
ராதிகா சரத்குமார் நடிப்பில் சிவக்குமார், முருகேசன் இயக்கத்தில் வெளியாகி இருக்கிறது தாய் கிழவி திரைப்படம். நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இருக்கிறார்.
ஆண்பாவம் பொல்லாதது திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருந்த சிவகுமார் முருகேசனுக்கு இந்தப் படம் மூலம் இயக்குனர் பதவி உயர்வு கிடைத்திருக்கிறது.
படத்தின் கதை இதுதான். கருமாத்தூர் என்னும் கிராமத்தில் பவுனுத்தாயி என்கின்ற மூதாட்டி (ராதிகா சரத்குமார்) வாழ்கிறார். அவரது தொழில் வட்டிக்கு கடன் கொடுப்பது, கடனை வசூலிப்பதில் அவரது கடுமையான வார்த்தைகள் காரணமாக கிராம மக்கள் அவரை வெறுக்கிறார்கள். அல்லது அவரைப் பார்த்து பயப்படுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவருக்கு மூன்று மகன்கள் (அருள்தாஸ், சிங்கம் புலி, பால சரவணன்) மற்றும் ஒரு பெண் (ரேச்சல் ரெபெக்கா ).ஊர் மக்களுக்கு பவுனுத்தாயை எப்படி பிடிக்காதோ அதேபோல் மகள் மகன் மருமகளுக்கும் அவரை பிடிக்காது. காரணம் சொத்தில் மகன்களுக்கு பங்கு இல்லை ஏற்கனவே பவுனு தாயி சொல்லிவிட்டார் என்பதுதான்.
திடீரென பவுனுத்தாய்க்கு உடல்நல குறைவு ஏற்படுகிறது .எப்போது வேண்டுமானாலும் மரணம் நிகழும் என்ற தகவலை குமார் என்பவர் மூலம் (இளவரசு) தெரிகிறது. கூடவே அவர் இன்னொரு சுவாரசியமான தகவலையும் சொல்கிறார். அவர் ரகசியமாக 160 சவரன் தங்க நகைகளை சேமித்து ஒரு இடத்தில் பத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார். ஆனால், எங்கே என்று அவருக்கு சொல்லத் தெரியவில்லை. முதலில் அம்மா செத்தால் நல்லது என்று நினைத்த வாரிசுகள் அம்மாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். தங்கள் தாயை அவர்களால் காப்பாற்ற முடிந்ததா, தங்கம் அவர்களுக்கு கிடைத்ததா என்பதே படத்தின் கதை.

தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர்கள் இப்போதெல்லாம் தங்களது தனித்துவமான திரைக்கதை மூலம் ரசிகர்களை ஈர்ப்பதுடன் தயாரிப்பாளருக்கும் லாபத்தை ஈட்டி தருகிறார்கள். முதல் மூன்று நாளிலேயே தாய்க்கிழவி 23 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இன்று வரை வெற்றிகரமாக திரையரங்கில் கொட்டகை நிறைந்த காட்சிகளாக இருக்கிறது.
இது ஒரு அட்வைஸ் செய்யும் படம் போல் இல்லாமல் பெண்ணுரிமை பெண்களின் பொருளாதார சுதந்திரம், சுய அதிகாரம் போன்றவற்றை தாய் கிழவி மூலம் இயக்குனர் பேச வைத்திருக்கிறார்.
இதேபோல் பல்லாங்குழி மூலம் சேமிப்பு குறித்து ராதிகா சொல்லும் விளக்கம் ஒரு பெண்ணின் பொருளாதார சார்பு எவ்வளவு முக்கியம் என்பதையும், ஒரு பெண் தன் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்காக உழைத்து விட்டு இறுதியில் தனக்கென எதுவும் சேமிக்காமல் போவதால் ஏற்படும் விளைவுகளையும் பல்லாங்குழி மூலம் இயக்குனரின் விளக்கம் அற்புதம். அதை அழகாக நடித்துக் காட்டிய தாய் கிழவி ராதிகாவுக்கு பாராட்டுக்கள்.
இதேபோல் வட்டி வசூல் கடனில் கரார் காட்டும் பவுனுதாயி ஒரு பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம் எது என்று குறிப்பிட்டு பேசும் வசனங்கள் திரையரங்கில் ரசிகர்களை கட்டி போடுகிறது. சினிமா தனமாக இல்லாமல் ஒரு தெளிவான தீர்வை நோக்கி திரைக்கதையை நகர்த்திருக்கிறார் இயக்குனர்.
ராதிகாவும் தான் ஒரு பெண் எம் ஆர் ராதா என்று இந்த படத்தின் மூலம் அழுத்தமாக தன்னுடைய கேரீர் பெஸ்ட் என அசத்தி விட்டார்.
தாய் கிழவியை எல்லோருக்கும் பிடிக்கும்.

Leave a comment
Upload