ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் இரண்டு தீவிரவாதிகள் ஒரு காபிக் கடையில் பேசிக் கொண்டிருந்ததை காபி கடை ஓனர் கேட்டுக் கொண்டிருந்தான்.
முதல் தீவிரவாதி: நாளைக்கு ஒரு பதினஞ்சு பேரையும் ஒரு கழுதையையும் கொல்லப் போறோம்.
காபி கடை ஓனர் கேட்டான்: கழுதைய எதுக்கு?
இரண்டாவது தீவிரவாதி சொன்னான்: நான் சொன்னேன் பாத்தியா யாருமே அந்த பதினஞ்சு பேரைப் பத்தி கவலைப் பட மாட்டாங்கன்னு…..
பேஸ்பால் ரசிகன்

முக்கியமான பேஸ்பால் மாட்ச் நடக்கவிருந்தது.
பேஸ்பால் விளையாட்டில் ஸ்டேடியத்தில் முதல் வரிசையில் உட்கார்ந்து விளையாட்டை ரசிக்கத் தயாராக இருந்த ரசிகனின் பக்கத்து சீட் காலியாக இருந்தது.
அங்கு ஒரு ஆள் வந்து இந்த இடம் காலியாக இருக்கே… யாராவது வராங்களா என்று கேட்டான்.
பேஸ்பால் ரசிகன் சொன்னான் “இல்லை. வரலை. இது என் மனைவிக்கான இடம்.”
அந்த ஆள் கேட்டான் “உங்கள் மனைவி எங்கே...?”
பேஸ்பால் ரசிகன் சொன்னான் “அவ ரெண்டு நாளைக்கு முன்னாடி இறந்து போயிட்டா...”
அந்த ஆள் சொன்னான். “ஓ கடவுளே. எவ்வளவு சோகமான விஷயம். இந்த இடத்தை நீங்க மத்த குடும்ப உறுப்பினர்கள் இல்லைன்னா நண்பர்களுக்கு கொடுத்திருக்கலாமே?”
பேஸ்பால் வெறியன் பதில் சொன்னான். “குடுத்துருக்கலாம் தான். ஆனா எல்லாருமே இப்ப அவளோட இறுதிச் சடங்குல இருக்காங்களே என்ன செய்ய..?”
நீச்சல் அழகி

வெளிநாடுகளில் உள்ள கடற்கரையில் நினைத்த மாத்திரத்தில் குளிக்க முடியாது. அதற்கு லைஃப் கார்டு என்ற உயிர்காப்பாளர்கள் பணியில் இருந்தால் தான் குளிக்க முடியும்.
வெளிநாட்டு கடற்கரையில் காவலர்: மேடம் மன்னிக்கவும். இங்கே நீங்கள் குளிக்க முடியாது. லைஃப் கார்டு டியூட்டியில் இல்லை. தடை செய்யப்பட்ட இடம்.
இளம் பெண்: இதையேன் நான் என்னுடைய அத்தனை உடையையும் களைந்து நிர்வாணமா நிற்பதற்கு முன் சொல்லவில்லை?
காவலர்: உடையைக் களைந்து இப்படி நிற்பது தடை செய்யப்படவில்லையே!
கார் மொழி.

ஒரு ஆண் இறங்கி கார் கதவை ஒரு பெண்ணுக்கு திறந்து விட்டால், ஒன்று புது மனைவியாக இருக்க வேண்டும். அல்லது புது காராக இருக்க வேண்டும் என்று அறிக.
ஸ்டேசியின் வீட்டில்

ஒரு ஆள் பாரில் உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இளம் பெண்ணை பார்த்தான். “ஹலோ உன் பேர் என்ன?”
அவள் “ஹலோ என்றாள். என் பெயர் ஸ்டேசி. உன் பெயர்?”
ஜிம் என்றான்.
“ஜிம் என் வீட்டுக்கு இன்று இரவு வருகிறாயா?” ஜிம்மால் அதை தட்ட முடியவில்லை. “போலாம் வா...”
ஸ்டேசி வீட்டுக்கு போனதும் அங்கிருந்த ஒரு படத்தில் ஒரு இளைஞனைப் பார்த்தான் ஜிம். இது யாராக இருக்கும். ஒரு வேளை ஸ்டேசியுடன் கசமுசா நேரத்தில் வந்து தொலைத்தால் பிரச்சினையாகி விடுமே! கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்தான்.
“இது யாரு உன் அண்ணனா?”
“இல்லை ஜிம். என் அண்ணன் இல்லை” ஸ்டேசி ஒரு லேசான குலுக்கல் சிரிப்புடன் சொன்னாள்.
“அப்ப இது உன் கணவனா?”
“இல்லை. ச்சீ” மறுத்தாள் ஸ்டேசி.
“அப்ப உன் பாய் ஃப்ரெண்டு தான்” என்றான் ஜிம்.
“அதுவும் இல்லை” என்றாள் ஸ்டேசி.
ஜிம் இதற்கு மேலும் ஊகிக்க முடியாமல் கை விட்டு “சரி, யார் இது சொல்லு” என்றான் சற்று எரிச்சலுடன்.
ஸ்டேசி சொன்னாள் “ நான் தான் அது. ஆபரேஷனுக்கு முன்னாடி..”

Leave a comment
Upload