தொடர்கள்
அழகு
போர்ட் கொச்சியில் தங்கம் வெள்ளியில் சேலத்து ஓவிய கண்காட்சி - ஸ்வேதா அப்புதாஸ் .

கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேரளா போர்ட் கொச்சியில் 'kochi benella Texture of Art ' என்ற பெயரில் 22 ஆர்ட் கேலரி கண் காட்சி நடந்துகொண்டுருக்கிறது.

20260008143210328.jpg

அதில் ஒரே தமிழ் ஓவியரான சேலத்தை சேர்ந்த காயத்திரி தேவி தன் கைவண்ணத்தில் உருவான 18 ஓவியங்களை காட்சி படுத்தியுள்ளார் .

அத்தனை ஓவியங்களும் கண்ணை கவர்வதாகவே இருக்கிறது .

இவருடைய அனைத்து ஓவியங்களும் இயற்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது .

20260008143247557.jpg

" என்னுடைய முதல் சோலோ ஆர்ட் கண்காட்சி அதிலும் கேரளத்தில் முக்கியமான டூரிஸ்ட் ஸ்பாட்டில் வைத்திருப்பது எனக்கு ஒரு கிப்ட் தான் .

' Hymn of the Hidden Terrains ' என்ற ஓவியங்களை டிசம்பர் மாதம் வரைந்தேன் .

கடந்த ஆறு வருடமாக ஓவியம் வரைந்து வருகிறேன் .

20260008143334978.jpg

'Terrae Essence' என்பது என் ஓவியங்களின் பெயர் .. மலைகள் சமவெளிகள் , ஓடைகள் என்று வடிவமைத்தேன் .இந்த படைப்பில் இயற்கை செடிகளின் இலை மற்றும் சாயங்கள் , 22 கேரட் தங்க தகடு , 99.9 சதவிகிதம் பித்தளை , வெள்ளி தகடு ,காபி தூள் , கரி தூள் என்று கலந்து வரைந்த அழகிய ஓவியம் .

என் ஓவியங்களை தொட்டு பார்க்கலாம் நம்முடைய ஆறாம் அறிவை தொடும் ஓவியங்கள் என்னுடைய படைப்பு .

' Autumn Echoes ' என்ற இயற்கை காட்சியை வரைந்துள்ளேன் .

மற்ற ஒரு படைப்பு ' Beneath The Brew' முழுமையாக கையில் வடிவமைத்தது காபி தூள் மற்றும் காபி கொட்டையை கொண்டு வரைந்த ஒன்று என்று கூறும் காயத்திரி தேவி சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதை பழக்கமாக கொண்டுள்ளார் .

" எனக்கு கோவிட் காலம் மிகவும் கைகொடுத்தது .எந்த தொந்தரவும் இல்லாமல் இயற்கை அமைதியாக சுத்தமாக கழித்த அந்த நேரங்களில் என் கரங்கள் இயற்கை ஓவியங்களை தீட்டியது தான் அருமையான நேரம் .

என் படைப்புகள் எல்லாம் வீட்டில் இருந்தே வரைகிறேன் .

20260008143554941.jpg

ஆன் லைனில் என் ஓவியங்களை காட்சி படுத்த யு எஸ் , துபாய் என்று கிளைண்ட்ஸ் இடப்பெற்றிருப்பது என் கலைக்கு கிடைத்த அங்கீகாரம் " என்கிறார் மெய்சிலிர்ப்புடன் .

தற்போது போர்ட் கொச்சியில் நடைபெறும் இந்த ஆர்ட் கெலரிக்கு வெளிநாட்டு ரசிகர்கள் வந்து சென்று ஓவியங்களை வாங்க புக் செய்திருப்பது மிக பெரிய வெற்றி கயாத்திரிக்கு .

இவரின் கணவர் அன்பழகன் , புதல்வர்கள் சிவதிவ்வியன் மற்றும் சாய் ஆதித்யன் மிக பெரிய பக்கபலம் எல்லா உதவிகள் மற்றும் ஐடியா கூறுவது தான் இவரின் படைப்பின் வெற்றியாம் !.

20260008143501369.jpg

ஒரு பக்கம் தன் அரிய படைப்புகளை கண்காட்சி படுத்துவது அதே சமயம் வளரும் ஓவியர்களுக்கு பயிற்ச்சி கொடுப்பது மற்றும் அவர்களின் படைப்புகளை சேலத்தில் காட்சி படுத்தவேண்டும் என்ற கனவில் இருக்கிறேன் என்று கூறுகிறார் காயத்ரிதேவி .