
கடந்த வாரத்தில் சனிக்கிழமை துபாய் வந்து இறங்கிய பயணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உலகின் மிக பிசியான துபாய் விமான நிலையம் மூடப்பட்டது.
காரணம் அனைவரும் அறிந்த போர்.
வெள்ளிக்கிழமை பாரீசிலிருந்து ஏற்றி விட்ட நண்பர் மிகச் சரியாக சனிக்கிழமை காலை முதல் துபாயில் மாட்டிக் கொண்டார்.
வரிசை வரிசையாக நிற்க வைத்து முகம் தெரியாத ஆட்களுடன் மூன்று பேருக்கு ஒரு ரூம் என்ற வகையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
( ரூம் வாங்க நின்ற கியூ.....)
உடனேயே துபாய் அரசு களத்தில் இறங்கி எமிரேட்சுடன் அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக செய்தது என்பது என்னவோ செய்தி. ஆரம்பத்தில் எமிரேட்ஸ் சர்வீஸ் அசாத்தியம் என்று புளகாங்கிதம் அடைந்தவர்களுக்கு.....போகப் போக எமிரேட்சின் சாயம் வெளுக்கத் துவங்கியது.
விமானம் இன்று இரவு புறப்படும் என்று ஹோட்டலை காலி செய்து கொண்டு விமான நிலயம் வரவழைத்து அன்றைய விமானம் ரத்து என்று சொல்லி அடுத்த நாள் அடுத்த நாள் என்று அலைக்கழிக்கத் துவங்கியது எமிரேட்ஸ்.
இன்னமும் விமான நிலையம் முழுவதுமாக அனைவரையும் திருப்பி அனுப்பி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.
நேற்று இரவு கூட விமானம் ஏறப் போனவர்களை திடீரென சைரன் அடித்து உடனடியாக ஒளிந்து கொள்ளச் செய்து ஒன்றரை மணி நேரம் கழித்தே வெளியே வரவழைக்கப்பட்டனர்.

அனைத்து போன்களிலும் சைரன் அடிக்க, எல்லோரும் போய் கீழ்தளத்தில் அமரவைக்கப்பட்டு, அதற்கு பின் இப்படி ஒரு செய்தி வந்தது.
இது எமிரேட்சும், துபாய் அரசும் கொடுக்கும் விடுமுறையல்ல.
பயணிகள் குதூகலிப்பதற்கு.
அக்மார்க் புளி கரைக்கும் விஷயம்.
துபாயில் மாட்டிக் கொண்டவர்களுக்கு கூட இந்த வேதனை உறைப்பதில்லை. ஆனால் அவர்களின் வரவுக்காக காத்திருக்கும் சொந்த பந்தங்களுக்குத் தான் பிரச்சினையே.
போரின் தாக்கங்கள் அரசுகளுக்கல்ல. சாதாரண மக்களுக்குத் தான்.
இந்த நிமிடம் உலக விமான கட்டணங்கள் ஏறிக் கொண்டிருக்கிறது.
கப்பல் சரக்குக் கட்டணமும் தான்.
யாரோ முகமறியாத தலைவர்களின் அதிகார மோதல் அப்பாவி மக்களை திக்கு முக்காட வைத்திருக்கிறது.
போர் என்றால், வியாதி என்றால், மதம் என்றால், வியாபாரம் என்று வியாக்கியானம் எல்லாம் நன்றாகத்தான் பேசுகிறார்கள்.
இன்றைய தேதியில் வாட்சப் போராளிகளின் தொல்லை வேறு ஏகத்திற்கு சூழ்ந்திருக்கிறது.
விரைவில் இந்த போர் சனியன் ஓய்வுக்கு வர வேண்டும்.
மூன்றாம்.... சொல்லவே தயக்கமாக இருக்கிறது. வேண்டவே வேண்டாம்.

Leave a comment
Upload