ஊட்டி திரு காந்தல் முக்கோணம் பகுதியில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருகோயில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து உலகத்தில் எவருமே இது வரை செய்யாத மிக பெரிய காவடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கடந்த வாரம் மார்ச் 1 ஆம் தேதி தைப்பூச திருவிழா அன்று இந்த சாதனை நடைபெற்றது.

இந்த சாதனையை செய்து முடித்தவர்கள் பிரசாத், சுந்தர் மற்றும் ஆனந்த்.
இவர்களின் முயற்சியால் கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு உலக சாதனையை எட்டியுள்ளது.
பழைய மைசூர் சாலையில் வீற்றிருக்கும் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.

திப்பு சுல்தான் இந்த கோயிலுக்கு விஜயம் செய்ததாக கூறப்படுகிறது.
திப்பு குகைகள் வழியாக புலியின் மேல் படுத்து வந்ததாக கூறுகிறார்கள்.
இது ஒரு பக்கமிருக்க அந்த காலத்தில் மைசூரில் இருந்து ஊட்டி வருபவர்களுக்கு சத்திரமாகவும் இந்த கோயில் திகழ்ந்துள்ளது.
மைசூர் மகாராஜா இந்த வழியாக மைசூரில் இருந்து ஊட்டியில் உள்ள மைசூர் அரண்மனைக்கு செல்லும் போது இந்த கோயிலுக்கு விஜயம் செய்ததாக கூறப்படுகிறது.
ஊட்டி காந்தல் தெய்வீக விழா குழு உறுப்பினர்கள் ஸ்ரீ மற்றும் பிரசாத்திடம் பேசினோம்,

“ காந்தல் பகுதியில் மிக பழமையான பிரசித்தி பெற்ற கோயில் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயில் வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது கடந்த 2003 முதல் நம் குழு இந்த கோயிலை பராமரித்து வருகிறோம்.
அரசின் இந்து அறக்கட்டளையின் கீழ் செயல் பட்டுவருகிறது.
ஊட்டி பகுதியில் உள்ள கோயில்களில் மிக பழமையான கோயில் இது.

ஒரு வசம்பு வனத்தில் உருவான கோயில். முருகர் சுப்ரமணியர் அமர்ந்த கோலத்தில் வீற்றிருப்பது இங்கு தான் .
நமக்கு தெரிந்து தமிழ்நாட்டில் எங்கும் இப்படி முருகரை பார்க்கமுடியாது .

அரசு கட்டுப்பாட்டில் இருந்தாலும் எங்கள் குழுவுக்கு ஒரு இடத்தை ஒதுக்கி கடந்த மூன்று வருடமாக தை பூசம் திருவிழாவை சிறப்பித்து வருகிறோம்.
இந்த வருடம் மிக சிறப்பாக குழந்தைகளுக்கு என்று 53 காவடி செய்தோம் நாங்கள் அறியாமலே எங்க நண்பர்கள் பிரசாத்,ஆனந்த் மற்றும் சுந்தர் இணைந்து உலக அரங்கில் இந்த கோயில் இடம்பெற மிக பெரிய காவடி செய்து சாதனை புரிந்துள்ளனர்”.
பிரசாத் கூறும்போது ,” கடல் மட்டதில் இருந்து 7000 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் முருகர் இவர் தான் என்பது சிறப்பான ஒன்று.
நீலகிரியில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சுப்ரமணியர் முருகர் கோயிலை பிரபல படுத்த உலகத்தில் எங்குமே செய்யாத மிக பெரிய காவடியை செய்து சாதனை படைத்துள்ளோம்.

காவடி 51 அடி நீளம் 42 அடி உயரம் 4 அடி அகலம் செய்து வைத்து ரியல் வேர்ல்ட் ரெக்கார்டில் இடம் பெற விண்ணப்பித்து அவர்கள் நேரில் ஆய்வு செய்து ‘Real world record’ புக்கில் இடம்பெற்று சான்றிதழ் 1 ஆம் தேதி தை பூசம் அன்று வழங்கியுள்ளனர்.

இந்து அறநிலைய துறை உதவியுடன் அடுத்து கின்னஸ் சாதனையை எட்டி பிடிக்கும் இந்த அற்புத கோயில் “ என்கிறார்கள்
ஸ்ரீ சுப்ரமணி சுவாமி கோயில் குருக்கள் வேலு கூறும்போது.

“இந்த கோவில் பழம்பெரும் கோயில் இங்கு மட்டும்தான் முருகர் அமர்ந்த கோலத்தில் அருள் புரிகிறார். நம் இளைஞர்கள் தை பூச திருநாளை சிறப்பித்து உலக சாதனைக்கு என்று பெரிய காவடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது முருகப்பெருமானின் அருளால் “.

கோயிலின் சிறப்பு அம்சம் ஸ்ரீ சக்கரம் அமைக்கப்பட்டு அதன் மேல் முருக பெருமான் அமர்ந்த கோலத்தில் வீற்றிருப்பது மற்றும் பாம்பாட்டி சித்தர் அவரின் சீடர்களின் சமாதி அமைந்துள்ளது.

இந்த மறைவான பழம்பெரும் கோயில் பெரிய காவடி சாதனையால் உலக அரங்கை ஈர்த்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.

Leave a comment
Upload