தொடர்கள்
வலையங்கம்
தேர்தல் கரிசனம்

2026020705395570.jpg

கடந்த ஒரு மாதமாக நிறைய நல திட்டங்களை அறிவித்து, திராவிட மாடல் அரசின் சாதனை என்று பெருமை பேசுகிறார் முதல்வர். இது தவிர எல்லா நாளிதழ்களிலும் தனியார் தொலைக்காட்சிகளிலும் திமுக அரசின் சாதனைகளை விளம்பரமாக வெளியிட்டு அல்லது ஒளிபரப்பி பெருமை கொள்கிறார் முதல்வர். திமுகவின் சாதனைகளை அரசின் சாதனைகளாக சொல்லி விளம்பரத்துக்கு அரசாங்கத்தின் பணத்தை முதல்வர் செலவழிக்கிறார்.

ஒரு பக்கம் நல்லாட்சி செய்கிறேன் அடுத்த ஆட்சி எங்கள் ஆட்சி தான் என்று நம்பிக்கையோடு சொல்லும் முதல்வர் அரசு செலவில் இவ்வளவு விளம்பரங்கள் தருவதில் இருந்தே அவருக்கே அவர் சாதனை மீது அவநம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரிகிறது.

இது தவிர அரசு ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் உடனே அவர்கள் கோரிக்கையையும் நிறைவேற்ற அரசாணை அவசர அவசரமாக வெளியிடுகிறார் முதல்வர். தொடர்ந்து ஒரே நாளில் நல திட்டங்கள், குடியிருப்பு அடிக்கல் என்று நிறைய நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொண்டு மக்களுக்கு நன்மை செய்வது போல் தன்னை காட்டிக் கொள்கிறார். முதியோர் ஓய்வு திட்ட சலுகை, மகளிர் உரிமை தொகை சலுகை, இன்னும் பிற சலுகை எல்லாமே தேர்தலுக்காக மக்களிடம் அக்கறை காட்டுவது போல் முதல்வர் செயல்பாடு இருக்கிறதோ என்ற சந்தேகம் இப்போதே வாக்காளர்களுக்கு வரத் தொடங்கி இருக்கிறது.