தொடர்கள்
தொடர்கள்
கருப்பு பூனைகளும் பெருச்சாளிகளும்- ஆர் .நடராஜன்

20260010063242889.jpg

விமான பயணங்கள் ஒரு பத்திரிகையாளருக்கு சில சமயங்களில் செய்திப் புதையலையே திறந்துவிடும். தர்மசங்கடமான சந்திப்புகள் நேர்வதுண்டு.

பல சமயங்களில் விமானப் பயணங்களில் அவன் சந்தித்த அரசியல்வாதிகள், அவனது கட்டுரைகளைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.

சிலர் அவன் கருத்துக்கு உடன்பட்டிருக்கிறார்கள். சிலர் எதிர்ப்பை முணுமுணுப்பாகத் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டுவித அனுபவங்களையும் அவன் பெற்றிருக்கிறான்.

பிரதமர் நரேந்திர மோடி, பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்ற புகார் 10 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகிறது.

மன்கீபாத் (மனதின் குரல்) என்ற பகுதியில் மக்களுடன் தொலைக்காட்சியில் வானொலியில் மாதந்தோறும் பேசுகிறார்.

அது அவரது மக்கள் தொடர்பு. மன்மோகன்சிங் குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய நாட்களில் மட்டும் ஒருநாள் முன்னதாக தொலைக்காட்சியில், வானொலியில் உரை நிகழ்த்தியிருக்கிறார். அவரும் பத்திரிகையாளர்களை- சந்தித்ததில்லை என்ற குறை இருந்தது. அப்போது அவன் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் சனிக்கிழமை இணைப்பில், மக்களையாவது சந்தியுங்கள் பிரதமரே என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தான்.

அன்று காலை 7 மணிக்கு வெளியூர் செல்வதற்காக விமான நிலையம் சென்றபோது ஒரு மத்திய உளவுத்துறை அதிகாரி அவனை சந்தித்துக் கேட்டார் “என்ன சார் இப்படி பிரதமரை புரட்டி எடுத்து விட்டீர்களே?” என்று. அந்தக் கட்டுரையில் சில கடுமையான வாசகங்கள் இருந்தன என்று உளவுத்துறை அதிகாரி சொன்னார். ‘சில விஷயங்களை குறிப்பிட்ட வார்த்தைகளில்தான் சொல்ல வேண்டியிருக்கிறது’ என்று சொன்னபோது, அவர் சொன்னார், ‘உங்கள் கட்டுரையை காலை ஐந்தரை மணிக்கே பிரதமர் அலுவலகத்திற்கு போட்டோ காப்பியாக பேக்ஸ் செய்யப்பட்டது.

காலை டெல்லி செல்லும் விமானத்தில் இரண்டு இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ்களும் அனுப்பப்பட்டன’ என்றார்.

எப்படியாவது பிரதமருக்கு இந்தத் தகவல் சென்று சேர்ந்தால் சரி என்று திருப்திப்பட்டான் அவன். சரியாக ஒரு வாரம் கழித்து பிரதமர் மன்மோகன் சிங் ஐந்து முக்கிய ஆங்கில ஜி.க்ஷி சேனல் செய்தியாசிரியர்களை காலை சிற்றுண்டிக்கு வீட்டிற்கு அழைத்து ஏதோ பேசிக்கொண்டிருந்தார்,

மௌன சாமியார் வாய்திறந்தது போல. ஆக அவன் எதிர்பார்த்தது நடந்தது. அசைக்க வேண்டியவரை அசைத்துவிட்டதில் அவனுக்குத் திருப்தி.

தொலைக்காட்சியில் உரையாற்றியபோது எழுதிக் கொடுக்கப்பட்டதைதான் மன்மோகன்சிங் பேசினார்.

ஒரு சந்தர்ப்பத்தில், அவரது பேச்சு ஒருபோதும் உள்ளத்தில் இருந்து வரவில்லை என்பது தெரிந்தது.

தான் பேசி முடித்த பிறகு தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரைப் பார்த்து அவர் “டீக் ஹை” என்று கேட்டார். அதுவும் எடிட் செய்யப்படாமல் அப்படியே வெளிவந்துவிட்டது. அசட்டுத்தனத்தை வெளிக் காட்டியபடி. எழுதிக் கொடுக்கப்படாமல் பேசும் ஆட்சியாளர்கள் வெகுசிலரே.

தமிழ்நாட்டு மந்திரிகள் விவரம் தெரியாமல் கப்பலில் கடல் போகிறது,

பூனைமேல் மதில், கம்பராமாயணம் எழுதிய சேக்கிழார் என்று பேசியதை எல்லாம் அவன் தன் கட்டுரைகளில் விமர்சித்திருந்தான், விவரம் தெரியாதவர்களா நம் ஆட்சியாளர்கள் என்று கேட்டு. தான் விமர்சிக்கப்படுவதை எந்த அரசியல்வாதியும் விரும்புவதில்லை என்று அப்போதைய மக்களவை சபா நாயகராக இருந்த சோம்நாத்சட்டர்ஜி ஒருமுறை அவனிடம் சொன்னார்.

அந்த சம்பவம்: அன்று அவன் டெல்லி விமான நிலையத்தில் சென்னை விமானத்திற்காக ணிஜ்மீநீutவீஸ்மீ றீஷீuஸீரீமீல் காத்திருந்தான். அப்போது அவன் தன் புதிய புத்தகத்திற்கான பக்கங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தான். அந்த நீண்ட சோபாவின் மறுமுனையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். ப்ருப் ரீடிங்கில் மூழ்கியிருந்த அவன் அவர் தன்னைப் பார்ப்பதை கவனிக்கவில்லை.

பிறகு சற்றே நெருங்கி வந்து அவன் அருகில் அமர்ந்து “கீமீst ஙிமீஸீரீணீறீ வீs stவீறீறீ க்ஷீமீபீ, ழிஷீt ஸிஷீsஹ்’ என்றார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர் யாரென்று புரிந்துவிட்டது. அவன் சட்டென்று எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தான். அந்த கம்பீரமான ஆளுமையை எளிதில் மறக்கமுடியுமா? அவர் குறிப்பிட்ட வாசகம், ‘உன்னை எனக்கு தெரியும்’ என்பது போல் காட்டியது. காரணம் அவர் சொன்ன வார்த்தைகள் மேற்கு வங்காளம் பற்றி அவன் ஹிண்டுவில் எழுதிய கட்டுரையின் தலைப்பு.

பிறகு பழைய சந்திப்பை இருவரும் நினைவுப்படுத்திக் கொண்டார்கள். அந்த நேரம் அவன் கையிலிருந்த புரூப் பேப்பர்களில் ஒரு பாக்ஸ் மேட்டரைப் பார்த்து, ‘என்ன எழுதியிருக்கிறாய்’ என்று கேட்டார்.

‘கறுப்பு பூனைகள் முன்னே, பெருச்சாளிகள் பின்னே என்பதை அவருக்கு ஆங்கிலத்தில், “ஙிறீணீநீளீ நீணீts கிலீமீணீபீ: தீணீஸீபீவீநீஷீஷீts தீமீலீவீஸீபீ” என்று மொழிபெயர்த்துச் சொன்னான். இப்படி எழுதினால் உங்கள் பிரதேச அரசியல்வாதிகள் கோபித்துக் கொள்ள மாட்டார்களா என்று கேட்டார் சோம்நாத் சாட்டர்ஜி.

‘ஷேக்ஸ்பியர் நிர்வாகம் பற்றி சொல்லி உள்ளதை விளக்கி இருக்கிறேன். எல்லா அரசியல்வாதிகளுமா ஷேக்ஸ்பியர் பற்றி எழுதியதைப் படிப்பார்கள். அப்படி யாரேனும் படித்தால் அவர் அறிவாளி, கோபித்துக் கொள்ளமாட்டார்’ என்றான்.

அப்போது அவன் சொன்னான், ‘உங்கள் மாநிலத்தில் அப்படி இல்லை என்று நினைக்கிறேன். ஹிரேன் முகர்ஜி என்ற அந்தக்கால நாடாளுமன்ற உறுப்பினர் பிவீனீsமீறீயீ ணீ ஜிக்ஷீuமீ ஜீஷீமீனீ என்ற தலைப்பில் ரவீந்திரநாத் தாகூர் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறாரே?’ என்றான்.

‘அந்த அருமையான புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன்’ என்றார் அவர். சோம்னாத் சாட்டர்ஜி ஜனாதிபதியாக வந்திருக்க வேண்டியவர். அறிவாளிகளை உச்சத்தில் வைப்பதில்லை நம் அரசியல்வாதிகள். அது ஆபத்து என்பது அவர்களுக்குத் தெரியும்.

விமானப் பயணங்களில் இருந்தபோது பல அரசியல்வாதிகளுடன் பயணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. முகத்தைச் சுளித்துகொண்டவர்களும் உண்டு. வலிய வந்து பேச்சுக் கொடுத்தவர்களும் உண்டு. ஒருமுறை பக்கத்து சீட்டில் பயணம் செய்தவர்கள் மூவர் இருக்கையில் அவனுடன் அமர்ந்திருந்தவர்கள் ஜி.கே.வாசன் மற்றும் கே.வி.தங்கபாலு. ‘நீங்கள் தி.மு.கவை திட்டுவதைவிட அதிகமாக எங்களைத் திட்டுகிறீர்கள்’ என்றார் காங்கிரஸ்காரரான கே.வி.தங்கபாலு. அவன் சொன்னான், ‘என்ன இருந்தாலும் அங்கே ஒரு சுதேசித் தலைவர் இருக்கிறாரே’ என்றான்.

சோனியா காந்தி விதேசி என்று மறைமுகமாக குறிப்பிட்டதால், நொந்துபோனார் அவர். பயணம் முடியும் வரை அவனிடம் பேசவில்லை.

தினமணியில் எழுதிய ஒரு கட்டுரையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவிற்கு பதிலாக அவரது கணவர் ம.நடராசனை முதல்வராக ஏகமனதாக தேர்ந்தெடுத்திருந்தால் ஆட்சி சிறப்பாக இருந்திருக்கும், கட்சி உடைந்திருக்காது என்று எழுதி இருந்தான். அன்றைய தினம் அவன் சென்னையிலிருந்து கோவைக்குச் சென்ற விமானத்தில் அவன் அருகே அமர்ந்திருந்தவர் ஒரு அ.இ.அ.தி.மு.க எம்.எல்.ஏ, அவனை அறிந்தவர்.

அவர், ’ஐயா நீங்கள் எழுதியது சரிதான், ஏனோ அப்படி நடக்கவில்லை, அது கட்சியின் கஷ்டகாலம்’ என்றார். ஒரு பத்திரிகையாளனுக்கு இப்படி நிறைய விஷயங்கள் தெரியவரும். ஆனால் எல்லாவற்றையும் எழுத வேண்டுமென்று அவசியமில்லை. அது நாகரிகமும் அல்ல.

அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் அவன் அருகில் அமர்ந்திருந்தார். அவன் தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. இன்னார் என்று தெரிந்திருந்தால் அவர் அவனிடம் சில உள் விஷயங்களை உளறியிருக்கமாட்டார்.

அவர் பேசிய எல்லாவற்றையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட அவன் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டவில்லை.

அவர் சொன்னதையெல்லாம் பத்திரிகையில் எழுதியிருக்கலாம். ஆனால் எழுதவில்லை. முறையாக பேட்டி காணாத நிலையில் ஒருவர் தன்னிடம் பேசியவர் யார் என்று தெரியாமல் பேசியதை எல்லாம் எழுதுவது தொழில் தர்மம் அல்ல என்பது அவனது எண்ணம்.