வாழ்க்கையில் என்ன தான் சுகபோகங்கள் கிடைத்தாலும், ஆபத்தும் நம்மை பின் தொடர்வது இயற்கை விதியாகும்!
1800 ஆண்டு… லண்டனின் கிழக்கு எல்லையான ஒயிட் சேப்பல் பகுதிக்கு யூதர்கள் மற்றும் ரஷ்யர்கள் புலம்பெயர்ந்து வந்து தொழில்களை தொடங்க ஆரம்பித்தனர்.
ஒயிட் சேப்பல் பகுதியில் பலதரப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்து வந்ததால், மனமகிழ்வுக்கு கிளப், பார்கள், உல்லாச விடுதிகளில் என களை கட்டியது.
கிட்டதட்ட 1200க்கு மேற்பட்ட விலைமாதர்கள், ஒயிட் சேப்பல் பகுதி முழுவதும் வயிற்று பிழைப்பிற்காக வாழ்ந்து வந்ததால், பாவப்பட்ட பகுதியாக இங்கிலாந்து மக்களால் பார்க்கபட்டது.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நடமாட்டம் அதிகமாகி, மோசமான வன்முறை மற்றும் குற்றங்கள் நிகழ்ந்தாலும், சிற்றின்பத்தினை அடையும் பலவழிகள் எந்நேரமும் திறந்தே இருந்தது என்று சொல்லலாம்.
அது ஓரு நள்ளிரவு நேரம்… ஓயிட் சேப்பல் பகுதி…!
1888 ஆகஸ்ட் 31, பக்ரோ தெருவில் இருந்த மேரி அன் நிகோலஸ் என்ற 42 வயது பெண்மணியின் முகம் சிதைக்கப்பட்டு, தொண்டை அறுக்கப்பட்டு, வயிறு பகுதி கூரிய ஆயுதத்தால் குத்தி கிழிக்கப்பட்டு, மர்மமான முறையில் கொடுரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையாளி யார் என்று புலனாய்வு செயத காவல்துறையினருக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை.
அடுத்து, செப்டம்பர் 8, பிசியான ஹாம்பரி தெருவின் அருகில் 47 வயது மதிக்கதக்க ஆன்னி சேப்மேன் என்ற பெண்மணியின் தலை முழவதும் சிதைக்கப்பட்டு வயிறு தோல் பகுதியில் அடுக்கடுக்காக நூதன முறையில் குத்தி கிழிக்கப்பட்டு பிறப்புறுப்பின் ஒரு பகுதி மற்றும் கிட்னியை லாவகமாக அறுத்து எடுத்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.இந்த கொடுரமான கொலையும், முதல் கொலை போன்றே இருந்தது.கொலையாளி எந்தவித தடயத்தையும் சம்பவ இடத்தில் விட்டு செல்லவில்லை.
என்ன இது பெண்கள் குறி வைத்து கொல்லப்படுகிறார்களே என்று ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையினர் கொலையாளியை வலைவீசி தேட ஆரம்பித்தனர்.
அடுத்தடுத்து கொலைகள் நடந்த பின்பு…. சென்டரல் நியூஸ் ஏஜென்சி என்ற பத்திரிக்கைக்கு செப்டம்பர் மாதம் 28 தேதி ஒரு கடிதம் வந்தது.
ஒயிட் சேப்பல் பகுதியில் மேலும் பலரை தான் கொல்லப்போவதாகவும், தனது முதல் கொலையாளி மேரி அன் நிகோலஸ் என்று ஒப்புக்கொண்டு, ஜேக் தி ரீப்பர் என்ற நபர் கையெழத்து போட்டு அனுப்பி வைத்திருந்தான்.
அடுத்த நாள் இங்கிலாந்து பத்திரிகைகளில் மர்ம கொலையாளி அனுப்பிய கடிதம் பற்றி பிரசுரமானது.
மர்ம கொலையாளியை பிடிக்க காவல்துறையினர் வலைவீசி தேடிகொண்டு இருந்தனர்.
மறுபுறம் பொதுமக்கள் கொலைகாரன் கருப்பு பையில் கொலை செய்வதற்கான கத்தியை வைத்து இருளில் சுற்றி திரிவதாக பொதுமக்கள் இடையே வதந்தி வேகமாக பரவி கிலியை ஏற்படுத்தியது.
மீண்டும் செப்டம்பர் 30, விடியற்காலையில் பெர்னர் தெருவில் இருந்த எலிசபெத் என்ற பெண்மணியின் தொண்டை அறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டார்.
அதே நாள் அடுத்த 45 நிமிடத்தில்…. டோக் தெருவில் இருந்த கேத்தரின் எடோஸ் என்ற பெண்மணியும் தொண்டை அறுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இருந்தார்.
கொலை செய்ப்பட்ட பெண்ணின் குடலை உருவி அவரது தோள் பட்டையின் மீது வீசிப்பட்டு இருந்தது. பெண்ணின் கண் இமைகள், மூக்கின் சிறு பகுதி, வலது காதின் ஒரு பகுதி, கர்பப்பை என சில உடல் பாகங்களை கொலையாளி லாவகமாக அறுத்து எடுத்து சென்று விட்டான்.
ஒரே நாளில் அடுத்தடுத்தது மயிர்கூச்செரியும் இரு பெண்கள் கொலை, உடல் உறுப்புகள் லாவகமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது என லண்டன் முழுவதும் பீதியில் உறைந்தது.
வழக்கம் போல், கொலை நடந்த பகுதிக்கு வந்த போலீசாருக்கு கொலையாளி பற்றிய எந்த துப்பும், தடயமும் கிடைக்கவில்லை.
“யூதர்கள் எதற்கும் குற்றம் சாட்டப்பட வேண்டிய மனிதர்கள் இல்லை! என அருகில் இருந்த சுவற்றில் சாக்பீசால் எழதப்பட்டு இருந்ததை, கொலை நடந்த இடத்தினை பார்வையிட வந்த காவல்துறையின் தலைமை அதிகாரி சர் சார்லஸ் வார்ன் கண்ணில் பட... உடனே தன் அதிகாரிகளை அழைத்து, சுவற்றில் இருந்த வாசங்களை அழிக்க வைத்தார்.
இந்த வாசகம் கொலையாளி எழதியதா என்று ஆராயாமல் அழித்ததால் கொலைக்கான முக்கிய தடயம் அழிக்கப்பட்டதாக அப்போதே போலீசாரால் பேசப்பட்டது.
பெண்களை குறிவைத்து கொலை செய்யும் கொலையாளி ஜாக் தி ரீப்பர் என்பவர் பைத்தியம் பிடித்த மருத்துவர் அல்லது போலந்து பைத்தியகாரன் அல்லது ரஷ்ய ஜார்ஜிஸ்ட் அல்லது பைத்தியகார மருத்துவச்சி(midwife)யாக இருக்கலாம் என்று பல்வேறு புரளிகள் பொதுமக்கள் மத்தியில் உலவியது.
மீண்டும், இரண்டாவது முறையாக சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சிக்கு ஜாக் தி ரீப்பர் கடிதம் அனுப்பி இருந்தார். அதில் கடைசியாக தான் கொலை செய்த கொலையுண்ட பெண்மணி கேத்தரின் காதை காவல் துறைக்கு இந்த கடிதத்துடன் அனுப்ப முடியாததற்கு மன்னிக்க வேண்டும் என்று எழதியிருந்தது.
அடுத்த நாள் காலை நாளிதழ்களில், ஜாக் தி ரீப்பரின் இரண்டாவது கடிதம் பிரசுரமாகி பீதியை கிளப்பியது.
சில நாட்களுக்கு பின்…
அடுத்து, நவம்பர் 9, டோர்செட் தெருவில், 25 வயது மதிக்கத்தக்க அழகான பெண், தன் வீட்டு கட்டிலில் அலங்கோலமாக கொலை செய்யப்பட்டு கிடந்தாள்.
கொலையுண்ட பெண்ணின் தொண்டை அறுக்கப்பட்டு இருந்தது, மூக்கு, மார்பகங்கள் அறுக்கப்பட்டு அறையின் மூலையில் இருந்த ஒரு மேசையின் கீழே அவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
கொலையுண்ட இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து உருவப்பட்ட குடலை, சுவற்றில் இருந்த படத்தின் மீது மாலை போன்று கொலையாளி மாட்டிவிட்டு சென்றிருந்தான்.
கொலையுண்ட பெண்ணின் இதயத்தை மட்டும் கொலையாளி தன்னுடன் எடுத்து சென்று விட்டான்.
வீட்டு வாடகை வசூல் செய்ய வந்த வீட்டின் உரிமையாளர், இளம் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து பதறி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இந்தக் கொலையிலும் கொலைக்கான எந்தவித தடயமும் காவல்துறையினருக்கு கிடைக்கவில்லை…
மூன்று மாதங்களில் அடுத்தடுத்து பதற வைக்கும் ஐந்து கொலைகள். அதுவும் 4 பேர் விலைமாதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விலைமாதர்களை பின்னிரவு அல்லது விடியற்காலை நேரத்தில் குறிவைத்து கொல்லப்படுவதற்கான காரணம் என்ன என்று மக்கள் காவல்துறையிடம் கேள்வி எழப்பினர்.
ஒயிட் சேப்பல் பகுதியில் இரவு முழவதும் காவல்துறை சல்லடை போட்டு கொலையாளியை தேடினர்.
ஐந்து தொடர் கொலையை செய்த கொலையாளியை பிடிக்க முடியாமல் ஸ்காட்லாண்ட் காவல்துறை திணறியது.
காவல்துறை கொலையாளியை பிடிக்க முடியாமல் செயல் இழந்து விட்டது என பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தொடர் கொலை செய்து வரும் ஜாக் தி ரீப்பர் என்ற கொலையாளியை பிடிக்க முடியாததால் தனது காவல்துறை தலைமை பதவியை சர் சார்லஸ் வார்ன் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்து விட்டார்.
ஜாக் தி ரீப்பர் என்ற கொலையாளி யார் என்று காவல்துறை சல்லடை போட்டு தேடிய போது, காவல்துறைக்கு ஒரு துப்பு கிடைத்தது.
மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட பெண்களில் நால்வர் விலைமாதர்கள், இவர்களை கொன்ற கொலையாளி, உடலை லாவகமாக அறுவை செய்யும் திறமை வாய்ந்த மருத்துவராக அல்லது கசாப்புக்காரனாக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் தீர்மானித்து காவல்துறை புலனாய்வு செய்தும், கொலையாளியை பற்றிய எந்த தடயமும் கிடைக்கவில்லை.
அடுத்து, இங்கிலாந்து விக்டோரியா மகாராணியின் பேரன் பிரின்ஸ் ஆல்பர்ட் விக்டர் என்பவர் தான் அடுத்தடுத்த தொடர் கொலைகளில் ஈடுபட்டார், இவர் தான் ‘ஜேக் தி ரீப்பர்’ என்ற பெயருடன் உலாவுகிறார் என்று காவல்துறையினருக்கு கிடைத்த சந்தேக தகவலை விசாரித்த போது எந்தவித தடயமும் ஆதாரமும் கிடைக்கவில்லை.
ஒயிட் சேப்பல் பகுதியில் ஏற்கனவே 5 பெண்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மேலும் 6 பெண்கள் படுகொலை செய்யப்பட்டும், கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் திணறினார்கள்.
5 பெண்கள் கொலை மட்டும் ரிகார்டு படி காவல்துறை வைத்து கொண்டு, மீதியிருந்த 6 பெண்கள் கொலைகளை கணக்கில் இல்லாமல் ஆப் தி ரெக்கர்டாக காவல்துறை வைத்து கொண்டதாக தகவல்.
நான்காவதாக படுகொலை செய்யப்பட்ட கேத்தரின் எடோஸ் உடல் அருகே கிடந்த ஒரு பட்டு சால்வையில் இருந்த ரத்த கறையும், அதில் உறைந்திருந்த விந்தணுவும் டிஎன்ஏ பரிசோதனைக்கு காவல்துறை அனுப்பியது.
சால்வையில் இருந்த ரத்தமும், விந்தனுவும் காவல்துறையினர் பிடித்து சென்ற சந்தேக நபர்களின் டிஎன்ஏவுடன் ஓத்து போகவில்லை .
ஜாக் தி ரீப்பர் என்ற கொலையாளி பழுப்பு நிற முடியும், பழுப்பு நிற கண்கள் கொண்டவனாக இருக்கலாம் என்று நவீன டிஎன்ஏ பகுப்பாய்வு தெரிவித்தது.
ஆனால், இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் சால்வையில் இருந்த ரத்தம் மற்றும் விந்தணுவை டிஎன்ஏ வை பகுப்பாய்வு செய்து கொலையாளி கண்கள் நீலநிறத்தில் இருக்கலாம் என்று தங்கள் மாறுப்பட்ட அறிக்கையினை அளித்ததால், கொலையாளியை அடையாளம் காண்பதில் தற்போது வரை சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜாக் தி ரீப்பர் கொலையை ஆராய்ச்சி செய்து புத்தகம் வெளிவந்தாலும், கொலையாளி யார்? கொலைக்கான காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை.
ஜாக் தி ரீப்பர் கொலையாளி மனநோயாளியாக இருக்கலாம் அல்லது திருமணம் ஆகாத பெண்கள் மீது வெறுப்புடன் இருந்திருக்கலாம். இதனால் விபச்சார பெண்களை குறிவைத்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்திலும் புலனாய்வு செய்யப்பட்டது.
ஜாக் தி ரீப்பர், வாரத்தின் இறுதி நாட்களிலும், அதிகாலையிலும் மட்டுமே கொலை செய்துவிட்டு சம்பவ இடத்தில் எந்த தடயமும் விட்டு வைக்காமல் கொலையாளி லாவகவமாக எஸ்கேப் ஆகியுள்ளது புலனாய்வில் தெரிந்தது.
என்ன தான் காவல்துறையினர் வலைவீசி கொலையாளியை தேடினாலும் ஜாக் தி ரீப்பர் என்பவர் 5 பெண்களை கொலை செய்து இருந்தாலும், யாரையும் பலாத்காரம் செய்யவில்லை என்ற தகவல் உள்ளது.
எனவே ஜாக் தி ரீப்பர் என்பது ஒரு பெண் கொலையாளியாக கூட இருக்கலாம் என்று மற்றொரு கோணத்திலும் காவல்துறையினர் புலனாய்வு செய்தும் கொலையாளி பிடிக்க முடியவில்லை .
அடுத்து, திருமணமான ஒருவர் விலைமாதுவை அதிகாலையில் தேடி செல்ல வாய்ப்பில்லை.
ஜாக் தி ரீப்பர் நிகழ்த்திய கொலையை நேரடியாக பார்த்த சாட்சிகள் யாருமில்லை.
ஓயிட் சேப்பல் என்ற பரப்பரப்பான ஜன நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதியில் ஒருவர் கொலை செய்துவிட்டு, தப்பித்து செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்ற ரீதியிலும் காவல்துறையினர் சிந்தித்தனர்.
ஜாக் தி ரீப்பர் என்ற கொலையாளி ஓயிட் சேப்பல் பகுதியில் வேலை செய்துகொண்டே, இரவு நேரத்தில் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று புலனாய்வு துறையினர் நம்பினர்.
ஜாக் தி ரீப்பர் கொலையாளி ஒருவரா அல்லது இருவரா அல்லது பெண்ணா என்று 130 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் தலையை பிய்த்து கொண்டு இருக்கின்றனர்.
130 ஆண்டுகள் கடந்த நிலையில், சம்பவத்தில் ஈடுப்பட்ட கொலையாளி ஜாக் தி ரீப்பர் தற்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்பதே ஆறுதலான விஷயம்!
2006 ஆண்டு நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி ஜாக் தி ரீப்பர் மாதிரி கற்பனை புகைப்படத்தினை காவல்துறையினர் வெளியிட்டனர்.
ஜாக் தி ரீப்பர் எப்படி இருப்பார் என்று இதுவரை யாரும் நேரில் பார்த்ததில்லை.
ஜாக் தி ரீப்பர் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாததால் அவர் மீது இருந்த வழக்குகள் நீதிமன்றத்தில் எப்போதோ முடித்து வைக்கப்பட்டு விட்டது.
ஆனால், இந்த சீரியல் கில்லர் மீண்டும் தங்களை தாக்குவாரோ என்ற பயம் ஒயிட் சேப்பல் மக்களுக்கு இன்று வரை நிலவுகிறது!
Leave a comment
Upload