தொடர்கள்
பொது
ஈகோ யுத்தம் –கண்ணாழ்வார்

20260206165905995.jpeg

20260206165748649.jpeg

நன்றி: தினமணி

அமெரிக்கா –இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது எதிர்பாராத நேரத்தில் போர் தொடங்கியது.

வல்லரசு நாடான அமெரிக்க போர் ஒரிரு நாட்களில் முடிவுக்கு வந்துவிடும் என்ற தவறான கணக்கினை போட்டு இப்போது சிக்கலில் இருக்கிறது.

மேற்கு ஆசிய நாடுகள் கிட்டதட்ட போர் பதட்டத்தில் உறைந்து போயுள்ளது.

அமெரிக்காவின் பிரமாண்ட போர் கப்பல் ஆப்ரகான் லிங்கன் ஈரானிய ஏவுகனைகள் தாக்கப்பட்டு சேதம் உண்டானது என்ற தகவலை அமெரிக்க ராணுவம் மறுத்துள்ளது.

2026020617003432.jpeg

ஈரான் மீது அமெரிக்கா போரால் எவ்வளவு செலவு என்று ராணுவ தலைமயகம் பெண்டகன் அறிவித்துள்ளது.

ஈரான் மீது போர் தொடுத்த 24 மணி நேரத்திற்கு மட்டும் 779 மில்லியன் அமெரிக்க டாலர் ( ரூ 7,166 கோடி ) செலவு ஆகியது.

ஈரான் தாக்குதல் முன்புக்கு ராணுவ முன்னேற்பாடுகள் மற்றும் கடற்படை கப்பல்கள் பணியில் ஈடுபடுத்துதல் 630 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ5,796 கோடி) செலவு ஆகியது.

2026020617030678.jpeg

அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் ஜெரால்டு போர்டு இயக்குவதற்கு ஒரு நாளுக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் ( ரூ60 கோடி) செலவு ஆகியுள்ளது.

அமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட் 1 ட்ரில்லியன் டாலர்கள்( ரூ 92 லட்சம் கோடி ).

அமெரிக்காவின் தற்போதைய திருகுவலியே போதிய ஆயுதம் போரிட கையிருப்பு இல்லை என்பது தான்.

இதனால் எந்த நாட்டின் மீது படையெடுத்தாலும் நீண்ட போரினை அமெரிக்க தொடர முடியாது என்பது தான் தற்போதைய அமெரிக்க வெள்ளை மாளிகை பேச்சாக உள்ளது.

போர் தளவாடங்களை சோப்பு ,சீப்பு போன்று தினமும் தயாரிக்க முடியாது என்பது அமெரிக்காவின் பாதுகாப்பு மையம் சொல்கிறது.

அமெரிக்காவின் உளவு மையம் தகவல்கள் , அறிவுரைகள் எல்லாம் ட்ரம்ப் கேட்பதில்லை , இதனால் அமெரிக்கர்களுக்கு உலக அளவில் பிரச்சனைகள் உருவாகியுள்ளது என்ற சலசலப்பும் அங்கே நிலவுகிறது.

அமெரிக்காவின் பொருளாதாரம் கிட்டதட்ட இந்த போரினால் பெரும் பாதிப்பு வரலாம் என்ற நிலையுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கிறது.

இதனால் ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்பது அமெரிக்கர்களின் நம்பிக்கையாக உள்ளது.

ஈரான் ட்ரோன் தாக்குதல்களை சமாளிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உக்கிரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவியை கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஈரான் இடையே புதிய வகையான போர் என்றே சொல்ல வேண்டும்.

செயற்கைகோள் படங்கள், மனித உளவாளிகள்,ஹேக் செய்யப்பட்ட கேமராக்கள் , ஏவுகணைகள் என ஒரு புள்ளியில் இணைக்கப்பட்டு ஈரானின் பலமான பாதுகாப்பு அமைப்பினை அமெரிக்க சிதைத்துள்ளது .

அமெரிக்காவின் ஏவுகணைகள் தனது மற்ற நட்பு நாடுகளுக்கு கொடுத்தாலும் இன்னும் 10 நாட்களுக்கு தான் போர் புரியும் வகையில் பேட்ரியட் ஏவுகணைகள் இருப்பு இருப்பதாக தகவல் வருகிறது.

20260206170650416.jpeg

கிட்டதட்ட சீனா ,ரஷ்யா போன்ற நாடுகள் அடுத்து என்ன செய்யும் என்பது தான் தற்போதைய பில்லியன் டாலர் கேள்வி .

இது அமெரிக்க -ஈரான் இடையே நடக்கும் ஈகோ -போர் .