தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா -லைட் பாய்

ஜனநாயகன்

20260009135220674.jpg

ஜனநாயகன் ட்ரெய்லரை பின்னுக்கு தள்ளி பராசக்தி ட்ரைய்லர் சமூக வலைதளத்தில் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

ஸ்ரீ லீலா

20260009153454616.jpg

"நான் அஜித்தின் தீவிர ரசிகை. அவர் அற்புதமான ரொம்ப கூலான மனிதர் .அவர்போல் எனக்கும் கார் ரேசிங்கில் ஆர்வம் அதிகம் "என்று நடிகை ஸ்ரீ லீலா சமீபத்தில் தந்த பேட்டி தற்சமயம் வைரலாகி கொண்டு இருக்கிறது.

மாளவிகா மோகனன்

20260009153915448.jpg

"ஒரு நடிகையாக என்னையே நானே ஆராய்ந்து பார்ப்பதற்கு பிடித்திருக்கிறது" என்கிறார் நடிகை மாளவிகா மோகனன்

நயன்தாரா

20260009154539210.jpg

பாலகிருஷ்ணா படத்திலிருந்து நயன்தாரா நீக்கம். இல்லை இது வெறும் வதந்தி இப்படி ஒரு பட்டிமன்றம் தற்சமயம் தெலுங்கு பட உலகில் நடந்து வருகின்றது.

கீர்த்தி ஷெட்டி

2026000915503777.jpg

"இந்தி மொழி தெரியும் என்பதால் எனக்கு இந்தியில் நடிப்பது வசதி தான். ஆனால் அதைவிட தென்னிந்திய படங்களிலே அதிக அளவு நடிக்க நான் விரும்புகிறேன் ஹிந்தியில் எனக்கு விருப்பம் இல்லை" என்கிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி .

ராஷ்மிகா

20260009170038892.jpeg

ராஷ்மிகா சம்பளம் இப்போது 12 கோடி.

ரஜினி

20260009155632403.jpg

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கமல் தயாரிக்கும் படம் அடுத்த பொங்கலுக்கு ரிலீஸ்.

ருக்மணி வசந்த்

20260009155918752.jpg

கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யாஷ்,கியாரா அத்வானி ,ஹீமா குரேஷி,நயன்தாரா, ருக்மணி வசந்த் ஆகியோர் நடித்துள்ள டாக்சிக்படம் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகும் என்ன சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் தற்சமயம் வைரல் ஆகிறது.

கே. பாக்யராஜ்

20260009165318754.jpeg
15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு தமிழ் படத்தை இயக்க இருக்கிறார் கே.பாக்யராஜ். சினிமாவில் 50 ஆண்டு கடந்ததை தொடர்ந்து அவருக்கு எடுத்த பாராட்டு விழாவில் இந்த தகவலை சொல்லி இருக்கிறார்.

ஸ்ரேயா சரண்

20260009171021922.jpeg

ஸ்ரேயா சரண் மண்பானை செய்யும் வீடியோ ஒன்று தற்சமயம் வைரலாகிக் கொண்டிருக்கிறது புத்தாண்டுக்காக ஒரு ரிசார்ட்டில் தங்கும் போது எடுத்த வீடியோ அது

சிவகார்த்திகேயன்

20260009164502593.jpeg

பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு சம்பளமாக முப்பது கோடி ரூபாய் பெற்று இருக்கிறார். மெரினா படத்தில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஆரம்பமானது அவரது சினிமா வாழ்க்கை.பராசக்தி பட இயக்குனர் கொங்காரா"தணிக்கை குழுவினர் அவ்வளவு மோசமானவர்கள் இல்லை என்று ஒரு கருத்து தெரிவித்திருக்கிறார். ஜனநாயகன் படம் சர்ச்சையில் சென்சார் சிக்கி இருக்கும் போது அவர்களுக்கு ஆதரவு குரல் இது.