பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோடி !
இன்று 70 வயது பூர்த்தி செய்கிறார்.
மோடியின் 70வது பிறந்த நாளுக்கு 70 தகவல்கள்.
1.மோடி 1950 ல் பிறந்தவர்.
2,உடன் பிறந்தவர்கள் ஐவர்.
3.தந்தைக்காக சிறு வயதில் டீ விற்றவர். பின்னர் தானே ஒரு டீ ஸ்டாலும் வைத்தார்.
4.அன்னை உயிரோடு இருக்கும் போது பதவியேற்ற முதல் பிரதமர் மோடி தான்.
5.எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ்.பால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் சேர்ந்தவர்.
6.குழந்தை விவாகம் செய்விக்கப்பட்டு யசோதா பென்னை பிரிந்து சென்றவர்.
7.1971 முதல் முழு நேர ஆர்.எஸ்.எஸ். சேவகர்.
8.1985ல் தான் பா.ஜ.க.விற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
9.2001ல் குஜராத்தின் முதலமைச்சர் ஆனார் மோடி.
10.1967ல் உயர் நிலைப்பள்ளி முடித்த மோடிக்கு அவர் ஆசிரியர் கொடுத்த சான்றிதழ் மோடி சராசரியாக படிக்கும் மாணவன் தான். ஆனால் விவாதங்களில் புலி.
11.பள்ளி நாடகங்களில் நடிக்கும் போதே பெரிய சரித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதில் தான் மோடிக்கு ஆர்வம்.
12.மோடிக்கு இன்ஸ்பிரேஷன் என்றால் சுவாமி விவேகானந்தர் தானாம்.
13.திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் 1978ல் பெற்றார் மோடி.
14.ஐந்து வருடங்கள் கழித்து எம்.ஏ பட்டம் அரசு இயலில்.
15.ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட நேரத்தில் குஜராத்தில் மோடி தலைமறைவாக இருந்தார்.
16.1987 குஜராத் உள்ளாட்சி தேர்தலில் மோடியின் உழைப்பில் பா.ஜ.க ஜெயித்தது.
17.1987ல் தான் குஜராத்தின் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார் மோடி.
18.குஜராத் முதலமைச்சர் கேசுபாய் படேல் உடல்நிலை சரியில்லாத போது மோடியை துணை முதல்வராக இருக்க சொல்லும் போது அதை மறுத்தார் மோடி.
19.முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன் இல்லை எந்த பொறுப்பும் வேண்டாம் என்றார் அத்வானியிடமும், வாஜ்பாயிடமும்.
20.முதலில் முதல்வராகத் தான் சட்டசபைக்குள்ளேயே நுழைந்தார் மோடி.
21.அது போலவே முதன் முதலில் பாராளுமன்றத்தில் நுழையும் போதும் பிரதமராகத்தான் நுழைந்தார்.
22.2002 கலவரங்களில் போது ஊடகங்களை தான் சரியாக கையாளாதது தான் தவறு என்று பின்னாளில் ஒப்புக் கொண்டார்.
23.குஜராத்தின் இரண்டாவது தேர்தலின் போது இந்துத்துவாவிலிருந்து விலகி பொருளாதாரத்தை கையிலெடுத்தார் மோடி.
24.காந்திநகரில் கட்டப்பட்டிருந்த 200 சட்டத்திற்கு புறம்பான கோவில்களை இடிக்க சொன்னவர் மோடி. இதனால் விஷ்வ இந்து பரிஷத்தின் கோபத்திற்கும் ஆளானார்.
25.அமெரிக்காவில் சர்வதேச மத சுதந்திரம் என்ற சட்டப் பிரிவில் விசாமறுக்கப்பட்ட ஒரே நபர் மோடி தான்.
26.2007ல் மோடி கர்மயோக் என்ற பெயரில் எழுதிய 101 பக்க புத்தகம் சுகாதர பணியாளர்களைப் பற்றியது அதில் அவர் அது ஆன்மீகப் பணி என்ற வகையில் எழுதியிருந்தார்.
27.அந்த வருட தேர்தலில் 182 சீட்களில் 122 சீட்களை வென்றது பாஜக.
28.மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் போது நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து குஜராத்தின் 1600 கி.மீ கடல் பரப்பை கண்காணிக்க அதி விரைவு படகுகளை தருவித்தார் மோடி.
29.முதல்வராக இருக்கும் போது தனியார்மயமாக்கலை ஆதரித்தவர் மோடி. இது ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கைக்கு முரணாக இருந்தாலும் அதை தைரியாமாக செய்தார்.
30.குஜராத்தில் ஊழலை பெருமளவு குறைத்தவர் என்ற பெருமையைப் பெற்றவர்.
31.2008 வரை ஒரு லட்சம் செக் டாம் என்று சொல்லப்படும் சிறு அணைகளை குஜராத்தில் கட்டப்பட்டது மோடியின் தலைமையில் தான்.
32.இதனால் 2010ல் நிலத்தடி நீரின் மட்டம் உயர, அந்த ஆண்டு பருத்தி உற்பத்தியில் சாதனை படைத்தது குஜராத்.
33.குஜராத்தின் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கொண்டு வந்ததும் மோடியின் சாதனை.
34.பருவநிலை மாற்றத்திற்காக ஒரு துறை இயங்குவது உலகிலேயே நான்காவது அரசு குஜராத் தான்.
35.மோடி கொண்டு வந்த திட்டங்கள் சுவாச் பாரத்,மேக் இன் இந்தியா, க்ளீன் கங்கா மூன்றுமே ஒரளவு வெற்றி பெற்ற திட்டங்கள்.
36.குஜராத் முதல்வராக இருந்த போது வியாபாரம் துவங்குவதற்கு ஏற்ற சூழல் விருதை இரண்டு வருடங்கள் தொடர்ந்து பெற்றார் மோடி.
37.2013ல் பொருளாதார சுதந்திரத்தில் முதலாவது மாநிலமாக இருந்தது குஜராத்.
38.குஜராத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார் மோடி.
39.மற்ற தலைவர்கள் போல மோடி பிற மத தலங்களுக்கு சென்று வழிபட்டவரில்லை.
40.2014 தேர்தலில் தான் முதன் முதலாக ஹோலோகிராம் உபயோகித்து பிரச்சாரம் செய்தார் மோடி.
41.மோடி பிரதமராக தேர்வானதும் அவர் ராஜினாமா செய்த தொகுதி மணிநகர், குஜராத்
42.மோடி பிரதமராக சந்தித்த முதல் தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியது. (தமிழகத்தை தவிர)
43.1984க்குப் பின் முதன் முதலாக மெஜாரிட்டி அரசாக தேர்ந்தெடுக்கப்பட்டது பா.ஜ.க
44.வாரணாசி மற்றும் வதோதரா தொகுதிகளில் போட்டியிட்டார் மோடி.
45.வாரணாசியில் அர்விந்த் ஜெஜ்ரிவாலை தோற்கடித்தார். வதோதராவில் காங்கிரசின் மதுசூதன் மிஸ்திரி. பின்னர் வதோதராவை இராஜினாமா செய்தார் மோடி.
46.மீண்டும் 2018ல் மோடி தான் பிரதம வேட்பாளர் என்று அறிவிக்கப்பட இந்த முறையும் அவர் தேர்ந்தெடுத்தது வாரணாசி தான்.
47.2014ல் திட்டக் கமிஷனை கலைத்தார் மோடி.இதற்கு முக்கிய காரணம் திட்டக் கமிஷனால் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட சுணக்கம் தான்.
48.முதல் மூன்று வருடத்தில் வழக்கொழிந்த 1200 சட்டங்களை நீக்க உத்தரவிட்டார் மோடி.
49.பல அரசு சாரா அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக பணம் பெறுவதை தடுத்ததும் மோடியின் நடவடிக்கையில் ஒன்று.
50.உஜ்ஜ்வாலா திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் படி அனைத்து வீடுகளுக்கும் காஸ் இணைப்பு கிடைத்தது. இரண்டாம் முறை அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு இது தான் முக்கிய காரணம் என்று சொல்லப்பட்டது.
51.2019ல் முத்தலாக் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
52. 5 ஆகஸ்ட் 2019 370 வது ஷரத்து ரத்து செய்யப்பட்டது 70 ஆண்டுகளாக செய்ய முடியாத ஒரு செயலைச் செய்த முதல் பிரதமர் என்ற பெயர் பெற்றார் மோடி.
53.காவேரி பிரச்சினையை, ஜல்லிக்கட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தவர் மோடி.
54.மோடி சைவ உணவு மட்டுமே உண்பார்.
55.அது மட்டுமல்ல குடிக்கும் பழக்கமும் இல்லை.(நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டுவரப்படாதோ?)
56.ஃபாஷன் மாடல் என்ற வகையில் மோடியின் கோட் நேருவிற்கு பின் மிகப் பிரபலம்.
57.மோடியைப் பற்றி அறிஞர்கள் கருத்து கூறும் போது சுறுசுறுப்பானவர், வசீகரிப்பவர் கொஞ்சம் திமிரானவர் என்று வர்ணிக்கிறார்கள்.
58.முதல் முறை அவரது அரசு கருத்துக் கணிப்பில் 93 சதவிகிதம் பேர் திருப்தியான அரசு என்று வாக்களித்திருந்தார்கள். இந்த ஆய்வை ஒரு தனியார் நிறுவனம் நடத்தியது.
59.டிஸ்கவரி சேனல் நடத்திய மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் பிரதமர் மோடி தான்.
60.180 நாடுகளில் ஒளிபரப்பானது இந்த நிகழ்ச்சி. உத்தராகண்ட் மாநிலத்தில் படமாக்கப்பட்டது இந்த நிகழ்ச்சி.
61.பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மோடியின் திட்டங்களில் வெற்றிகரமான ஒன்று. அனைவருக்கும் வங்கிக் கணக்கு.
62.இடைத்தரகர்களை ஒழித்து மக்களுக்கு நேரடியாக மானியங்களை அளித்தது மோடியில் செயல் திட்டங்களுள் சிறந்தது (அதிலும் தமிழகத்தில் தில்லு முல்லு செய்தது நம்மாட்களின் திறமையோ ??)
63.2016ல். லண்டனிலுள்ள மேடம் துசாட்ஸ் மெழுகு மியூசியம் மோடியின் சிலையை நிறுவியது.
64.சவூதி அரேபியாவின் உயரிய விருதை பெற்றவர் மோடி.
65.2017ல் உலகிலேயே மூன்றாவது சிறந்த தலைவர் விருதை ஜி.ஐ.ஏ. என்ற அமைப்பின் மூலமாக பெற்றார் மோடி.
66.2018 சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் என்ற பட்டத்தை ஐக்கிய நாடுகளின் சுற்றுப்புற சூழல் பட்டத்தை பெற்றார் மோடி.
67.பிப்ரவரி மாதம் பாலஸ்தீனியத்தின் உயரிய விருதான கிராண்ட் காலர் விருதையும் பெற்றார்.
68.விவேக் ஓபராய் நடித்து வெளியான நரேந்திர மோடி படத்தை தேர்தலுக்கு முன் வெளியிடக் கூடாது என்று எதிர்கட்சிகள் குரலெழுப்ப அது தேர்தலுக்கு பின் வெளியானது. (ஆனால் ஓடவில்லை)
69.மோடியின் மிக தைரியமான திட்டங்கள் பண மதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா, சி.ஏ.ஏ. குடியுரிமை சட்டம், ஓ.ஆர்.ஓ.பி என்ற இராணுவத்தில் ஒரே ராங்க் ஒரே பென்ஷன் போன்றவை. அதன் பலாபலன்கள் உடனடியாக தெரிபவை அல்ல.
70. கடைசி பாயிண்ட்……
13 ஆண்டு முதல்வர், 6 ஆண்டு பிரதமர், விடுமுறைகள் : 0. ஊழல் குற்றச்சாட்டு : 0 , வீடு. 900 சதுர அடி வீடு, (2002ல் வாங்கியது) பிற சொத்துக்கள் : 0, குடும்பத்திற்கு செய்த சலுகைகள் : 0
அவரது வெளிநாட்டு பயணங்களின் போது கேலி செய்தவர்கள் இந்தியாவிற்கு பக்கமாக நிற்கும் அயல் நாடுகளைப் பார்த்ததும் அவரது பயணத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டிருப்பார்கள்.
மோடியின் மீது ஊடகங்களுக்கு ஏன் கோபம் ???
ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்தின் போது அரசு செலவில் ஊர் சுற்றிப் பார்த்த பத்திரிகையாளர்களையெல்லாம் தவிர்த்து விட்டு தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோ நிருபர்களை மட்டுமே அழைத்துச் செல்லும் மோடி, ஊடகவியலாளர்களின் வெறுப்பை சம்பாதித்தது இயல்பே.
ராம்
Leave a comment
Upload