தொடர்கள்
பொது
ஆண்ட்ராய்டு போன் வாங்கினால் ஆடு இலவசம் - ஒரு அடேங்கப்பா விளம்பரம்

எதிர்வரும் டிசம்பர் 23-ம் தேதி உலக விவசாயிகள் தினமாம். அதையொட்டி வாழப்பாடி பேருந்து நிலையத்தில் மொபைல் விற்பனையகம் வைத்திருக்கும் கந்தா பிரபு ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார்.

”999 ரூபாய்க்கு மொபைல் வாங்கினால் உயிருள்ள கோழி ஒன்று இலவசம். ஆண்ட்ராய்டு 4ஜி மொபைல் வாங்கினால் வெள்ளாட்டுக் கிடா இலவசம்”

வாட்ஸப், ஃபேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் என்று செம்ம வைரலானது இந்த விளம்பரம். நான்கே நாட்களில் பல்லாயிரக்கணக்கான அழைப்புகளுக்கு பதில் சொல்லி மாளமுடியவில்லை கந்தா பிரபுவினால்.

5-ம் தேதி நாளிதழ்களில் அவர் சார்பில் அவருடைய வழக்கறிஞரின் அறிவிப்பு ஒன்று வெளியானது. “ஏற்கனவே வெளியிட்ட இலவச கோழி / ஆடு திட்டம் ரத்து செய்யப்படுகிறது” என்றது அந்த அறிவிப்பு.

என்னாச்சு?

“இதே போல அப்துல்கலாம் ஐயா பிறந்தநாள், சுதந்திரநாள் என்று பல முக்கிய தினங்களின் போதெல்லாம் சலுகை விலையில் போன் விற்பனை செய்திருக்கிறேன். மரக்கன்றுகள் கொடுத்திருக்கிறேன். ஆனால் இந்தத் தடவை இந்த விளம்பரம் இப்படி வைரல் ஆகும் என்று எதிர்பார்க்கவேயில்லை. இத்தனை பேருக்கு கொடுத்துச் சமாளிக்க முடியாது என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. யாரிடமும் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது. நியாயமான முறையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். விரைவிலேயே என்னால் முடிந்த அளவிற்கான வேறொரு திட்டத்தை அறிவிப்பேன்” என்றார் கந்தா பிரபு

- மாயவரத்தான் கி. ரமேஷ்குமார்20171105130739884.jpg20171105130810794.jpg20171105130831632.jpg

­