தொடர்கள்
விளையாட்டு
சஞ்சு சாம்சன் சொல்லும் பாடம் - லண்டன் கோமதி

2026020706160858.jpg

விடாமுயற்சியும், தன்னபிக்கையும் கொண்டு செயல்பட்டால் எந்த உயரத்தையும் அடையலாம் என்பதற்கு சஞ்சு சம்சோனின் கிரிக்கெட் பயணம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. கேரளா கிரிக்கெட் அணிக்கு விளையாடி தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த இவர், U-19 விளையாட்டிலும் தன்னுடைய முத்திரை பதித்தவர். IPL விளையாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவராகவும் பரிமளித்தவர். இருந்தும் உலக அரங்கில் அவர் தனது திறனை வெளிக்காட்ட முடியாதது குறையாகவே இருந்து வந்தது. இவரது திறனை நன்கு அறிந்த அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்றோர் சஞ்சு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். சில வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றாலும், அவை அனைத்தும் சஞ்சு சாம்ஸன்க்கு சாதகமாக அமையவில்லை.

20260207061632749.jpg

இந்த டி20 உலகக்கோப்பை தொடர் நிச்சயமாக சஞ்சு சாம்சனுக்கு சாதகமாக அமைந்ததோடு மட்டுமின்றி, அவரது நிதானமான ஆட்டத்தையும் வெளிக்கொணர்ந்துள்ளது. உலகக்கோப்பையில் விளையாடும் எந்த ஒரு வீரருக்கும் திறமை மட்டும் போதுமானதாக அமையாது. ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏற்படும் அழுத்தம், அதைக் கையாளும் பக்குவம், எதிரணியின் பலம், பலவீனம், தனது நிறை குறை இவை அனைத்தையும் அறிந்து அதற்கேற்றவாறு சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே உலக அரங்கில் மிளிர முடியும். சஞ்சு, தான் விளையாடிய இரு போட்டிகளில் எப்படிப்பட்ட திறமைசாலி என்பதை தனது நிதானமான மற்றும் நேர்த்தியான ஆட்டம் மூலம் நிரூபித்துள்ளார்.

20260207061719665.jpg

தனது அணுகுமுறை பற்றி கூறும் பொழுது, "நான் மீண்டும் கிரிக்கெட்டின் அடிப்படையிலிருந்து ஆட்டத்தை கற்க துவங்கினேன். எந்த ஒரு கவனச் சிதறலுக்கும் இடம் கொடுக்காமல் கிரிக்கெட் ஒன்றையே நோக்காகக் கொண்டு செயல்பட்டேன். சமூக ஊடகத்திலிருந்து விடுபட்டு, கிரிக்கெட் விளையாட்டு மற்றும் அதன் பயிற்சி ஒன்றையே மூச்சாகக் கொண்டு செயல்பட்டேன்" என்றும் கூறியிருந்தார். இது எந்தத் துறையில் சாதிக்க நினைக்கும் நபருக்கும் பொருந்தும்.

2026020706190647.jpg

சதம் அடிப்பதை மயிரிழையில் தப்ப விட்ட நம்முடைய சேட்டன், இறுதி ஆட்டத்தில் அதை நிறைவேற்றி, மெய்வருத்த கூலி தரும் என்பதை நிரூபிப்பார் என நம்புவோம்.