தொடர்கள்
அரசியல்
வலையங்கம்

­

வலையங்கம்

தோல்வியில் ஜெயிக்கும் ஜனநாயகம்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிற வேட்பாளர்களுக்கெல்லாம் சின்னம் தரப்படுகிறது! ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலே ஜனநாயகத்தின் அவமானச் சின்னமாகப் போய்விட்டதே!

சில மாதங்களுக்கு முன்பே நடைபெறவேண்டிய இந்த இடைத்தேர்தல், திகைப்பூட்டுமாறு நடந்த பலகோடி பணப் பட்டுவாடாக்களால் ஒரேடியாக ரத்து செய்யப்பட்டது! இப்போது அங்கே மீண்டும் தேர்தல்!

முன்பிருந்த வேட்பாளர்களே தைரியமாக களத்தில் இறங்குகிறார்கள். அவர்களுடன் புதியவர்களும் சேர்ந்து - ஏராளமான சுயேச்சைகளை கணக்கில் சேர்க்காமல் - ஏழுமுனைப் போட்டியாம்!

முன்பைவிட இப்போது தேர்தல் கமிஷன் அதிக கெடுபிடிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. தொகுதி முழுக்க சி.சி.டி.வி. காமிராக்களால் கண்காணிக்கப்படுகிறது. மாலை ஐந்து மணிக்கு மேல் தேர்தல் பிரசாரத்துக்கு தடை. வீடு வீடாக வோட்டு சேகரிப்பதற்கு கூட தடை உண்டு போலும்! அதிகப்படியான அதிகாரிகள் தொகுதியை சுற்றிச் சுற்றி வருகிறார்கள்! வாகன சோதனைகள்! துணை ராணுவம் துப்பாக்கியுடன் காவல்! தேர்தல் நெருங்க - இன்னும் கெடுபிடிகள் கூடும்!

அமைதியாக மக்கள் தங்கள் உரிமையை உணர்ந்து செய்ய வேண்டிய காரியம் - வாக்களிப்பது! ஆனால் ஏதோ கலவர பூமி நடுவே ஜனநாயகம் காப்பாற்ற வேண்டியது போன்ற காட்சி!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவை வேறுவிதமாகத்தான் எடைபோட வேண்டும். வெற்றி இதில் முக்கியமல்ல. மக்கள் இங்கே யாரை நிராகரிக்கிறார்கள், தோல்வி யாருக்கு என்பதில்தான் உண்மையான அர்த்தம் இருக்கிறது.

பணபலம், அதிகார பலம், சாதி பலம், வேறு கவர்ச்சிகள் - இவற்றின் சக்தி எப்படி இருந்தது என்பதை ‘தோல்வி’களை வைத்துத்தான் ஓரளவு அறிய  முடியும்.

ஜனநாயகம் எந்த திசை நோக்கி செல்கிறது என்பதை தோல்விதான் உணர்த்தும்.

****

2017110611002095.jpg

குடவோலை... குடங்கள்...!

‘குடவோலை’ முறை தமிழ்நாட்டில் மன்னர் காலத்தில் இருந்தது. தமிழ்நாட்டில் தேர்தலில் முதன் முதலில் வாக்காளர்களுக்கு பிளாஸ்டிக் குடங்கள்தான் கட்சிகளால் ‘லஞ்சமாக’ தரப்பட்டது! பிறகு எவர்சில்வர் குடங்கள்!

வோட்டுக்கு ஐந்து ரூபாய் லஞ்சம் தரப்பட்டதாக குற்றச்சாட்டு கிளம்பியது - காஞ்சிபுரம் சட்டமன்ற தேர்தலில்! காங்கிரஸ் வேட்பாளரால்! அறிஞர் அண்ணா போட்டியிட்டார் தி.மு.க. சார்பில்! தோற்றார்! ஆனால் அவர் புகழ் இமயத்தை தொட்ட  காலம் அது! பிறகு ராஜ்யசபா உறுப்பினரானார்!