட்டணியிலும் அரங்கேறும் ரசிக்கத் தயாராவோம்..

Leave a comment
Upload