தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20260207060404653.jpeg

திமுகவும், அதிமுகவும் என்னைக் கண்டு அஞ்சுகின்றன- விஜய்.

ஆனா நீங்க மீடியாவ பாத்தா அஞ்சுகிறீர்களே ???

ஈரான் மீதான போருக்காக அமெரிக்காவின் ஒரு நாள் செலவு 58 கோடி - டிரம்ப் தகவல்.

இதற்காக ஏதாவது தனியா வரி போடுவரோ ?

பாஜகவை எதிர்த்து பேசவே விஜய் பயப்படுகிறார் டி.கே.எஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு.

நீங்க என்ன உசுப்பேத்தினாலும் அது மட்டும் நடக்காது !!

காங்கிரசுக்கு 28 தொகுதிகள், ஒரு மேல் சபை எம்பி பதவி திமுக அறிவிப்பு.

அந்த 28 பேர் யாருன்னு அவங்களுக்குள்ள அடிச்சுப்பாங்க !!

38 லட்சம் பேருக்கு 2000 சிறப்பு நிதி முதல்வர் அறிவிப்பு.

இதை காரணம் காட்டி ஓட்டுக்கு பணம் தராமல் இருந்திட போறாங்க , வாக்காளர் கவலை.

திமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் காங்கிரசார் சட்டமன்றத்துக்கு வர முடியும் அமைச்சர் ரகுபதி.

அவங்க தந்த டார்ச்சர் பார்த்து சட்டசபைக்கு வர முடியாமல் பண்ற வேலையை செய்யப் போறீங்க அப்படித்தானே அமைச்சர்.

ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என தேர்தல் வாக்குறுதியில் சேர்க்க வேண்டும் அரசியல் கட்சிகளுக்கு அறப்போர் இயக்கம் வலியுறுத்தல்.

ஓட்டு போட யாரும் வர மாட்டாங்க பரவாயில்லையா !!

திமுகவைப் பார்த்து காப்பி அடியுங்கள் பாஸ் ஆகிவிடலாம் கமலஹாசன்.

இதுதான் சேர்க்கை சரியில்லை என்று சொல்வது !!

எங்கள் அணியில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கும் எடப்பாடி பழனிச்சாமி.

அமித் ஷா பர்மிஷன் தந்துட்டாரா !!

திமுக கூட்டணியின் வலிமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது உதயநிதி ஸ்டாலின்.

ஆனால் விஜய் அண்ணன் தான் கொடுக்க மாட்டேன் என்கிறார் !!

அதிகாரத்தில் பங்கு என்பதில் உறுதியாக இருக்கிறோம் தொல் திருமாவளவன்.

எங்க இத ஒருவாட்டி போய் தைரியமா அறிவாலயத்தில் போய் சொல்லிப் பாருங்கள் ?

எடப்பாடி பழனிச்சாமி அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். இந்த சந்திப்பு எதற்காக என்பது அவர்கள் இருவருக்கும் தான் தெரியும் தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.

எப்படியும் நாளைக்கு விஷயம் பேப்பர்ல வரும் அப்ப நீங்க தெரிஞ்சுக்கலாம் !!

ஊழல் செய்வதில் அமைச்சர்களுக்கு இடையே போட்டி பிரதமர் மோடி, திமுக மீது சாடல்.

யார் அதிக ஊழல் பண்ணினார்கள் என்பது அமலாக்கத்துறை வந்தால் தெரிய போகுது !!