
ரைசா வில்சன்
இரண்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஃபேண்டஸி திரில்லர் படத்தில் நடிக்கிறார் ரைசா வில்சன்.

சப்தமி கவுடா
"நாங்கள் எங்கள் கலையை மக்களிடம் கொண்டு செல்ல மேடையில் நிற்கிறோம். ஆனால் எங்கள் உடலை முன்னிலைப்படுத்தும் வகையில் கேமரா கோணங்கள் அமைப்பது அவமானம் .இது போன்ற அநாகரிக செயல்களை இனி சகித்துக் கொள்ள மாட்டோம் "என்கிறார் நடிகை சப்தமி கவுடா.

நிதி அகர்வால்
"என்னையே என்னால் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன் .அந்த நிலையை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன். எனவே சரியான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளேன் "என்கிறார் நடிகை நிதி அகர்வால்.

பூஜா ஹெக்டே
சமீப காலமாக நடிகை பூஜா ஹெக்டே 'ரோலக்ஸ் டேட் ஜஸ்ட் 41 ' என்ற வாட்சை பொது நிகழ்ச்சிகளில் கட்டிக் கொள்கிறார். இதன் விலை 21 லட்சம் ரூபாய்.

ஐஸ்வர்யா
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்து கொண்ட நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, சீதா பயணம் என்ற படத்தில் நடித்ததை அடுத்து மேலும் ஒரு படத்தில் ஹீரோயினியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனால், கணவர் உமாபதி இனி சினிமா வேண்டாம் என்று அவருக்கு அழுத்தம் தர தொடங்கி இருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா அதை கண்டு கொள்வதில்லை.

தனுஷ்
இளையராஜா வாழ்க்கை வரலாறு அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு ஆகிய இரண்டு படங்களிலும் 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார் நடிகர் தனுஷ்.

சூர்யா
சூர்யா தற்சமயம் நடித்து வரும் 46-வது படத்திற்கு 'விஸ்வநாத் சன்ஸ்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சூர்யாவுடன் மமீதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டான்டன்,பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராதிகா சரத்குமார்
'ஒரு முறை சிரஞ்சீவி வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் ஒரு தோசை சுட்டுக் கொடுத்தார். அவர் செய்யும் தோசை மல்லி பூ போன்றது. நாம் எவ்வளவு மாவு கலந்தாலும் அந்த சுவை கிடைக்காது. அது போன்ற தோசை நான் எங்கும் சாப்பிட்டதில்லை 'என்கிறார் ராதிகா சரத்குமார்

மானசா வாரணாசி
அறிமுக இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர் இயக்கத்தில் காதலர் தினத்தன்று வெளியான படம் கப்புள்ஃபிரெண்ட்லி.இந்தப் படத்தில் நடித்த மானசா வாரணாசியின் நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். நடிகை சாய் பல்லவியின் தீவிர ரசிகையாம்.

காயடு லோஹர்
சாய் அபயங்கர் அடுத்ததாக இசையமைக்கவுள்ள புதிய ஆல்பம் பாடலில் காயடுலோஹர் நடிக்க இருக்கிறார்.

பிரியாமணி
செலெக்ட்டிவ்வான படங்களில் நடித்து வரும் நடிகை பிரியாமணி தற்போது இந்தியில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.

மீனாட்சி சவுத்ரி
கல்யாண் சங்கர் இயக்கத்தில் புதிய படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். இவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

பகத் பாசில்
"பார்வையாளர்கள் என்னை திரையில் பார்த்து சலித்து விட்டால் சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவேன். அதன் பிறகு பார்சிலோனா நாட்டிற்கு சென்று மகிழ்ச்சியாக வாடகை கார் ஓட்டுவேன் "என்கிறார் பகத் பாசில்.

நடிகை கல்யாணி பிரியதர்ஷன்
"லோகா இரண்டாம் பாகத்துக்கான கதை எழுதி வருகிறார்கள் .வரும் செப்டம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்கும். அந்தப் படத்தில் எனக்கு ஒரு முக்கிய வேடம் உள்ளது"என்கிறார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.

தீபிகா படுகோன்
"சினிமாவில் நான் நுழைந்த காலத்தில் எனது நிறத்தால் நான் அதிக அளவில் விமர்சனம் செய்யப்பட்டேன். எனது போட்டோவை பார்த்து சில இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என்னை நிராகரித்தார்கள். சிலர் நான் ஆண் போல் தோற்றம் அளிப்பதாக சொன்னார்கள் "என்கிறார் நடிகை தீபிகா படுகோன்.
கிராமப்புற கதைகள்
'கருப்பு' படத்தில் சூர்யா 'கர' என்ற படத்தில் தனுஷ் மற்றும் 'சேயோன் ' படத்தில் சிவக்கார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கிராமப்புற கதைகளை நோக்கி செல்வது கவனம் பெற்றுள்ளது.

Leave a comment
Upload