தொடர்கள்
உணவு
ஒப்பட்டு

’ஓ’ போடவைக்கும்

ஒப்பட்டு

20171105174014604.jpg

கன்னடர்கள் யுகாதி பண்டிகையின் போது செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்தான் ஒப்பட்டு. இது நம்ம ஊர் போளி. ஒப்பட்டுவில் துவரம் பருப்பு சேர்ப்பார்கள்... நாம் இங்கு கடலைப்பருப்பு சேர்த்து செய்வதுண்டு.  பயறுகளை ஊற வைத்து வேக வைத்து கார ஒப்பட்டும் இதே முறையில் செய்யலாம்.  

தேவை:

துவரம் பருப்பு - ஒரு கப், 
மஞ்சள்தூள்– ஒரு டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – ஒரு தேக்கரண்டி, 
கோலாப்பூர் வெல்லம் – வெந்த பருப்பிற்குத் தக்கவாறு, 
சிரோட்டி ரவை, மைதா– தலா கால் கிலோ 

சமையல் எண்ணெய் - தேவையான அளவு

தேங்காய்த்துருவல் – ஒருமூடி 
ஏலக்காய்- 3
கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை: 

செய்முறை:

அடி கனமான பாத்திரத்தில் நீரை விட்டு, கொதிக்க விடவும்.  துவரம் பருப்பை தண்ணீர் விட்டு அலசி, மஞ்சள்தூள், நல்லெண்ணெய்சேர்த்து வேக வைத்து மசிக்கவும். மைதாவுடன், ரவை, மஞ்சள்தூள், தேவையான உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில்பிசையவும்.  நாலு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி  அரை மணி நேரம் ஊற வைக்கவும். வெந்த பருப்பு சூடாக இருக்கும்போதே, பொடித்த வெல்லம், கசகசா, தேங்காய்த் துருவலை சேர்த்து அடுப்பில் சிம்மில் வைத்து கிளறவும்.  ஏலக்காயை நைசாக பொடித்து சேர்க்கவும்.  பிசைந்த மைதா, ரவை இரண்டையும் நன்றாக இழுத்து உரலில் இடித்துக் கொள்ளவும்.  தோசைக் கல்லை காயவைத்து, பேப்பரில் இடித்த மைதாவை போட்டு, நடுவில் பூரண உருண்டைகளை வைத்து மூடி தட்டவும்.  சப்பாத்திக் குழவியில் மிருதுவான ஒப்பட்டுக்களாக  தட்டி இருபுறமும் சுட்டு எடுக்கவும்.  

ஒப்பட்டு ருசி... ஓஹோ... 

- ஜூவாலா 

­