
கடந்த வாரத்தில் ,பிரதமர் மோடி தனது பக்தியை வெளிகாட்டும் விதமாக வேல் எடுத்து முருக பெருமானை வணங்கினார்.அப்போது திருபரங்குன்றத்தில் பேசிய பிரதமர் மோடி ..தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தலில் தங்களது கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஒரு விஷயம் உண்மை. பிரதமரின் பக்தி அல்லது பக்தியின் வெளிப்பாடு தேர்தல் சமயத்தில் மட்டும் வருவதல்ல. அது உண்மையான பக்தி.

திமுக கதை வேறு.
அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் அறநிலைய துறையின் சார்பாக 2024 ஆண்டு திமுக நடத்தியது.
உலகில் உள்ள முருக பக்தர்கள் முருகனின் பெருமையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கமாக இருந்தது.
1982-ல் திமுக தலைவர் கருணாநிதி மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு வேல் யாத்திரை மேற்கொண்டார். இதுப்போல் இப்போது திமுக தனது ஆட்சியில் முருகர் மாநாடு நடத்தி வேல் மையப்படுத்தியது.

விஜய் தனது பங்குக்கு முருகனின் வேல் பிடித்து கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
திமுக மற்றும் பிஜேபி என இரண்டு ஜாம்பவன் கட்சிகள் முருகனின் வேல் பிடித்து வேல்…வேல் என்று கோஷம் எழப்பினாலும் அடுத்து தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது முருக பெருமானுக்கு மட்டுமே தெரியும்.
'வேலை'ப் பிடிப்பதை விட மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று யாருக்கும் தோன்றாமல் இருப்பது தான் வேதனை என்று புலம்புகிறது பொதுஜனம்.

Leave a comment
Upload