
திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர்!! - ஆரூர் சுந்தரசேகர்.
My husband , a Carnatic musician, usually ends his concert with Thirupugazh only. So I happened to hear the different songs. As it is mentioned it is very pleasant to listen to because it sounds good. Once we hear them we totally surrender ourselves to Lord Muruga. Sincerely grateful to Aroor Sundarasekar for giving this article to know stupendous about Arunagirinathar.
எஸ். சாய்லக்ஷ்மி, சென்னை
விற்பனைப் பொருள்... - ஆர்னிகா நாசர்
நியாயப்படி நடந்த வர்த்தகத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நமக்கு நியாயமாக படும் ஒரு செயல், மற்றவர்களுக்கு அநீதியாக தென்படலாம் என்பதை அழகுற விளக்கிய ஆர்னிகா நாசரின் கைவண்ணம் பாராட்டுக்கு உரியது.
குமாரவேல், திருமலை
திருப்புமுனை - மாலா ரமேஷ்
திருப்புமுனை குறித்து மிக தத்ரூபமான வரிகளில் கவிதையை அழகுற வெளிப்படுத்தி இருக்கிறார் மாலா ரமேஷ்.
பாகீரதி ராமன், மேற்கு மாம்பலம்
போதைப் பொருள் வழக்கில் நடிகை கைது! - நமது நிருபர்
இவ்வுலகில் பார்க்க அழகாக இருக்கிற எல்லாமே ஆபத்துதான் போலிருக்கு. நடிகைகள் வேறு பிசினஸ் கைவசம் வைத்து நிறைய சம்பாதிக்கின்றனர் என்கிறார்களே... அது இந்த மாதிரிதானா?
பத்மினி ராகவன், ஐதராபாத்
" “ஊட்டி.. சில்ஹல்லா நீர் மின்திட்டம்.. - ஒரு கேள்விக்குறி?! - ஸ்வேதா அப்புதாஸ்
ஊட்டி பெலஹல்லா நீர் மின் திட்டம் கேட்க நல்லாத்தான் இருக்கும். அது நடைமுறைக்கு வரும்போது சீர்குலையுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. நல்லதே நடக்கட்டும்.
விருத்தகிரிநாதன், பொள்ளாச்சி
சபாஷ் ஷைலஜா மேடம்..! - தில்லைக்கரசி சம்பத்
கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து, உலகளவில் புகழ்பெற்ற பெண் அமைச்சர் ஷைலஜாவின் தன்னலமற்ற சேவை பாராட்டுக்கு உரியது.
பார்த்திபன், விழுப்புரம்
திருப்புகழ் அருளிய அருணகிரிநாதர்!! - ஆரூர் சுந்தரசேகர்.
திருப்புகழ் இயற்றிய அருணகிரிநாதர் பற்றி மிக கலைநயத்துடன் ஆரூர் சுந்தரசேகர் விளக்கியுள்ளார். போற்றிப் பாதுகாக்க வேண்டிய தகவல்களாக உள்ளன.
சவுந்தரராஜன், சீர்காழி
"பக்தர்கள் இல்லா வேளாங்கண்ணி ஆலய திருவிழா!" - ஸ்வேதா அப்புதாஸ்
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை தங்களது நேரலை தகவல் படித்து மகிழ்ந்தோம். இந்தாண்டு முழுவதும் மாதாவை உளமுருக ஜெபித்து, அடுத்த விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம். சிறப்பான வர்ணனை.
செபாஸ்டின் ஆன்டனி, காரைக்கால்
மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
அதுக்குத்தான் புடவை தேர்வு விஷயத்துல நாம வாய்மூடி மவுனமா இருந்தா, நமக்கு கர்ச்சீப்பாவது மிஞ்சும். இல்லேன்னா நம்மளை சுத்தல்ல விட்டுருவாங்க. உண்மையிலேயே நமக்கு கிடைத்த மதிப்பு மிக்க மனைவிகள்தான்.
ராமச்சந்திரன், பெங்களூர்
வாவ் வாட்ஸ்ப்!
சென்ற வார வாட்ஸ் அப் படங்கள் விளையாட்டா இருந்தாலும் ரசிக்க வைத்தது.சைலண்ட் வித் ஸ்மைல் என சொல்லலாம்.
கௌஷிக், தீட்சிதா, மயிலை
முகங்கள்... - ஆசிரியர் தினம்... - மரியா சிவானந்தம்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மரியா சிவானந்தம் சந்தித்த அனைத்து முகங்களிலும் பெருமிதம் பளிச்சென்று தெரிகிறது. ஆசிரியர் என கூறுவதே ஒரு கெத்துதான்!
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
வந்தார்கள்... வென்றார்கள்! - மதன்
டெல்லி மீதான படையெடுப்புகள், அதன் வலிகள், சேதங்கள், ஆண்ட அரசர்கள், போரிட்ட மன்னர்கள் குறித்து தகவல்கள் திரட்டி, எங்களை வந்தார்கள் வென்றார்கள் தொடரில் மதன் திகைக்க வைத்துவிட்டார்.
ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை.
கொரோனாவை கட்டுப்படுத்த... - பார்த்திபராஜ்
கனடா பெண் அதிகாரி கூறியது கரெக்ட்தான். மத்த நேரத்துல வாயை, மூக்கை மூட சொல்றீங்க. அந்த நேரத்துலயும் மாஸ்க் மாட்டினா பிரச்னை வராதுல்ல!
அரவிந்த், கோவை
உள்ளதைச் சொல்வேன்! - அண்ணாதுரை கண்ணதாசன்
அண்ணாதுரை கண்ணதாசனின் உள்ளதை சொல்வேன், ஒவ்வொரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக இயல்பாக கூறுகிறது. ஒரு வித்தியாச படைப்பு.
கோவிந்தராஜ், திருவையாறு
ராக தேவதைகள்... - மாயவரத்தான் சந்திரசேகரன்
சாருகேசி ராகத்தை போல் அதன் ராக ஆலாபனையில் கொடிநாட்டியவர்கள், பாடல்களின் சிறப்புகளை மிக அழகான கட்டுரையாக வடித்திருக்கிறார் மாயவரத்தான். இது எங்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
சாந்தா நாராயணன், அடையாறு.
தந்தை உடலை சுமந்த 6 மகள்கள்... - அபிமன்யு
தந்தையின் உடலை சுமந்த 6 மகள்கள் கட்டுரையை படிக்கும்போதே கண்ணில் நீர் மல்கியது. எனினும் மகன் ஸ்தானத்தில் இறுதிசடங்கை நடத்தியது நெகிழ வைத்தது.
லட்சுமி ராகவன், பழவந்தாங்கல்
உலகை குலுக்கிய வழக்குகள்! – ஆர் .ராஜேஷ் கன்னா.
அடப்பாவமே... நம்ம நாட்டுலதான் ஒரு சாதாரண கொலை கேஸ் வருஷக்கணக்குல இழுக்குதுனு பார்த்தா, ஸ்வீடன் பிரதமர் கொலை விஷயத்திலும் இதே நிலைதானா?
ரேணுகா ஹரிஹரன், சாலிகிராமம்
காலமே போதி மரம்... - 9 - என்.குமார்
காட்சி 1: கண்முன்னே நாடகத்தை வந்து நிறுத்தியது.👏 காட்சி 5: நாடகக்கலைஞனின் முதல் பார்வையாளன் 👏👏 “அப்பா… நடிக்கறதை நிறுத்திட்டாரு இதன் அர்த்தம் யாரும் எதிர்பார்காதது
பிந்து சிவா, அமெரிக்கா
காலமே போதி மரம்... - 9 - என்.குமார்
கர்ணபார்ட் குழந்தை மாறனின் புறக்கண்ணாடியில் குவிந்து கிடக்கும் அரங்கம் காணா அரங்கேற்றங்களையும் எங்கள் நினைவில் அரங்கேற்றி விட்டீர்கள். அவரது அகக்கண்ணாடியில் பிரேம் போட்டு மாட்டியிருந்த பிரேமாவின் நேசம் தொடராமல் போன வருத்தம் வலித்தது, சிவாஜியின் தத்ரூபம் பிரம்மிப்பை மீள் பதிவு செய்தது கிளி இளவரசியுடன் ஓடிப்போன இளைஞனின் முகம் மனதில் நிழலாடியது. நீலவேணி தன்னை ஆளாக்கிய கர்ண பிரதாபம் இனி தொடராது என்று உரைத்த விதம் அவளொரு உன்னத கலைஞனின் மகளென மதிக்க வைத்தது. காலக் கண்ணாடியின் பிரதிபலிப்புகள் தொடரட்டும் அதில் நீங்கள் பூசும் கதை ரசம் எங்களை பளபளப்புடன், விழி விரிய படித்து வியக்க வைக்கிறது.🙏
பவானி எம், பெங்களூரு
விழி (ப்) புணர்வு... - பா.அய்யாசாமி
கண் தானம் செய்ய நல்ல மனது வேண்டும். அவர் மூலமாக இருவர் பயன் அடைவார்கள். நல்ல கதையில் ஒரு நல்ல msg. அய்யாசாமி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சாவித்திரி நடராஜன்
திராவிடக் கட்சிகளின் தேர்தல் ஜுரம்... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)
தேர்தலுக்கு முன்பே இரு திராவிட கட்சிகளின் கூட்டல்-கழித்தல், முஸ்தீபுகள், கட்சி பதவிகளுக்கு மோதல்களை பார்த்து கண்ணை கட்டுது. இன்னும் என்னென்ன காமெடி காட்சிகள் அரங்கேறுமோ? தொண்டன் பாடு திண்டாட்டம்தான். தலை ஒரு பக்கம், வால் மறுபக்கம்னு அலைய வேண்டியதுதான்.
மாயா குப்புசாமி, வடபழனி
வலையங்கம்
மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு முன்ஜாமீன் கிடையாது என நீதியரசர் ஜெகதீஷ் சந்திரா முதல் முயற்சி எடுத்திருக்கிறார். இது விரைவில் சட்டமாகட்டும். இல்லையேல், தமிழகமே மணல் அரிப்பில் மூழ்கி மறையட்டும். அரசியல்வாதிகளுக்கு எங்கும், எதிலும் வருவாய்தான் முக்கியம். பாதிக்கப் போவது ஓட்டு போட்ட மக்கள்தானே!
ராஜலட்சுமி, வேளச்சேரி
காலமே போதி மரம்... - 9 - என்.குமார்
கர்ண பிரதாபம் படித்தேன். நாடகக் கலைஞனிடமிருந்து நவரசம் வெளிப்படுவது போல் நவ காட்சிகள் அமைத்து கர்ண பிரதாபத்தை விவரித்தது சிறப்பு. குழந்தை மாறன் - நடிப்புத் திறன், கர்வம், கோபம், பாசம், ஆச்சரியம், வருமையிலும் மனநிறைவு, ஏமாற்றம், நினைவுத்திறன், துக்கம், யோகியை உணர்தல், நடிப்பு நிறுத்தம் என்று எத்தனை பரிமாணஙாகளைக் கண்முன்னே நிறுத்திவிட்டீர்! அந்த நிலைக் கண்ணாடி மாறனின் பல வேடங்களையும் முக பாவங்களையும் கண்டிருந்ததால் உங்கள் கர்ண பிரதாபத்தில் அதுவும் ஒரு முக்கிய கதாபாத்திரமாய் மாறியதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நிலைக் கண்ணாடி நம் மனத்தில் நிலை பெற்றது. குழந்தையின் குழந்தைப் பருவம் தொடங்கி குழந்தையின் குழந்தை மடி தாவி குழந்தையின் பேத்தி வரை ஒரு அறுபதாண்டு கால குழந்தையின் கதையை, கர்ணனின் பிரதாபத்தை அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். எவ்வளவோ நலிந்த நாடகக் கலைஞர்களின் முகங்களும் மெதுவாக வந்து சிரித்துவிட்டு போகிறது கர்ண பார்ட்டில். வாழ்த்துகள் குமார்.
முரளிகிருஷணா சம்பத், பெங்களூரு
திருப்புமுனை - மாலா ரமேஷ்
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறது திருப்புமுனை. அவமானம் என்பது சாதனைகளின் அடித்தளம்தான். கவிஞருக்கு வாழ்த்துக்கள்.
சிவகுருநாதன், சென்னை

Leave a comment
Upload