தொடர்கள்
கவிதை
காத்திடு... காற்றே...!  - சி. கோவேந்த ராஜா.

20201027095232398.jpeg

காத்துக் காப்பாற்றிடும்...
காற்றே....,

கொடுத்துப் பழகிய... நீ...
கெடுத்துப் பார்க்கும் ...
கொடூரனாய்...மாறி விடாதே...!

நிஜக் கதாநாயகக் காற்றே...
நிவர் வில்லனாய் ஆகி விடாதே..!

வாழையினைக் காத்து...
வாழ்வினைக் கொடுத்திடு...!

தென்னம்பிள்ளைகளை...வளர்த்து...
தெம்பினைத் தந்திடு...!

காற்றே -
எங்கள் உயிரின் ஊற்று .. நீ...!
எங்கள் உயர்வின் நாற்று... நீ..!

காடும்.... மலையும்...
நாடும்... வீடும்...
உனக்குச் சொந்தம்... தான்...!

கபளீகரம் ..... செய்திடாதே...!
கலைக்கரங்களுடன்...
இயற் காற்றாய்... இருந்து...
இனிமைகளை... அமைத்திடு...!

விவேகியாய்... வழி நடத்திடு...!
விரோதியாய்.. வதைத்திடாதே...!

அயல்.. புயல்...போல்..
அழிக்க எண்ணாதே...!

செயல்.. புயல்.. போல்...
அணைத்திடு.... எங்களை...!

காற்றே...காத்திடு...!
கருணை காட்டிடு...!