தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20201027095618192.jpeg


Heading : உலகம் சுற்றும் விகடகவி - துப்பாக்கி திருடிய புத்தி மான் ! ராம்.

Comment : சென்ற வார விகடகவியில் உலகம் சுற்றும் விகடகவி முதல் ஒருசில கட்டுரைகளின் நடுநடுவே பீட்ஸா, பர்கர் உள்ளிட்ட உணவு பொருள் விளம்பரங்களை ஜொள்ளு விட வைத்துவிட்டீர்கள். ஒருவேளை நான்காம் ஆண்டு சிறப்பு ட்ரீட்டாக வாசகர்களுக்கு தரப்போகிறீர்களா?

ரேணுகா ஹரிஹரன், சென்னை



Heading : வாசி யோசி - 14 - வேங்கடகிருஷ்ணன்

Comment : அடடா... மிக அருமை. வேலை குறித்து நாலு பேரிடம் கருத்து கேட்டு செய்து முடிக்கும் போது மீண்டும் பதில் கேட்டு தெரிந்து கொள்வது மிக சிறப்பு. அப்படியே நான்கு பேரோடு சேர்ந்து 4-ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விகடகவி குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.


உணவே மருந்து... - 06 - மீனாசேகர்

அப்பப்பா இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட பொன்னாங்கண்ணி கீரையை சமைக்கச் செய்யும் காலம் அதிகமானாலும் இனி தேடி வாங்கி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என நம்மைத் தூண்டுகிறது இக்கட்டுரை.

எஸ். சாய்லக்‌ஷ்மி


நான்கு வேதங்களும் அவைகளின் மகிமைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

நான்கு வேதங்களில் உள்ள சாரத்தை உண்மையை பிரிவுகளை முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது இந்த கட்டுரை. அருமையான விளக்கங்களுடன் படிப்பவர்கள் அதனை வழிமுறை செய்யுமாறு அமைந்துள்ளது. நன்றி இதை அளித்த ஆசிரியருக்கு. இவர் மேன்மேலும் இவ்விதமான பல கட்டுரைகள் எழுதி நாம் அறியாத பல தகவல்களை அள்ளி தர வேண்டுகிறேன்.

எஸ். சாய்லக்‌ஷ்மி


நான்கு வேதங்களும் அவைகளின் மகிமைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

vedhanghal writter all.nanghu migha Sirathaiyudan odappatulladu parattuthalgal Allum.!

சுப்ரமணியன்


‘பக்திப் பயணம்’ - வெ. சுப்பிரமணியன்

பயணங்கள் முடிவதில்லை.. பழைய நினைவுகளும் அழிவதில்லை.. இளவயது ரயில் பயணங்களையும்,பக்தி சுற்றுலா நினைவுகளையும் நினைத்து பார்க்க வைக்கிறது..பக்திப் பயணம் படிக்க படிக்க பஞ்சாமிர்தம் போல் இனிக்கிறது..

மீனா, கும்பகோணம்


கிரியா ஊக்கி - பதிப்புலக செம்மலுக்கு ஒரு புகழஞ்சலி - வேங்கடகிருஷ்ணன்

க்ரியா ராமகிருஷ்ணன் பற்றி தற்போதுதான் முதன்முதலில் தெரிந்து கொண்டேன். அவரது அகராதி உள்பட பல்வேறு புத்தகங்களை வாங்கி படிக்கும் ஆர்வத்தை தூண்டியது. அவரது மறைவுக்கு இரங்கல்.

சவுபர்னிகா சவுந்தரராஜன், நெல்லை


மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

ஜால்ரா அடிப்பதற்கு பின்னால் இத்தகைய சூசகங்களா? பலே... பலே... இதன்மூலம் ஒரு நல்ல விஷயம் நிறைவேற, ஜால்ரா அடிப்பதில் தப்பே இல்லை என புரியவைத்த ஜாசனே... எங்கள் குருநாதர்!

ராஜவேலு, புதுக்கோட்டை


‘பக்திப் பயணம்’ - வெ. சுப்பிரமணியன்

பயணங்கள் முடிவதில்லை, பழைய நினைவுகள் ஒருபோதும் அழிவதில்லை..இளவயது இரயில் பயணங்களையும், பக்தி சுற்றுலாக்களையும் நினைவூட்டிய பக்திப் பயணம் ஒரு இனிய அனுபவம்...

மீனா, கும்பகோணம்


நான்கு வேதங்களும் அவைகளின் மகிமைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

நான்கு வேதங்கள் பற்றி தெளிவான விளக்கங்களுடன் மிக அழகிய கட்டுரையாக வடிவமைத்து இருக்கிறார் சுந்தரசேகர். ஒவ்வொரு ஆன்மீக விஷயத்திலும் அதீத கவனம் செலுத்தி, எளிமையாக விளக்கும் அவர் 'ஆன்மீக பெட்டகம்'தான்!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


காதல் மன்னனுக்கு ஒரு கனகாபிஷேகம்..! - வேங்கடகிருஷ்ணன்

எங்களை பொறுத்தவரை காதல் மன்னன் என்பதைவிட மனிதநேய மிக்க ஜெமினி கணேசன் எனக் கூறுவது பொருந்தும். ஒருமுறை அவரது மூத்த மகளின் ஜிஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தேன். ஒரு நாள் காலை ட்ரிப்ஸ் முடிந்திருந்தது. நானும் கண்ணயர்ந்து விட்டேன். வாக்கிங் வந்த ஜெமினி கணேசன் தாதியாக மாறி, டாக்டரின் குறிப்பை படித்து ட்ரிப்ஸ் பாட்டிலை மாற்றினார். நர்ஸ் ஓடோடி வந்து ஸாரி கேட்டார். இனிமே ஜாக்கிரதையா வேலை செய்ங்க என ஜெமினி கணேசன் சிரித்தபடி வாக்கிங்கை தொடர்ந்தது நெகிழ வைத்தது.

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்


வந்தார்கள்... வென்றார்கள்... - 14 - மதன்

மதனின் வந்தார்கள் வென்றார்கள் தொடரில் ஒருவழியாக ரத்தக்களறி, ஜாலிலோ ஜிம்கானா டான்ஸ், கோமாளி துக்ளக் ஆட்சி முடிஞ்சுதா? இனியாவது டெல்லியில் உருப்படியான ஆட்சி வருமா என்ற சலிப்பை ஏற்படுத்தி விட்டனர்.

வந்தனா சீனிவாசன், ஐதராபாத்


தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்... - அம்பிகாபதி

தேசிய நெடுஞ்சாலைகளில்தான் பைக், கார் ரேஸ் ஓட்டி பார்த்திருக்கேன். இந்த பொண்ணு என்னடான்னா, மூச்சு முட்ட குடிச்சுட்டு ஃபுல் போதையில ரயில் தண்டவாளத்தில் கார் ரேஸ் ஓட்டியிருக்காளே... எதிரே ரயில் வந்திருந்தா, அந்தம்மாவுக்கு 'சங்கு'தான்!

கோதைநாயகி, சோழிங்கநல்லூர்


என்னுடன் பேசு...! - சி. கோவேந்த ராஜா.

மனிதனை பின்தொடரும் காலடி தடத்தை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை என்ற அதன் ஏக்கத்தை மிக அழகான கவிதையாக வர்ணித்தீர்கள். சபாஷ் கோவேந்தராஜா!

வசந்தி வாசுதேவன், ஈரோடு


வலைக்கள்ளன்

மனநல மருத்துவமனையில் நோயாளி ராஜகுமாரன் கதை எழுதறானேனு மேலே படிச்சா... மருத்துவரோடு சேர்ந்து எங்களையும் 'டொக்.. டொக்'னு கைவலிக்க போட்டு 'மொக்கை' ஆக்கிட்டாரே வலைகள்ளன்! உங்களை 'நிவர்' புயல் நடுக்கடலுக்கு இழுத்துட்டு போக...

சூர்யா, அனுஷச, அட்சயா, அண்ணாநகர்


வாவ் வாட்ஸப்!

எல்லா வாட்ஸ் அப் படங்களுமே ஷார்ட் அண்ட் ஸ்வீட்! குறிப்பாக வாத்து வண்டி, நீ முன்னால தம்பி, பாட்டில் படகு, தொட்டில் ஜிம்னு எல்லாரையும் உங்க பின்னாடி வரவெச்சிட்டீங்க!

கௌஷிக், தீட்சிதா, சென்னை


‘பக்திப் பயணம்’ - வெ. சுப்பிரமணியன்

பக்திப்பயணம் பரவசமூட்டுகிறது.. பழனி முருகனுக்கும் அரோகரா!! பக்தி பயண ஆசிரியருக்கும் அரோகரா!! பயணங்கள் தொடரட்டும்...

சூர்யா, சென்ன்னை


சேனல் டாக்

அட... விகடகவியாரின் 'சேனல் டாக்' செம ஹாட்டா இருக்குபா! அதான்... முதல்ல ஓப்பன் பண்ணா, செய்தி வெளிவராம மக்கர் செஞ்சிருக்கு. சென்னையில் புயல், மழைக்கு நடுவே சேனல் டாக் சூடான போண்டா மாதிரி இருந்துச்சுபா!

அன்பரசு, வேலூர்


சேனல் டாக்

சென்ற வார விகடகவியின் சேனல் டாக்கை திறந்து படிக்க முடியாததில் மிகுந்த ஏமாற்றம் அடைந்தோம். ஒருவேளை, அதில் வில்லங்கமான செய்தி ஏதேனும் இருக்குமோ? அடுத்த வாரமாவது இந்த செய்தியும் சேர்த்து போடுங்க பாஸ்!

ராதிகா பாலாஜி, மதுரை


உணவே மருந்து... - 06 - மீனாசேகர்

பொன்னாங்கண்ணி கீரையின் மகத்துவம் குறித்து சுந்தரசேகரின் ஒவ்வொரு வரிகளும் மிக ஆழமானவை. இதையடுத்து கிராமத்தில் இருந்து அந்த கீரையை வாங்கி, எங்களது வீட்டில் அதன் தண்டுகளை நட்டு வளர்க்கும் ஆர்வத்தை தூண்டியது.

சிவபெருமாள், ராஜேஷ், விருகம்பாக்கம்


ராக தேவதைகள்... - 14 - மாயவரத்தான் சந்திரசேகரன்

ஆஹா... மிக அற்புதம்! ராகதேவதை தொடரில் சஹானா ஆலாபனை சிறப்பாக இருந்தது. அதிலும், பாகனேரி பில்லப்பனின் வாசிப்பு மீண்டும் கேட்க தூண்டுகிறது. ஆனால், இதுபோன்ற உண்மையான கலைஞர்கள் இன்றும் ஏழ்மையில் வேதனை அளிக்கிறது. எனினும், அவரது சமரச பேச்சு நெகிழ்வை ஏற்படுத்தியது.

லட்சுமி நரசிம்மன், திருவெண்காடு


சூடு பிடிக்கும் தமிழக அரசியல்! மாறும் காட்சிகள்... - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

அதிமுக, பாஜ, திமுக ஆகிய முப்பெரும் கட்சிகளில் நடைபெறும் தேர்தல் களேபரங்கள் குறித்து புதுப்பட ட்ரெய்லர் போல் ஜாசன் விறுவிறுப்பான காட்சிகளாக விவரித்தது செம த்ரில்! தேர்தல் கூட்டணி , தொகுதி பங்கீடு தொடர்பான மெயின் பிக்சர் வரும்போது, இன்னும் விறுவிறுப்பு கூடும் போலிருக்கே!

கோவை ராஜசேகர், சேந்தமங்கலம்


வலையங்கம்

தங்களது கூற்று மிகச் சரியே. தமிழகத்தின் பிரதான கட்சிகள், சட்டமன்ற தேர்தல் கூட்டணியில் தேசிய கட்சிகளை புறக்கணித்தாலே இந்தி திணிப்பு குறையும். ஆனால், இங்கிருப்பவர்களால் செய்ய முடியாது. ஏன்னா, அவர்களின் குடுமி தேசிய கட்சிகளின் கைகளில் இருப்பது பாமர மக்களுக்கும் தெரியுமே!

பிரியதர்ஷன், பொள்ளாச்சி


‘பக்திப் பயணம்’ - வெ. சுப்பிரமணியன்

ஓய், இட்லி மிளகாய்ப்பொடி. போலி சித்தர், சன்னிதான தரிசனம், பஞ்சாமிர்தம், என கலக்கிய அப்பா...... சூப்பர்...

கண்ணன், பெங்களூரு


உணவே மருந்து... - 06 - மீனாசேகர்

Appreciable & Really Golden Article on these disease s. period. padappalikkum.. Thangalukkum.. aneka. Parattuthalgal.

சுப்ரமணியன்


வலைக்கள்ளன்

ஒரு பழைய கால ஜோக்.... நீங்களும் இடத்தை நிரப்பி விட்டீர்களே

எஸ். பார்கவன், அமெரிக்கா


சென்னையில் சுதந்திரப் போராட்ட தியாகி மறைவு!

mighvum sogham alikiradu..Andha Sri.Murugha Bakthar punitha SashdiThiyil Kandanin Thiruvadai adaintha Punniyaseelar.

சுப்ரமணியன்


நான்கு வேதங்களும் அவைகளின் மகிமைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

Nanghu arainthu Suvaiyagha padakkappatta vedam matter pesappadum nanrai..idhil Iyamillai....4. peral mattumalla 4000 Peral !Enghal Nalvazhthukkal.

சுப்ரமணியன்