தமிழக சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் .

தனக்கு எதிராக இரண்டு பெரிய கட்சி சதி செய்கிறது என்று தஞ்சையில் விஜய் பேசினார்.

கூட்டம் வரும்… வோட்டு வராது …! என்ற சொல்லை விஜய் வரும் தேர்தலில் தவிடு பொடியாக்கி காட்டுவாரா என்பது பில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என்று விமர்சித்த நடிகர் ஜோசப் விஜய் தற்போது பிரதான கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது.

வேதாளத்தை தன் தோளில் சுமந்த விக்ரமாதித்தன் அம்புலிமாமா கதையாக மீண்டும் திமுக -காங்கிரஸ் கூட்டணி அமைந்துவிட்டது.

பட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவைக்கு வேட்பாளராகி விட்டார், தந்தை ராமதாஸ் தனது செயலாளர் வேட்பாளராக்கி இருக்கிறார், ஒரே உறையில் இரண்டு கத்தி என்று விமர்சர்கள் சொல்கிறார்கள்.

கனிமொழி திமுக வின் தேர்தல் அறிக்கை வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஹைலைட்டாக இருக்கும் சொல்கிறார்.
தமிழகத்தில் தற்போது நான்கு நாட்களாக வெயில் 100 F தாண்டி கொளுத்தி வருகிறது , சட்டமன்ற தேர்தலின் போது அரசியல்வாதிகள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்று இப்போதே பேசி வருகிறார்கள்.

திமுக வேட்பாளர்கள் விருப்ப மனு கன ஜருராக நடந்து கொண்டிருக்கிறது. புழல் பகுதி செயலாளர் நாராயணன் திருமண ஊர்வலம் போல் தனது தொகுதி மக்களுடன் வந்து மனு தாக்கல் செய்தது ஹைலைட்டாக இருந்தது.
அதிமுக ஜெயக்குமார் நடிகர் விஜய் பத்திரிக்கையாளர் பேட்டி நேரடியாக தரவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.

திமுக , அதிமுக, சீமான், விஜய் என தமிழகத்தில் நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் பணம் கொடுப்பதை எப்படி தடுப்பது என்று தேர்தல் ஆணையம் யோசித்துகொண்டு இருக்கிறது.
திருவாளர் பொதுஜனம் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்து கண்டு கொள்ளாமல் விட்டமின் ப எவ்வளவு கொடுப்பார்கள் என்ற கனவில் மிதந்து வருகின்றனர்.
2026 ஒரு அதிசய தேர்தலாக இருக்கும் என்பதே நிஜம்!.

Leave a comment
Upload