தொடர்கள்
கதை
கரண்ட் இல்லையே டீச்சர்! - முனைவர் என் பத்ரி

20260207000711468.jpg

அன்று திங்கட்கிழமை காலை. கவிதா அந்த பிரபல பள்ளியின் ஓர் ஆங்கில ஆசிரியை. பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு உள்ளே சென்றார்.

வழக்கம்போல் மாணவர்களின் வீட்டுப்பாடங்களை பரிசோதித்தார். அதே மாணவன்.அவளுக்கு தினமும் சவாலாக இருக்கும் குறும்புக்கார மகேஷ் வந்து நின்றான்

’ஏன்டா ஹோம் ஒர்க் செய்யல? என்று கேட்டார் கவிதா.

’வீட்டில் கரண்ட் இல்லை’ என்றான் குப்புசாமி.

’மெழுகுவர்த்தியையோ விளக்கையோ வச்சு செய்யலாலாமில்ல’ என்றாள் கவிதா.

அதற்கு மகேஷ், ’அதை ஏற்றுவதற்கு மெழுகுவர்த்தி பூஜையில் இருந்தது’ என்றான்

’ பூஜை அறைக்கு சென்று தீப்பெட்டியை எடுத்து வந்து ஏற்றிச் செய்வது தானே?’இது டீச்சர்.

‘குளிக்காமல் எப்படி பூஜை அறைக்குள் போவது டீச்சர்?’ என்றாள்.

’குளிப்பதற்கு என்ன?’என்று கேட்டார் டீச்சர்

மகேஷ்,’குளிப்பதற்கு தண்ணீர் இல்லையே டீச்சர்’ என்றான் அப்பாவித்தனமாக.

’ஏண்டா தண்ணீர் இல்லை? என்ற டீச்சரிடம்

’மேல் தொட்டியில் தண்ணீர் இல்லை’ என்றான்.

’மேல் தொட்டியில் மோட்டார் போட்டு தண்ணீர் ஏற்ற வேண்டியது தானே?’ என்றடீச்சரிடம்,’அதான் கரண்ட் இல்லை’ என்று சொன்னேனே டீச்சர் என்றான்

’ ஏண்டா உங்க வீட்டுக்கு பக்கத்து தெருவில்தானே நான் இருக்கேன். எங்க வீட்டுல மட்டும்கரண்ட் இருக்குது. உங்க வீட்டுல இல்ல.இது எப்படிடா? என்றார் டீச்சர்.

‘நீங்க கரண்டு பில்லை கட்டி இருப்பீங்க. எங்க அப்பா இன்னும் கரண்ட் பில்லைகட்டவில்லையே. அதனால் கரண்ட் இல்ல டீச்சர். அதனால நான் ஹோம் ஒர்க் பண்ணமுடியல. எத்தனை தடவை சொன்னாலும் இதைக் கூட புரிஞ்சுக்கவே மாட்டீங்களா? என்றஅலுத்துக் கொண்டு தரையில் அமர்ந்து அழத் தொடங்கினான் மகேஷ்.

கவிதா ஸ்கூல்ல படிக்கும்போது இறந்து போன தாத்தாவை எத்தனை முறைஇறந்ததாகச் சொல்லி லீவு எடுத்திருக்கிறாள்.நினைத்துப் பார்த்தாள். சிரிப்பை அடக்கமுடியவில்லை.

மகேஷைப் பார்த்து சிரித்துக் கொண்டே,’இன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு போவதற்குமுன்னாடி ஸ்கூல்லயே உன்னோட வீட்டுப்பாடத்தை எழுதி முடித்து விடு’என்றாள்.

’முருகன்தான் உதவிப் பண்ணனும்.அவன் கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்.’

’ஓ! உனக்கு அவ்வளவு கடவுள் பக்தியா?’என்றாள் அவனுடைய பக்கத்து சீட் பையன் முருகன் என்பதை அறியாமல். முருகன்தான் ஸ்கூலுக்கு புதுசு ஆச்சே!இது டீச்சருக்கு இன்னும்தெரியல.

உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே முருகனருகில் போய் அமர்ந்தான் மகேஷ்.