தொடர்கள்
அனுபவம்
வாவ் அங்கோர் வாட் - 2 ராம்

20260207002831784.jpeg

அங்கோர் வாட் எழுத முடியாமல் போனதற்கு சென்ற வாரம் போர் துவங்கியதும் ஒரு காரணம். (கம்பி கட்டற கதையெல்லாம் சொல்றான் பாருங்க...)

முதலில் பார்க்க வேண்டியது அங்கோர்வாட்டில் சூர்யோதயம். மேலே உட்கார்ந்திருக்கும் கூட்டம் காலை ஐந்து மணி முதலே அமர்ந்து இடம் போட்டு காத்திருக்கிறது.

20260207002850941.jpeg

சூரியன் கிழக்கே உதித்தாலும், ஆகச் சரியாக ஒரே இடத்தில் உதிப்பதில்லை என்பது நமக்கு தெரியும். வடகிழக்கு முதல் தென்கிழக்கு வரை போக்கு காட்டித் தான் எழுகிறான். சரியாக மார்ச் மாதத்தில் சில நாட்களில் மட்டுமே சரியாக கோபுரத்தின் மீது சூரியன் எழுவானாம்.

அன்று அங்கோர்வாட்டில் கூட்டம் இன்னமும் அலை மோதுமாம்.

அங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கையில், சூரியன் எத்தனை லட்சம் உதயங்களை எத்தனை கோடி மனிதர்களுக்கு காட்டியபடி இருக்கிறான், அங்கோர்வாட்டின் அத்தனை சரித்திரங்களும் தெரிந்த ஓரே ஆள் நான் தான் என்று மார்தட்டி எழுவது போல தோன்றுகிறது.

நவம்பர் முதல் மார்ச் வரை சூர்யோதயம் பார்க்க சிறந்த சீசன் என்கிறார்கள். அது என்ன அத்தனை பெரிய விஷயமா என்றால் அங்கோர்வாட்டில் சன் ரைஸ் பார்க்கவென்றே பக்கட் லிஸ்ட் வைத்துக் கொண்டு டூரிஸ்ட் கூட்டம் வருகிறது.

அங்குலம் அங்குலமாக இருளிலிருந்து வெளிவரும் சூர்ய வெளிச்சம் அங்கோர்வாட்டின் அற்புதம்.

20260207052054631.jpg

(இத்தனை நேர்கோட்டில் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. வலைதளத்தில் உள்ள படம்)

20260207002910677.jpeg

அத்தனை வேலைப்பாடுகள் கொண்ட மதில்கள் அங்கோர்வாட்டை சுற்றிலும். இத்தனை பெரிய கோவிலை எப்படி பல ஆண்டுகளாக புதர் மண்ட விட்டார்கள் என்று சரித்திரத்தை அறியும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.

2026020700293159.jpeg

சூர்யவர்மன் இவருக்காகத்தான் கட்டியிருக்கிறார் இந்த கோவிலை. விஷ்ணுவின் சிலை. பிரதான இடத்திலிருந்து பெயர்த்து எடுத்து வாசலில் வைத்திருக்கிறார்கள். அப்போ உள்ளே ?? அந்த இடத்தை புத்தர் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

விஷ்ணுவை தூக்கி வெளியே வைத்து விட்டு உள்ளே நின்று கொண்டிருக்கும் புத்தர்.

20260207050729770.jpeg

மனிதர்களின் மதத்தனத்தால், மன்னிக்கவும், மடத்தனத்தால் சூர்யவர்மனுக்கோ, புத்தருக்கோ, விஷ்ணுவிற்கோ லாபமோ நட்டமோ ஏதுமில்லை என்று புரிகிறது.

சரித்திர சான்றுகளை அழிக்க முற்பட்ட புத்த மத மன்னர்களையும், அதையும் 20ம் நூற்றாண்டில் வந்த நாத்தீக கூட்டத்தினர் அடித்து உடைத்ததையும் தான் அங்கோர்வாட் பறைசாற்றுகிறது.

கோவில் என்று சொல்கிறோமே தவிர இங்கு ஏதும் கோவிலுக்கான பிரார்த்தனைகள் நடைபெறுவதாக தெரியவில்லை.

20260207003030359.jpeg

அங்கோர்வாட்டின் வெளிப்புறத் தோற்றம்.

20260207003052402.jpeg

மஹாபாரதம், இராமாயணம் கதைகளை கல்வெட்டுக்களாக வடித்திருக்கிறார்கள். நல்ல வேளையாக இதையெல்லாம் அழிக்காமல் விட்டது சரித்திரத்தின் மிச்சம்.

20260207051242721.jpeg

நல்ல வேளையாக அங்கோர்வாட்டிற்குள் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்று கட்டுப்பாடு ஏதும் இல்லை.

20260207051342327.jpeg

நவதுவாரங்களிலிருந்து புகை வரும் வெயில் மட்டும் இல்லையென்றால் அங்கோர்வாட்டை அணுஅணுவாக ரசிக்கலாம்.

ஆனால் வெயில் கொடுமை அதிலும் நண்பகலில் அங்கோர்வாட்டை சுற்றிக் காட்டி நம் கைடு போரே விளக்குகையில், கண்ணை கட்டுகிறது.....

அடுத்த வாரம்....